தண்டியலங்காரம்: Difference between revisions
No edit summary |
|||
Line 88: | Line 88: | ||
| | | | ||
|- | |- | ||
|[[அதிசய அணி]] | |[[உயர்வு நவிற்சியணி|அதிசய அணி]] | ||
|சிலேடை அணி | |சிலேடை அணி | ||
| | | |
Revision as of 18:25, 11 May 2024
தமிழில் ஐவகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றில் அணி இலக்கணத்தை விளக்கி எழுந்த நூல் தண்டியலங்காரம். இந்நூலின் ஆசிரியர் தண்டி என்பவராவார். இஃது உரைதருநூல்களில் ஒன்று. இலக்கணம் இயற்றிய ஆசிரியரே இலக்கணத்துக்கு உரை மேற்கோள்களாகத் தாமே பாடல்களையும் இயற்றி உரையுடன் இணைத்துள்ளார். தமிழ்த் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலமாகும் (946-1070)
தொல்காப்பியத்தை அடுத்து அணி இலக்கணம் பயிலப் பெரிதும் பயன்படுவது தண்டியலங்காரம் ஆகும். இது தொல்காப்பியத்தையும், வடமொழி காவியா தரிசத்தையும் அடியொற்றி எழுதப்பட்டது. இக்கருத்தை,
பன்னிரு புலவரில் முன்னவன் பகர்ந்த
தொல்காப் பியநெறி பல்காப் பியத்தும்
அணிபெறும் இலக்கணம் அரிதினில் தெரிந்து
வடநூல் வழிமுறை மரபினில் வழாது
எனவரும் தண்டியலங்காரச் சிறப்புப் பாயிரத்தால் அறியலாம்.
ஆசிரியர்
வடமொழியில் உள்ள அணி இலக்கண நூலாகிய காவியாதரிசம் என்பதன் ஆசிரியர் தண்டி என்பவராவார். தமிழிலுள்ள தண்டியலங்கார அணி இலக்கண நூலின் ஆசிரியர் பெயரும் தண்டி என்றே காணப்படுகிறது. இப்பெயர், இவரது இயற்பெயரா? வடமொழி ஆசிரியர் மீது கொண்ட அன்பால் தாமே வைத்துக் கொண்ட புனைபெயரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தண்டியலங்காரச் சிறப்புப்பாயிரம், இவரைக் கவிச் சக்கரவர்த்தி கம்பரின் பெயரன்; அம்பிகாபதியின் மகன்; வடமொழி, தென் மொழிகளில் வல்லவர்; சோழநாட்டினர் எனச் சுட்டுகின்றது. நூலில் காணப்படும் சோழன் பெயரில் அமைந்த எடுத்துக்காட்டு வெண்பாக்களான 45 பாடல்களில் அனபாயன் என்னும் பெயரைக் குறிப்பிடுபவை 6 பாடல்களாகும். அனபாயன் என்னும் பெயர், பொ.யு. 12-ம் நூற்றாண்டில் அரசுபுரிந்த இரண்டாம் குலோத்துங்க சோழனைக் குறிப்பதாகும். இந்நூல் அனபாயன் அவையில் அரங்கேற்றப் பட்டது எனவும் சிறப்புப்பாயிரம் குறிப்பிடுகின்றது.
அமைப்பு
தண்டியலங்காரம் பொதுவணியியல், பொருள்அணியியல், சொல்லணியியல் என மூன்று பிரிவுகளை உடையது. தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பல்வேறு அணி வகைகளுக்கான இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.
தண்டியலங்காரத்தில் அணிகளின் வகைகள் அனைத்திற்கும் எடுத்துக்காட்டு வெண்பாக்களும் இடம்பெறுகின்றன. இதிலுள்ள நூற்பாக்கள் ‘நூற்பா’ யாப்பில் அமைந்தவை.
- பொதுவியல் (25 நூற்பாக்கள்)-செய்யுள் வகைகளையும், செய்யுள் நெறிகளையும் பற்றி விவரிக்கின்றது.
