under review

பாரதி மகாகவியா விவாதம்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected year suffix text; ; Added info on Finalised date)
 
(One intermediate revision by one other user not shown)
Line 2: Line 2:


==தொடக்கம் ==
==தொடக்கம் ==
1935ல் காரைக்குடியில் பாரதிவிழாவில் பேசிய [[வ.ராமசாமி ஐயங்கார்]] 'பாரதியாரின் கவிதை வரி ஒன்றுக்கு ஷேக்ஸ்பியரோ ஷெல்லியோ ஈடாக மாட்டார்கள் என்று பேசினார். அதை அவருடன் பயணம் செய்த ந.ராமரத்தினம் மணிக்கொடி இதழில் எழுதினார்.  பாரதியாரை மகாகவி என்று வ.ரா குறிப்பிட்டு வந்தார்.
1935ல் காரைக்குடியில் பாரதி விழாவில் பேசிய [[வ.ராமசாமி ஐயங்கார்]] 'பாரதியாரின் கவிதை வரி ஒன்றுக்கு ஷேக்ஸ்பியரோ ஷெல்லியோ ஈடாக மாட்டார்கள்' என்று பேசினார். அதை அவருடன் பயணம் செய்த ந. ராமரத்தினம் [[மணிக்கொடி (இதழ்)|மணிக்கொடி]] இதழில் எழுதினார்.  பாரதியாரை மகாகவி என்று வ.ரா குறிப்பிட்டு வந்தார்.


[[டி.கே.சிதம்பரநாத முதலியார்]] முன்னெடுத்த செவ்வியல் ரசனைமரபைச் சார்ந்தவரான [[பி.ஸ்ரீ. ஆச்சார்யா]] 1935 செப்டெம்பரில் தினமணி வெளியிட்ட பாரதி மலர் இதழில் நெல்லை நேசன் என்ற பெயரில் இதற்கு மறுப்பு எழுதினார். வீரமுரசு என்னும் அக்கட்டுரையில் பாரதியார் தேசியகவியே ஒழிய மகாகவி அல்ல என்று சொன்னார். அதற்கு [[ந. பிச்சமூர்த்தி]], [[கு.ப. ராஜகோபாலன்]] ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து தினமணியில் எழுதினார்கள். இவ்வாறாக இவ்விவாதம் தொடங்கியது.
[[டி.கே.சிதம்பரநாத முதலியார்]] முன்னெடுத்த செவ்வியல் ரசனை மரபைச் சார்ந்தவரான [[பி.ஸ்ரீ. ஆச்சார்யா]] 1935 செப்டெம்பரில் தினமணி வெளியிட்ட பாரதி மலர் இதழில் நெல்லை நேசன் என்ற பெயரில் இதற்கு மறுப்பு எழுதினார். வீரமுரசு என்னும் அக்கட்டுரையில் பாரதியார் தேசியகவியே ஒழிய மகாகவி அல்ல என்று சொன்னார். அதற்கு [[ந. பிச்சமூர்த்தி]], [[கு.ப. ராஜகோபாலன்]] ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து தினமணியில் எழுதினார்கள். இவ்வாறாக இவ்விவாதம் தொடங்கியது.


