வாகைத் திணை: Difference between revisions
No edit summary |
Corrected typo errors; |
||
| (3 intermediate revisions by 2 users not shown) | |||
| Line 8: | Line 8: | ||
வாகைப் படலத்திற்குரிய விளக்கம் முதல் கொளுவில் தரப்பட்டுள்ளது.<blockquote>''இலைபுனை வாகை சூடி இகல்மலைந்(து)அலைகடல் தானை அரசுஅட்டு ஆர்த்தன்று - (கொளு-1)''</blockquote>(இகல் = பகை, அட்டு = அழித்து) | வாகைப் படலத்திற்குரிய விளக்கம் முதல் கொளுவில் தரப்பட்டுள்ளது.<blockquote>''இலைபுனை வாகை சூடி இகல்மலைந்(து)அலைகடல் தானை அரசுஅட்டு ஆர்த்தன்று - (கொளு-1)''</blockquote>(இகல் = பகை, அட்டு = அழித்து) | ||
'கடல் போன்ற பெரிய படையையுடைய பகைஅரசனை அழித்துப் போரில் வெற்றி பெற்ற அரசன், இலைகள் சேர்த்துத் தொடுத்த வாகை மாலையைச் சூடி ஆரவாரித்தல்' என்பது இதன் பொருள். பகையரசனைக் கொன்று வாகை சூடி ஆரவார்த்த வெற்றியை அறிவுடைய புலவர் பலரும் போற்றினார் என வெண்பா விளக்குகிறது. இதனை,<blockquote>''சூடினான் வாகைச் சுடர்த்தெரியல் - சூடுதலும்பாடினார் வெல்புகழைப் பல்புலவர்...''</blockquote>என்கிறது வெண்பா. | |||
== துறைகள் == | == துறைகள் == | ||
| Line 21: | Line 21: | ||
*[[மறக்களவழி]]- போர்க்களத்தைச் சிறப்பித்தல் | *[[மறக்களவழி]]- போர்க்களத்தைச் சிறப்பித்தல் | ||
*[[களவேள்வி]]- போர்க்களத்தில் வேள்வி செய்தல் என்பது இதன் பொருள் (வெற்றி பெற்ற மன்னன் பேய்களுக்கு ஊன் விருந்தளித்தல்) | *[[களவேள்வி]]- போர்க்களத்தில் வேள்வி செய்தல் என்பது இதன் பொருள் (வெற்றி பெற்ற மன்னன் பேய்களுக்கு ஊன் விருந்தளித்தல்) | ||
*[[முன் தேர்க்குரவை(வாகைத் திணை)| | *[[முன் தேர்க்குரவை(வாகைத் திணை)|முன்தேர்க் குரவை]]- வென்ற அரசனது தேரின் முன் குரவையாடுதல் | ||
*[[பின் தேர்க்குரவை]] - தேரின் பின் குரவையாடுதல் | *[[பின் தேர்க்குரவை(வாகைத்திணை)|பின்தேர்க் குரவை]] - வென்ற அரசனின் தேரின் பின் குரவையாடுதல் | ||
=====உறழ்ச்சி வெற்றி-2===== | =====உறழ்ச்சி வெற்றி-2===== | ||
| Line 46: | Line 46: | ||
* [[மூதின் முல்லை]] - பழைய மரக்குடியில் பிறந்தோரது மேம்பாடு | * [[மூதின் முல்லை]] - பழைய மரக்குடியில் பிறந்தோரது மேம்பாடு | ||
*[[ஏறாண் முல்லை]] - மேன்மேல் உயருகின்ற ஆண்மைத் தன்மையுடைய குடியின் மேம்பாடு | *[[ஏறாண் முல்லை]] - மேன்மேல் உயருகின்ற ஆண்மைத் தன்மையுடைய குடியின் மேம்பாடு | ||
*[[வல்லாண் முல்லை]] - ஒரு மறவனது குடிச்சிறப்பையும், ஊரின் சிறப்பையும் வீர இயல்பையும் கூறி அவனது மேதக்க ஆண்மைத் தன்மையினை மிகுத்துப் | *[[வல்லாண் முல்லை]] - ஒரு மறவனது குடிச்சிறப்பையும், ஊரின் சிறப்பையும் வீர இயல்பையும் கூறி அவனது மேதக்க ஆண்மைத் தன்மையினை மிகுத்துப் பேசுவது' | ||
*[[காவல் முல்லை]] - அரசனின் காவல் சிறப்பைக் கூறுவது | *[[காவல் முல்லை]] - அரசனின் காவல் சிறப்பைக் கூறுவது | ||
*[[பேராண் முல்லை]] - வீரம் மிக்க அரசன், மறவர்கள் விரும்பும்படி போர்க்களத்தில் வென்ற சிறப்பைக் கூறுதல் | *[[பேராண் முல்லை]] - வீரம் மிக்க அரசன், மறவர்கள் விரும்பும்படி போர்க்களத்தில் வென்ற சிறப்பைக் கூறுதல் | ||
Latest revision as of 17:39, 22 November 2025
வாகைத்திணை வெற்றியைக் குறிக்கும். போர் நிகழ்வுகளை அடுத்து வெற்றியைக் கொண்டாடுவதைக் கூறுவது வாகைப்படலம். வெற்றி பெற்ற மன்னனும், வீரர்களும் வாகை மாலை சூடிக் கொண்டாடுவார்கள் என புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. வாகைப்படலம், அரசனது வெற்றி பற்றி (போர் வெற்றி) மட்டுமன்றிப் பிறரது வெற்றி குறித்தும் பேசுகிறது.