- பொருளணியியல்(64 நூற்பாக்கள்)-தன்மை அணி முதல் பாவிக அணி வரையில் உள்ள முப்பத்தைந்து பொருள் அணிகளை விளக்குகின்றது.
- சொல்லணியியல் (35 நூற்பாக்கள்)-மடக்கு அணி, சித்திரக்கவி என்னும் இரண்டு சொல்லணிகளைப் பற்றி எடுத்துரைக்கிறது. வழு, மலைவு பற்றிய கருத்துகளும் சொல்லணியியலில் இடம் பெற்றுள்ளன.
பொதுவியல்
பொதுவியல்,
- முத்தகச் செய்யுள்,
- குளகச் செய்யுள்,
- தொகைநிலைச் செய்யுள் (8 வகைப்படும்)
- தொடர்நிலைச் செய்யுள் (2 வகைப்படும்)* சொல் தொடர்நிலைச் செய்யுள் * பொருள் தொடர்நிலைச் செய்யுள்
எனும் நான்கு வகையான செய்யுள்கள் பற்றி விளக்குகிறது. தொடர்நிலைச் செய்யுள் வகை பற்றிக் கூறும்போது அதன் வகைகளான பெருங்காப்பியம், காப்பியம் என்பவற்றின் இலக்கணங்கள் பற்றி இந்நூல் விளக்குகின்றது.
பொருளணியியல்
பொருளணியியலில் 37 அணிகளுக்கான இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
அணிகள்
தன்மை நவிற்சி அணி | இலேச அணி | ||
உவமையணி | நிரல் நிரையணி | ||
உருவக அணி | ஆர்வமொழியணி | ||
தீவக அணி | சுவையணி | ||
பின்வருநிலையணி | தன்மேம்பாட்டணி | ||
முன்னவிலக்கணி | பரியாய அணி | ||
வேற்றுப்பொருள் வைப்பணி | சமாகித அணி | ||
வேற்றுமையணி | உதாத்த அணி | ||
விபாவனை அணி | அவநுதி அணி | ||
ஒட்டணி (பிறிது மொழிதல் அணி) | மயக்க அணி | ||
அதிசய அணி | சிலேடை அணி | ||
தற்குறிப்பேற்றணி | விசேட அணி | ||
ஏதுவணி | ஒப்புவமைக் கூட்டவணி | ||
நுட்ப அணி | ஒழித்துக் காட்டணி |
சொல்லணியியல்
சொல்லணியியலில் மடக்கு, சித்திரகவி, வழுக்களின் வகைகள்ஆகியவற்றின் இலக்கணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
தண்டியலங்கார உரையும் பதிப்பும்
தண்டியலங்காரத்திற்குப் பழைய உரைஒன்று சுப்பிரமணிய தேசிகரால் இயற்றப்பட்டது. இதனை அடியொற்றியே பிற உரைகளும் பதிப்புகளும் தோன்றின. பொ.யு. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தி.ஈ.சீனிவாச ராகவாச்சாரியார், தண்டியலங்காரக் கருத்துகளைத் தொகுத்து, 'தண்டியலங்கார சாரம்’ என்னும் வசன உரைநடை நூலை எழுதியுள்ளார்.இவை இந்நூலின் தனிச்சிறப்புகளாகும்.
வை.மு. சடகோப ராமாநுஜாச்சாரியார் உரை | - பொ.யு. 1901 | |
இராமலிங்கத் தம்பிரான் குறிப்புரை - கழகம் | - பொ.யு. 1938 | |
சி.செகந்நாதாச்சாரியார் (சொல்லணி) உரை | - பொ.யு. 1962 | |
புலவர் கு. சுந்தரமூர்த்தி (பாடபேத உரை) | - பொ.யு. 1967 | |
புலியூர்க் கேசிகன் எளிய உரை | - பொ.யு. 1989 | |
வ.த. இராம சுப்பிரமணியம் உரை | - பொ.யு. 1998 |
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.