== விவாதம் ==
== விவாதம் ==
Line 12: Line 12:
* 7 டிசம்பர் 1935 சுதேசமித்திரனில் அதற்கு கல்கி பதிலளித்தார். பாரதியின் வள்ளிப்பாட்டு போன்றவை விரசமானவை என கல்கி எழுதினார்.  
* 7 டிசம்பர் 1935 சுதேசமித்திரனில் அதற்கு கல்கி பதிலளித்தார். பாரதியின் வள்ளிப்பாட்டு போன்றவை விரசமானவை என கல்கி எழுதினார்.  
* 15 டிசம்பர் 1935 சுதேசமித்திரன் இதழில் வ.ரா பதிலளித்தார்.
* 15 டிசம்பர் 1935 சுதேசமித்திரன் இதழில் வ.ரா பதிலளித்தார்.
* 11 டிசம்பர் 1935 தினமணி இதழில்  [[சிட்டி]] பம்பாய் ஸ்டேண்டேட் என்னும் ஆங்கில இதழில் இதைப்பற்றி எழுதிய கட்டுரையை தமிழாக்கம் செய்துவெளியிட்டார்.  
* 11 டிசம்பர் 1935 தினமணி இதழில்  [[சிட்டி]] பம்பாய் ஸ்டேண்டேட் என்னும் ஆங்கில இதழில் இதைப்பற்றி எழுதிய கட்டுரையை தமிழாக்கம் செய்து வெளியிட்டார்.
* 12 டிசம்பர் 1935 இதழில் இன்னொரு கட்டுரையையும் சிட்டி எழுதினார். ஆங்கில இலக்கிய விமர்சன மரபை தான் கற்றறிந்துள்ளதாகச் சொன்ன சிட்டி கல்கி முதலியோர் நவீன ஆங்கில இலக்கிய விமர்சன மரபில் வாசிப்பின்மையால்தான் பாரதியை புரிந்துகொள்ள முடியவில்லை என்று அக்கட்டுரையில் குறிப்பிட்டார்.
* 12 டிசம்பர் 1935 இதழில் இன்னொரு கட்டுரையையும் சிட்டி எழுதினார். ஆங்கில இலக்கிய விமர்சன மரபை தான் கற்றறிந்துள்ளதாகச் சொன்ன சிட்டி, கல்கி முதலியோர் நவீன ஆங்கில இலக்கிய விமர்சன மரபில் வாசிப்பின்மையால்தான் பாரதியை புரிந்துகொள்ள முடியவில்லை என்று அக்கட்டுரையில் குறிப்பிட்டார்.
* 13 டிசம்பர் 1936 தினமணி இதழில் [[பி.எஸ். ராமையா]] கல்கியை கோழை என வசைபாடி ஒரு கட்டுரையை எழுதினார். புதுமைப்பித்தனும் புனைபெயரில் கல்கியை கடுமையாக வசைபாடி எழுதினார்.  
* 13 டிசம்பர் 1936 தினமணி இதழில் [[பி.எஸ். ராமையா]] கல்கியை கோழை என வசைபாடி ஒரு கட்டுரையை எழுதினார். புதுமைப்பித்தனும் புனைபெயரில் கல்கியை கடுமையாக வசைபாடி எழுதினார்.  
* 21 டிசம்பர் 1935 தினமணியில் சிட்டி விரிவான இன்னொரு கட்டுரையை எழுதினார்.  
* 21 டிசம்பர் 1935 தினமணியில் சிட்டி விரிவான இன்னொரு கட்டுரையை எழுதினார்.  
Line 22: Line 22:


== கண்ணன் என் கவி ==
== கண்ணன் என் கவி ==
பாரதி மகாகவி என்னும் தரப்பைச் சேர்ந்த கட்டுரைகளை தொகுத்து கு.ப. ராஜகோபாலனும் சிட்டியும் இணைந்து [[கண்ணன் என் கவி]] என்னும் நூலாக 1937ல் வெளியிட்டனர்.அந்த விவாதம் அத்துடன் அடங்கியது.
பாரதி மகாகவி என்னும் தரப்பைச் சேர்ந்த கட்டுரைகளை தொகுத்து கு.ப. ராஜகோபாலனும் சிட்டியும் இணைந்து [[கண்ணன் என் கவி]] என்னும் நூலாக 1937ல் வெளியிட்டனர். அந்த விவாதம் அத்துடன் அடங்கியது.