விளக்கம்
போர் நிகழ்த்துகையில் வெட்சி முதல் தும்பை வரையிலான பூமாலைகளை அணிந்து போர் செய்வதைப் போல, அரசர் வாகை மாலை சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணை. இத்திணையில் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர், பொருநர், அறிவர், தாபதர், அவையர், கணிவர், மறமகளிர், வீரர்கள் சான்றோர் முதலானோர் உறழ்ந்து பெறும் வெற்றியும் இயல்பாக அடையும் வெற்றியும் விளக்கப்பட்டுள்ளன. அரசரது கடமையும் செயல்களும் செங்கோன்மையும் அவனது முரசு, குடை ஆகியவற்றின் சிறப்பும் கடமை முடித்து உறக்கம் கொள்வதும் விளக்கப்பட்டுள்ளன. அந்தணருடைய தூதுச் செயலும், வணிகருடைய கொடைப் பண்பும், வேளாளருடைய ஒப்புரவும், அறிவருடைய முக்கால உணர்வும், தாபதரின் செயல்களும், சான்றோரின் நடுநிலை தவறாத தன்மையும், கணிவரின் ஆராய்ச்சித் திறனும், மறமகளிரின் வீரச்சிறப்பும், மறவர்களின் செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் தன்மையும் விளக்கப்பட்டுள்ளன. இறுதியாகப் புவி மீதுள்ள பற்றை ஒழித்து மெய்ம்மையை விரும்புதலும், உலகின் துயரை எண்ணிப் பற்று நீங்குதலும் உண்மையான வெற்றிகள் என வாகைப்படலம் உணர்த்துகிறது.
வாகைப் படலம் (புறப்பொருள் வெண்பா மாலை)
வாகைப் படலத்திற்குரிய விளக்கம் முதல் கொளுவில் தரப்பட்டுள்ளது.
இலைபுனை வாகை சூடி இகல்மலைந்(து)அலைகடல் தானை அரசுஅட்டு ஆர்த்தன்று - (கொளு-1)
(இகல் = பகை, அட்டு = அழித்து) 'கடல் போன்ற பெரிய படையையுடைய பகைஅரசனை அழித்துப் போரில் வெற்றி பெற்ற அரசன், இலைகள் சேர்த்துத் தொடுத்த வாகை மாலையைச் சூடி ஆரவாரித்தல்' என்பது இதன் பொருள். பகையரசனைக் கொன்று வாகை சூடி ஆரவார்த்த வெற்றியை அறிவுடைய புலவர் பலரும் போற்றினார் என வெண்பா விளக்குகிறது. இதனை,
சூடினான் வாகைச் சுடர்த்தெரியல் - சூடுதலும்பாடினார் வெல்புகழைப் பல்புலவர்...
என்கிறது வெண்பா.
துறைகள்
பிறருடன் போட்டியிட்டுப் பெறும் வெற்றியை வாகை என்று கூறுவதும் போட்டியின்றி இயல்பாக ஒழுக்கத்தால் பெற்ற மேம்பாடான வெற்றியை முல்லை என்று கூறுவதும் மரபு. எடுத்துக் காட்டாக அரச வாகை என்பது உறழ்ந்து பெறும் வெற்றியையும் அரச முல்லை என்பது இயல்பாகப் பெற்ற மேம்பாட்டையும் குறிக்கின்றன.
