under review

பார்ப்பன வாகை

From Tamil Wiki

பார்ப்பன வாகை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. வாகையில் அரசர்கள் பற்றிய செய்திகளோடு, பிறர் பற்றிய செய்திகளும் கூறப்படுகின்றன. பார்ப்பனரது வெற்றிச் சிறப்பைக் கூறுவது பார்ப்பன வாகை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் கேள்வி அறிவு மிக்குச் சிறப்பெய்திய அந்தணன், வேள்வி செய்வதால் அடையும் பெருமையைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

கேள்வியால் சிறப்பு எய்தியானை
வேள்வியால் விறல் மிகுந்தன்று (கொளு 8.9)

வெண்பா

ஓதம் கரைதவழ் நீர் வேலி உலகினுள்
வேதம் கரை கண்டான் வீற்றிருக்கும் - ஏதம்
சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த
விடுசுடர் வேள்வி அகத்து (163)

பொருள்: விரும்பின பரந்த அனலையுடைய யாகத்திடத்தே, திரை கரை மீதிலே தத்தும் கடலே வேலியாகவுடைய நிலவுலகினுள்ளே நான்கு வேதங்களையும் கரைகண்டானான இவன், குற்றத்தைச் சுடும் நெருப்புத் தானேயாகி, எல்லாரும் புகழ்ந்து போற்றத், செம்மாந்து வீற்றிருந்தான்!

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jul-2025, 10:47:27 IST