== நீட்சி ==
== நீட்சி ==
1937ல் கண்ணன் என் கவி என்னும் தலைப்பில் பாரதி மகாகவியா என்னும் விவாதம் தொகுக்கப்பட்டது, அந்நூலை தொடர்ந்து அதைப்பற்றி மேலும் விவாதம் உருவாகும் என்றும், இலக்கியக் கோட்பாட்டுத்தளத்தில் முன்னகர்வு நிகழும் என்றும் அதை எழுதியவர்கள் எண்ணினர். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. அந்நூலுக்கு 1982ல் பாரதி நூற்றாண்டு வரை மறுபதிப்பு கூட வரவில்லை. ஆனால் அந்நூல் பாரதி மகாகவியே என தமிழ்ச்சமூகம் ஏற்கவைப்பதில் வெற்றிபெற்றது.
1937-ல் கண்ணன் என் கவி என்னும் தலைப்பில் பாரதி மகாகவியா என்னும் விவாதம் தொகுக்கப்பட்டது. அந்நூலைத் தொடர்ந்து அதைப்பற்றி மேலும் விவாதம் உருவாகும் என்றும், இலக்கியக் கோட்பாட்டுத்தளத்தில் முன்னகர்வு நிகழும் என்றும் அதை எழுதியவர்கள் எண்ணினர். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. அந்நூலுக்கு 1982-ல் பாரதி நூற்றாண்டு வரை மறுபதிப்பு கூட வரவில்லை. ஆனால் அந்நூல் பாரதி மகாகவியே என தமிழ்ச்சமூகம் ஏற்கவைப்பதில் வெற்றி பெற்றது.