உறழ்ச்சி வெற்றி-1
- வாகை அரவம்-வாகை மாலை சூடி ஆரவாரித்தல்
- அரச வாகை- வெற்றி பெற்ற அரசனின் சிறப்பைக் கூறுதல்
- முரச வாகை- அரசனது வெற்றி முரசின் தன்மையைக் கூறுதல்
- மறக்களவழி- போர்க்களத்தைச் சிறப்பித்தல்
- களவேள்வி- போர்க்களத்தில் வேள்வி செய்தல் என்பது இதன் பொருள் (வெற்றி பெற்ற மன்னன் பேய்களுக்கு ஊன் விருந்தளித்தல்)
- முன்தேர்க் குரவை- வென்ற அரசனது தேரின் முன் குரவையாடுதல்
- பின்தேர்க் குரவை - வென்ற அரசனின் தேரின் பின் குரவையாடுதல்
உறழ்ச்சி வெற்றி-2
பார்ப்பனர், வணிகர், வேளாளர், பொருநர் (ஒப்பு நோக்குபவர்), அறிவர், தாபதர் ஆகியோரது வெற்றிச் சிறப்புகள் குறித்து புறப்பொருள் வெண்பா மாலை குறிப்பிடும் துறைகள்
- பார்ப்பன வாகை- அந்தணன், வேள்வி செய்வதால் அடையும் பெருமையைக் கூறுதல்
- வாணிக வாகை - வாணிகரது வெற்றிச் சிறப்பு
- வேளாண் வாகை - வேளாளர் வெற்றி
- பொருந வாகை - பொருநரது (ஒப்பிட்டு நோக்குபவரது) சிறப்பைக் கூறுதல்
- அறிவன் வாகை - முக்கால உணர்வு பெற்ற சான்றோர் வெற்றி
- தாபத வாகை - தாபதர் ( தாபதம்-நோன்பு) தவம் செய்யும் முனிவர் தவத்தில் பெறும் வெற்றி
பாசறை இருப்பு
போர் மேற்கொண்டு போர்க்களத்திற்குச் செல்லும் அரசன் கூதிர்காலத்திலும், வாடைக் காலத்திலும் தலைவிமேல் காதல் இன்றிப் (போகத்தில் பற்று இல்லாமல்) போரின் மேல் காதல் கொண்டு பாசறையில் இருத்தல் ஒருவகை வெற்றியாகும். பிரிதல் வன்மை பற்றி இது வெற்றியாயிற்று என்பர்.
- கூதிர்ப் பாசறை - கூதிர்காலத்தில் பாசறையில் இருத்தல்
- வாடைப் பாசறை - வாடைக் காலத்தில், பாசறையில் இருத்தல்
இயல்பு வெற்றி
போட்டியிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாட்டையும் வெற்றி எனலாம். இவ்வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன் முதலானோர் பெறும் மேம்பாட்டினை இப்பகுதியிலுள்ள துறைகள் காட்டுகின்றன.
- அரச முல்லை -அரசனது மேம்பாடு
- பார்ப்பன முல்லை - பார்ப்பனரின் மேம்பாடு
- அவைய முல்லை - அவைக்களத்துச் சான்றோர் மேம்பா
- கணிவன் முல்லை - சோதிட நூல் வல்லவனின் மேம்பாடு
- மூதின் முல்லை - பழைய மரக்குடியில் பிறந்தோரது மேம்பாடு
- ஏறாண் முல்லை - மேன்மேல் உயருகின்ற ஆண்மைத் தன்மையுடைய குடியின் மேம்பாடு
- வல்லாண் முல்லை - ஒரு மறவனது குடிச்சிறப்பையும், ஊரின் சிறப்பையும் வீர இயல்பையும் கூறி அவனது மேதக்க ஆண்மைத் தன்மையினை மிகுத்துப் பேசுவது'
- காவல் முல்லை - அரசனின் காவல் சிறப்பைக் கூறுவது
- பேராண் முல்லை - வீரம் மிக்க அரசன், மறவர்கள் விரும்பும்படி போர்க்களத்தில் வென்ற சிறப்பைக் கூறுதல்
- மற முல்லை - மறவனது வீர மேம்பாடு
- குடை முல்லை - வெண்கொற்றக் குடையினது மேம்பாடு
பிற
- கண்படை நிலை - பகைவரின் மண்ணைக் கைப்பற்றிய வீரவேந்தனின் உறக்கத்தைப் பாராட்டுதல்
- அவிப்பலி - உயிரைப் பலியாகக் கொடுத்தல்
- சால்பு முல்லை - சான்றோரது மேம்பாடு
- கிணை நிலை - கிணைப்பறை கொட்டுபவன் செயல்
- பொருளொடு புகறல் - மெய்ப்பொருளை விரும்புதல்
- அருளொடு நீங்கல் - அருளைக் கடைப்பிடித்து உலகை நீங்கல்
தொல்காப்பியர் சுட்டாத வாகை அரவம், முரச வாகை, களவேள்வி, அரச முல்லை, பார்ப்பன முல்லை, கணிவன் முல்லை, மூதின் முல்லை, ஏறாண் முல்லை, காவல் முல்லை, பேராண் முல்லை, மற முல்லை, குடை முல்லை, கண்படை நிலை, கிணை நிலை என்னுமிவை புறப்பொருள் வெண்பா மாலையில் மிகுதியாகக் கூறப்பட்டுள்ளமை வாகைத் திணை வளர்ச்சியைக் காட்டுகிறது.
உசாத்துணை
வாகைத் திணை-தமிழ் இணைய கல்விக்கழகப் பாடம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 18:13:35 IST