எஸ். விசாலாட்சி
- விசாலாட்சி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: விசாலாட்சி (பெயர் பட்டியல்)
To read the article in English: S. Visalakshi.
எஸ். விசாலாட்சி (20-ம் நூற்றாண்டின் தொடக்க காலம்) தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் ஒருவர். இதழாசிரியர். மொழிபெயர்ப்பாளர். சிறுகதைகள் பல எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
திருவாரூர் மாவட்டம், தேரழுந்தூரில், சுந்தரம் - மீனாட்சி தம்பதியருக்குப் பிறந்தார். பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சங்கு சுப்ரமணியத்தின் சகோதரி எஸ். விசாலாட்சி. தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் என பன்மொழி அறிந்தவர். இவரைப்பற்றிய பிற விவரங்கள் கிடைக்கவில்லை.
இலக்கிய வாழ்க்கை
'மங்கை’ இதழை எழுத்தாளர் குகப்பிரியைக்குப் பின் பொறுப்பேற்று நடத்தியவர். கீழ்ப்பாக்கத்திலிருந்து செயல்பட்ட பழைய குங்குமம் இதழுக்கு ஆசிரியராக இருந்தார். ’அல்போன்ஸோ டாடே’ ப்ரெஞ்சில் எழுதிய சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்தார். 'மண்கூஜா’; 'செல்லக்குழந்தை’ முதலிய சிறுகதைகளை 'சக்தி' இதழில் எழுதினார். மணிக்கொடி, ஜகன்மோகினி, மங்கை இதழ்களில் இவரது சிறுகதைகள், கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
நூல்கள்
- அல்போன்ஸோ டாடே (மொழிபெயர்ப்பு)
சிறுகதைகள்
- மண்கூஜா
- செல்லக்குழந்தை
உசாத்துணை
- "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:38:03 IST