======ஏற்பு======
======ஏற்பு======


* 1936ல் ஶ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம் 6 ஆம் இதழில் [[பாரதிதாசன்]] 'பாரதியார் நாமம் வாழ்க' என்னும் நீள்கவிதையை எழுதி பாரதி மகாகவியே என வாதிட்டார்.
* 1936ல் ஶ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம் 6 ஆம் இதழில் [[பாரதிதாசன்]] 'பாரதியார் நாமம் வாழ்க' என்னும் நீள்கவிதையை எழுதி பாரதி மகாகவியே என வாதிட்டார்.
* 1944ல் பாரதி மகாகவியா என்னும் விவாதம் எழுந்த பின்னர் வ.ரா பாரதியின் வாழ்க்கை வரலாற்றை மகாகவி பாரதியார் என்னும் தலைப்பில் எழுதினார், சக்தி காரியாலயம் அதை வெளியிட்டது.
* 1944-ல் பாரதி மகாகவியா என்னும் விவாதம் எழுந்த பின்னர் வ.ரா பாரதியின் வாழ்க்கை வரலாற்றை மகாகவி பாரதியார் என்னும் தலைப்பில் எழுதினார், சக்தி காரியாலயம் அதை வெளியிட்டது.
* 1947ல் பாரதிக்கு தன் சொற்பொழிவுகள் வழியாக முற்போக்கு இலக்கியச் சூழலில் மதிப்பை உருவாக்கிய [[ப. ஜீவானந்தம்]] பாரதி மகாகவியே என்னும் தரப்பை ஏற்றவர். அவர் எழுதிய பாரதி வழி என்னும் நூல் வெளிவந்தது.
* 1947ல் பாரதிக்கு தன் சொற்பொழிவுகள் வழியாக முற்போக்கு இலக்கியச் சூழலில் மதிப்பை உருவாக்கிய [[ப. ஜீவானந்தம்]] பாரதி மகாகவியே என்னும் தரப்பை ஏற்றவர். அவர் எழுதிய பாரதி வழி என்னும் நூல் வெளிவந்தது.
* 1948 ல்  [[அண்ணாத்துரை]] [[பாரதிதாசன்|பாரதிதாச]]னுடன் இணைந்து மகாகவி பாரதியார் என்னும் நூலை எழுதினார். அந்நூலில் உள்ள பாரதி பாதை என்னும் கட்டுரை 1947ல் பாரதி மணிமண்டபம் திறப்பை ஒட்டி அண்ணாத்துரை எழுதியது. அந்நூல் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிட இயக்கம் சார்ந்த சூழலில் பாரதியார் ஒரு பிராமணக்கவிஞர், ஆரிய ஆதரவாளர் என்னும் உளப்பதிவு இருந்த காலகட்டத்தில் இந்நூல் அந்தத் தரப்பினருக்கும் பாரதியை ஏற்புடையவர் ஆக்கியது.
* 1948 ல்  [[அண்ணாத்துரை]] [[பாரதிதாசன்|பாரதிதாச]]னுடன் இணைந்து மகாகவி பாரதியார் என்னும் நூலை எழுதினார். அந்நூலில் உள்ள பாரதி பாதை என்னும் கட்டுரை 1947ல் பாரதி மணிமண்டபம் திறப்பை ஒட்டி அண்ணாத்துரை எழுதியது. அந்நூல் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிட இயக்கம் சார்ந்த சூழலில் பாரதியார் ஒரு பிராமணக் கவிஞர், ஆரிய ஆதரவாளர் என்னும் உளப்பதிவு இருந்த காலகட்டத்தில் இந்நூல் அந்தத் தரப்பினருக்கும் பாரதியை ஏற்புடையவர் ஆக்கியது.
