under review

அரச முல்லை

From Tamil Wiki

அரச முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று.போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன் முதலானோர் பெறும் மேம்பாட்டினை வாகைத் திணை கூறுகிறது. அரசனின் மேம்பாட்டைக் கூறுவது அரச முல்லை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் போர்க்களத்தில் பகைவரை வருத்தும் நெடிய வேலைக் கொண்டவனும் பெரிய நிலவுலகத்தைக் காவல் செய்கிறவனும் ஆகிய அரசனின் தன்மையைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

செருமுனை உடற்றும் செஞ்சுடர் நெடுவேல்
இருநிலம் காவலன் இயல்பு உரைத்தன்று(கொளு 8.17

வெண்பா

செயிர்கண் நிகழாது செங்கோல் உயரி
மயிர்கண் முரசம் முழங்க - உயிர்க்கெல்லாம்
நாவல் அலகிடத்து ஞாயிறு அனையானாய்க்
காவலன் சேறல் கடன் (171)

பொருள்: அரசன், குற்றம் அற்றவனாகி இருக்க வேண்டும். வெற்றி முரசினை முழங்கும் வண்ணம் திகழ வேண்டும். எல்லா உயிர்க்கும் செங்கோன்மை காட்ட வேண்டும். எல்லா உயிர்க்கும் நன்மை செய்யும் கதிரவன்போல் நடக்க வேண்டும். இதுவே அரசன் கடமை.

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Jul-2025, 21:24:47 IST