கண்படை நிலை
கண்படை நிலை பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. அரசன் உறக்கம் கொள்ளும் நிலையைக் கூறுவது. பின்னாட்களில் சிற்றிலக்கியமாக உருப்பெற்றது. வாகைத் திணையிலும் கண்படை நிலை என்ற துறை உள்ளது.
பார்க்க : கண்படைநிலை(சிற்றிலக்கியம்)
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தேரினையுடைய பகைவர் தூளாகும்படி செல்லும் வலிய தேரையுடைய அரசனது உறக்கத்தைச் சிறப்பித்துக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
நெடும் தேர் தானை நீறுபட நடக்கும்
கடும்தேர் மன்னவன் கண்படை மலிந்தன்று(9.8)
வெண்பா
மேலார் இறை அமருள் மன்னார் சினம் சொரியும்
வேலான் விறல் முனை வென்று அடக்கி - கோலால்
கொடிய உலகில் குறுகாமை எம்கோன்
கடிய துயில் ஏற்ற கண் (196)
பொருள்:அரசன் தன் திறனால் பாதுகாப்புகளை ஏற்படுத்திவிட்டுக் கவலையின்றி உறக்கம் கொள்வான் எனக் காட்டுகிறது.போரில் பகைவரை வென்று, நாட்டில் செங்கோலால் கொடியவற்றை நீக்கிக் கவலை இல்லாததால் அரசன் கண்கள் உறக்கத்தை மேவின.
உசாத்துணை
காஞ்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Feb-2025, 09:08:15 IST