* 1949ல் [[எஸ். வையாபுரிப் பிள்ளை]] எழுதிய தமிழ்ச்சுடர் மணிகள் என்னும் நூலில் தமிழின் பெருங்கவிஞர்களான கம்பர், வள்ளுவர் ஆகியோருடன் பாரதியையும் சேர்த்து பாரதி தமிழின் மகாகவியே என எழுதியிருந்தார்.
* 1949ல் [[எஸ். வையாபுரிப் பிள்ளை]] எழுதிய தமிழ்ச்சுடர் மணிகள் என்னும் நூலில் தமிழின் பெருங்கவிஞர்களான கம்பர், வள்ளுவர் ஆகியோருடன் பாரதியையும் சேர்த்து பாரதி தமிழின் மகாகவியே என எழுதியிருந்தார்.
* 1982ல் [[ந. சுப்புரெட்டியார்]] கண்ணன் என் கவி நூலின் கருத்தை ஒட்டியே கண்ணன் பாட்டுத்திறன் என்னும் நூலை வெளியிட்டார். பாரதி நூற்றாண்டு 1982ல் வந்ததை ஒட்டி பாரதி மகாகவியே என்னும் நோக்கில் எழுதப்பட்ட மேலும் பல நூல்கள் வெளிவந்தன.
* 1982ல் [[ந. சுப்புரெட்டியார்]] கண்ணன் என் கவி நூலின் கருத்தை ஒட்டியே கண்ணன் பாட்டுத்திறன் என்னும் நூலை வெளியிட்டார். பாரதி நூற்றாண்டு 1982ல் வந்ததை ஒட்டி பாரதி மகாகவியே என்னும் நோக்கில் எழுதப்பட்ட மேலும் பல நூல்கள் வெளிவந்தன.
* 1982 ல் [[கார்த்திகேசு சிவத்தம்பி]] - [[அ. மார்க்ஸ்]] இணைந்து எழுதிய 'பாரதி - மறைவு முதல் மகாகவி வரை' என்ற நூல்  பாரதி மகாகவியா என்னும் விவாதத்தையும், அதன்பின் உருவான மாற்றங்களையும் விரிவாக மதிப்பிடுகிறது.
* 1982ல் [[கார்த்திகேசு சிவத்தம்பி]] - [[அ. மார்க்ஸ்]] இணைந்து எழுதிய 'பாரதி - மறைவு முதல் மகாகவி வரை' என்ற நூல்  பாரதி மகாகவியா என்னும் விவாதத்தையும், அதன்பின் உருவான மாற்றங்களையும் விரிவாக மதிப்பிடுகிறது.
* 2000 த்தில் [[ஞானி]] பாரதி மகாகவியே என்னும் கோணத்தில் எழுதிய பாரதியின் கவித்துவம் என்னும் நூல் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது.
* 2000த்தில் [[ஞானி]] பாரதி மகாகவியே என்னும் கோணத்தில் எழுதிய பாரதியின் கவித்துவம் என்னும் நூல் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது.
======மறுப்பு======
======மறுப்பு======
நவீன இலக்கியச் சூழலில் பாரதியின் கவிதைகளின் இடம் மறுபரிசீலனைக்கு உள்ளாகியது.
நவீன இலக்கியச் சூழலில் பாரதியின் கவிதைகளின் இடம் மறுபரிசீலனைக்கு உள்ளாகியது.
* 1958 ல்  [[க.நா.சுப்ரமணியம்]] கவிதைகள் குறித்த விவாதத்தில் பாரதியின் மழை போன்ற சில கவிதைகளைக் குறிப்பிட்டு அக்கவிதைகளுக்கு நிகரான நல்ல கவிதைகளை அவர் அதிகமும் எழுதிவிடவில்லை என்றும், பெரும்பாலானவை இசைப்பாடல்களும் தோத்திரப்பாடல்களுமே என்று கருத்துரைத்தார்.
* 1958 ல்  [[க.நா.சுப்ரமணியம்]] கவிதைகள் குறித்த விவாதத்தில் பாரதியின் மழை போன்ற சில கவிதைகளைக் குறிப்பிட்டு அக்கவிதைகளுக்கு நிகரான நல்ல கவிதைகளை அவர் அதிகமும் எழுதிவிடவில்லை என்றும், பெரும்பாலானவை இசைப்பாடல்களும் தோத்திரப்பாடல்களுமே என்று கருத்துரைத்தார்.
* 1958ல் சுந்தர ராமசாமி எழுதிய நான் காணும் பாரதி என்னும் கட்டுரையில் பாரதியின் கவிதைகளின் இடத்தை மறுத்து, பாரதியின் பங்களிப்பு தமிழ் உரைநடையை உருவாக்கியதிலேயே அவருடைய முதன்மைப் பங்களிப்பு உள்ளது என்றார்.
* 1958-ல் சுந்தர ராமசாமி எழுதிய நான் காணும் பாரதி என்னும் கட்டுரையில் பாரதியின் கவிதைகளின் இடத்தை மறுத்து, பாரதியின் பங்களிப்பு தமிழ் உரைநடையை உருவாக்கியதிலேயே அவருடைய முதன்மைப் பங்களிப்பு உள்ளது என்றார்.
* 2011 ல் [[ஜெயமோகன்]] மகாகவி என்னும் அடையாளம் ஒரு பண்பாட்டின் முகமாகத் திகழும் பெருங்கவிஞர்களுக்குரியது என்றும், [[பாலைபாடிய பெருங்கடுங்கோ]] , [[கபிலர்]], [[இளங்கோவடிகள்|இளங்கோ]], [[கம்பர்]], [[நம்மாழ்வார்]] போன்றவர்களே தமிழின் மகாகவிகள் என்று சொல்லப்படமுடியும் என்றும் குறிப்பிட ,அதை ஒட்டி விவாதம் உருவாகியது. அதற்கு [[ஜடாயு]], [[எம்.டி. முத்துக்குமாரசாமி]], [[நரசய்யா]] போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து எழுதினார்கள்.
* 2011 ல் [[ஜெயமோகன்]] மகாகவி என்னும் அடையாளம் ஒரு பண்பாட்டின் முகமாகத் திகழும் பெருங்கவிஞர்களுக்குரியது என்றும், [[பாலைபாடிய பெருங்கடுங்கோ]], [[கபிலர்]], [[இளங்கோவடிகள்|இளங்கோ]], [[கம்பர்]], [[நம்மாழ்வார்]] போன்றவர்களே தமிழின் மகாகவிகள் என்று சொல்லப்படமுடியும் என்றும் குறிப்பிட, அதை ஒட்டி விவாதம் உருவாகியது. அதற்கு [[ஜடாயு]], [[எம்.டி. முத்துக்குமாரசாமி]], [[நரசய்யா]] போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து எழுதினார்கள்.


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
Line 59: Line 59:
*[https://www.jeyamohan.in/22089/ மகாகவி விவாதம் ஜெயமோகன்]
*[https://www.jeyamohan.in/22089/ மகாகவி விவாதம் ஜெயமோகன்]
*[https://www.jeyamohan.in/21489/ மகாகவி விவாதம் தொடர்ச்சி ஜெயமோகன்]
*[https://www.jeyamohan.in/21489/ மகாகவி விவாதம் தொடர்ச்சி ஜெயமோகன்]
{{Finalised}}
{{Fndt|09-Aug-2025, 16:33:38 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:விவாதம்]]

Latest revision as of 03:44, 10 August 2025

பாரதி மகாகவியா விவாதம் (1935-1937) சி.சுப்ரமணிய பாரதி மகாகவி அல்ல என்ற மறுப்பும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்களும். பாரதியை ஒரு தேசியகவி என்றோ, வேதாந்தகவி என்றோதான் சொல்லமுடியும் என்றும், அவர் ஒரு மகாகவி அல்ல என்றும் சொல்லப்பட்ட கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் உருவான விவாதம். இதில் பி.ஶ்ரீ.ஆச்சார்யா, கல்கி ஆகியோர் பாரதி மகாகவி அல்ல என்று வாதிட்டனர். மகாகவியே என்று வ.ரா, சிட்டி, கு.ப.ராஜகோபாலன் போன்றவர்கள் வாதிட்டனர்.

தொடக்கம்

1935ல் காரைக்குடியில் பாரதி விழாவில் பேசிய வ.ராமசாமி ஐயங்கார் 'பாரதியாரின் கவிதை வரி ஒன்றுக்கு ஷேக்ஸ்பியரோ ஷெல்லியோ ஈடாக மாட்டார்கள்' என்று பேசினார். அதை அவருடன் பயணம் செய்த ந. ராமரத்தினம் மணிக்கொடி இதழில் எழுதினார். பாரதியாரை மகாகவி என்று வ.ரா குறிப்பிட்டு வந்தார்.

டி.கே.சிதம்பரநாத முதலியார் முன்னெடுத்த செவ்வியல் ரசனை மரபைச் சார்ந்தவரான பி.ஸ்ரீ. ஆச்சார்யா 1935 செப்டெம்பரில் தினமணி வெளியிட்ட பாரதி மலர் இதழில் நெல்லை நேசன் என்ற பெயரில் இதற்கு மறுப்பு எழுதினார். வீரமுரசு என்னும் அக்கட்டுரையில் பாரதியார் தேசியகவியே ஒழிய மகாகவி அல்ல என்று சொன்னார். அதற்கு ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து தினமணியில் எழுதினார்கள். இவ்வாறாக இவ்விவாதம் தொடங்கியது.

விவாதம்

  • 3 நவம்பர் 1935 ஆனந்தவிகடன் இதழில் ஓர் இலக்கிய மாணாக்கன் என்னும் பெயரில் வெளியான கடிதத்தில் கல்கி நெல்லைநேசனுக்கு ஆதரவளித்து, வ.ரா ஓர் எழுத்தறியாதவர் (நிரக்ஷரகுக்ஷி) என எழுதினார். பாரதி தேசியக்கவி என ஒப்புக் கொள்ளலாம் என்றும், வால்மீகி, காளிதாசர், ஷேக்ஸ்பியர், ஷெல்லி, முதலியவர்களுக்கு நிகராகச் சொல்லமுடியாது என்றும் எழுதினார்.
  • 1 நவம்பர் 1935 இதழில் இதற்கு வ.ரா கடுமையாக பதிலளித்தார். பாரதியார் கம்பர், ஷெல்லி, ஆண்டாள் ஆகிய மூவரும் கலந்த கலவையான பெருங்கவிஞர் என காலம் நிரூபிக்கும் என எழுதினார்.
  • 7 டிசம்பர் 1935 சுதேசமித்திரனில் அதற்கு கல்கி பதிலளித்தார். பாரதியின் வள்ளிப்பாட்டு போன்றவை விரசமானவை என கல்கி எழுதினார்.
  • 15 டிசம்பர் 1935 சுதேசமித்திரன் இதழில் வ.ரா பதிலளித்தார்.
  • 11 டிசம்பர் 1935 தினமணி இதழில் சிட்டி பம்பாய் ஸ்டேண்டேட் என்னும் ஆங்கில இதழில் இதைப்பற்றி எழுதிய கட்டுரையை தமிழாக்கம் செய்து வெளியிட்டார்.
  • 12 டிசம்பர் 1935 இதழில் இன்னொரு கட்டுரையையும் சிட்டி எழுதினார். ஆங்கில இலக்கிய விமர்சன மரபை தான் கற்றறிந்துள்ளதாகச் சொன்ன சிட்டி, கல்கி முதலியோர் நவீன ஆங்கில இலக்கிய விமர்சன மரபில் வாசிப்பின்மையால்தான் பாரதியை புரிந்துகொள்ள முடியவில்லை என்று அக்கட்டுரையில் குறிப்பிட்டார்.
  • 13 டிசம்பர் 1936 தினமணி இதழில் பி.எஸ். ராமையா கல்கியை கோழை என வசைபாடி ஒரு கட்டுரையை எழுதினார். புதுமைப்பித்தனும் புனைபெயரில் கல்கியை கடுமையாக வசைபாடி எழுதினார்.
  • 21 டிசம்பர் 1935 தினமணியில் சிட்டி விரிவான இன்னொரு கட்டுரையை எழுதினார்.
  • 21 டிசம்பர் 1935 தினமணி இதழில் இளங்கோவன் கல்கியின் எழுத்து ஆபாசமானது என கண்டித்து எழுதினார்.
  • 28 டிசம்பர் 1936 சுதேசமித்திரனில் சிட்டி மீண்டும் ஒரு நீண்ட அழகியல்கோட்பாட்டுக் கட்டுரையை எழுதினார்.
  • 8 பிப்ரவரி 1936 ல் ந. சிதம்பர சுப்பிரமணியன் பாரதி மகாகவி என்பதை சில வரையறைகளை அளித்து எழுதினார்.
  • 17 பிப்ரவரி தினமணியில் வி.ஆனந்தகிருஷ்ணன் பாரதி மகாகவி என்பதை கோட்பாட்டு நோக்கில் எழுதினார்.

கண்ணன் என் கவி

பாரதி மகாகவி என்னும் தரப்பைச் சேர்ந்த கட்டுரைகளை தொகுத்து கு.ப. ராஜகோபாலனும் சிட்டியும் இணைந்து கண்ணன் என் கவி என்னும் நூலாக 1937ல் வெளியிட்டனர். அந்த விவாதம் அத்துடன் அடங்கியது.

நீட்சி

1937-ல் கண்ணன் என் கவி என்னும் தலைப்பில் பாரதி மகாகவியா என்னும் விவாதம் தொகுக்கப்பட்டது. அந்நூலைத் தொடர்ந்து அதைப்பற்றி மேலும் விவாதம் உருவாகும் என்றும், இலக்கியக் கோட்பாட்டுத்தளத்தில் முன்னகர்வு நிகழும் என்றும் அதை எழுதியவர்கள் எண்ணினர். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. அந்நூலுக்கு 1982-ல் பாரதி நூற்றாண்டு வரை மறுபதிப்பு கூட வரவில்லை. ஆனால் அந்நூல் பாரதி மகாகவியே என தமிழ்ச்சமூகம் ஏற்கவைப்பதில் வெற்றி பெற்றது.

ஏற்பு
  • 1936ல் ஶ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம் 6 ஆம் இதழில் பாரதிதாசன் 'பாரதியார் நாமம் வாழ்க' என்னும் நீள்கவிதையை எழுதி பாரதி மகாகவியே என வாதிட்டார்.
  • 1944-ல் பாரதி மகாகவியா என்னும் விவாதம் எழுந்த பின்னர் வ.ரா பாரதியின் வாழ்க்கை வரலாற்றை மகாகவி பாரதியார் என்னும் தலைப்பில் எழுதினார், சக்தி காரியாலயம் அதை வெளியிட்டது.
  • 1947ல் பாரதிக்கு தன் சொற்பொழிவுகள் வழியாக முற்போக்கு இலக்கியச் சூழலில் மதிப்பை உருவாக்கிய ப. ஜீவானந்தம் பாரதி மகாகவியே என்னும் தரப்பை ஏற்றவர். அவர் எழுதிய பாரதி வழி என்னும் நூல் வெளிவந்தது.
  • 1948 ல் அண்ணாத்துரை பாரதிதாசனுடன் இணைந்து மகாகவி பாரதியார் என்னும் நூலை எழுதினார். அந்நூலில் உள்ள பாரதி பாதை என்னும் கட்டுரை 1947ல் பாரதி மணிமண்டபம் திறப்பை ஒட்டி அண்ணாத்துரை எழுதியது. அந்நூல் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிட இயக்கம் சார்ந்த சூழலில் பாரதியார் ஒரு பிராமணக் கவிஞர், ஆரிய ஆதரவாளர் என்னும் உளப்பதிவு இருந்த காலகட்டத்தில் இந்நூல் அந்தத் தரப்பினருக்கும் பாரதியை ஏற்புடையவர் ஆக்கியது.
  • 1949ல் எஸ். வையாபுரிப் பிள்ளை எழுதிய தமிழ்ச்சுடர் மணிகள் என்னும் நூலில் தமிழின் பெருங்கவிஞர்களான கம்பர், வள்ளுவர் ஆகியோருடன் பாரதியையும் சேர்த்து பாரதி தமிழின் மகாகவியே என எழுதியிருந்தார்.
  • 1982ல் ந. சுப்புரெட்டியார் கண்ணன் என் கவி நூலின் கருத்தை ஒட்டியே கண்ணன் பாட்டுத்திறன் என்னும் நூலை வெளியிட்டார். பாரதி நூற்றாண்டு 1982ல் வந்ததை ஒட்டி பாரதி மகாகவியே என்னும் நோக்கில் எழுதப்பட்ட மேலும் பல நூல்கள் வெளிவந்தன.
  • 1982ல் கார்த்திகேசு சிவத்தம்பி - அ. மார்க்ஸ் இணைந்து எழுதிய 'பாரதி - மறைவு முதல் மகாகவி வரை' என்ற நூல் பாரதி மகாகவியா என்னும் விவாதத்தையும், அதன்பின் உருவான மாற்றங்களையும் விரிவாக மதிப்பிடுகிறது.
  • 2000த்தில் ஞானி பாரதி மகாகவியே என்னும் கோணத்தில் எழுதிய பாரதியின் கவித்துவம் என்னும் நூல் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது.
மறுப்பு

நவீன இலக்கியச் சூழலில் பாரதியின் கவிதைகளின் இடம் மறுபரிசீலனைக்கு உள்ளாகியது.

  • 1958 ல் க.நா.சுப்ரமணியம் கவிதைகள் குறித்த விவாதத்தில் பாரதியின் மழை போன்ற சில கவிதைகளைக் குறிப்பிட்டு அக்கவிதைகளுக்கு நிகரான நல்ல கவிதைகளை அவர் அதிகமும் எழுதிவிடவில்லை என்றும், பெரும்பாலானவை இசைப்பாடல்களும் தோத்திரப்பாடல்களுமே என்று கருத்துரைத்தார்.
  • 1958-ல் சுந்தர ராமசாமி எழுதிய நான் காணும் பாரதி என்னும் கட்டுரையில் பாரதியின் கவிதைகளின் இடத்தை மறுத்து, பாரதியின் பங்களிப்பு தமிழ் உரைநடையை உருவாக்கியதிலேயே அவருடைய முதன்மைப் பங்களிப்பு உள்ளது என்றார்.
  • 2011 ல் ஜெயமோகன் மகாகவி என்னும் அடையாளம் ஒரு பண்பாட்டின் முகமாகத் திகழும் பெருங்கவிஞர்களுக்குரியது என்றும், பாலைபாடிய பெருங்கடுங்கோ, கபிலர், இளங்கோ, கம்பர், நம்மாழ்வார் போன்றவர்களே தமிழின் மகாகவிகள் என்று சொல்லப்படமுடியும் என்றும் குறிப்பிட, அதை ஒட்டி விவாதம் உருவாகியது. அதற்கு ஜடாயு, எம்.டி. முத்துக்குமாரசாமி, நரசய்யா போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து எழுதினார்கள்.

உசாத்துணை



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Aug-2025, 16:33:38 IST