நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை: Difference between revisions
No edit summary |
(Corrected Category:வாத்திய இசைக்கலைஞர்கள் to Category:வாத்திய இசைக்கலைஞர்) |
||
(3 intermediate revisions by the same user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=நாச்சியார்கோவில்|DisambPageTitle=[[நாச்சியார்கோவில் (பெயர் பட்டியல்)]]}} | |||
நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை (நவம்பர் 8, 1910 - ஏப்ரல் 10, 1964) தவில் இசைக் கலைஞர். | நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை (நவம்பர் 8, 1910 - ஏப்ரல் 10, 1964) தவில் இசைக் கலைஞர். | ||
== இளமை, கல்வி == | == இளமை, கல்வி == | ||
Line 43: | Line 44: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013 | * மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013 | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|23-Sep-2023, 07:19:12 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:வாத்திய | [[Category:வாத்திய இசைக்கலைஞர்]] |
Latest revision as of 13:55, 17 November 2024
- நாச்சியார்கோவில் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நாச்சியார்கோவில் (பெயர் பட்டியல்)
நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை (நவம்பர் 8, 1910 - ஏப்ரல் 10, 1964) தவில் இசைக் கலைஞர்.
இளமை, கல்வி
ராகவப் பிள்ளை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகே உள்ள நாச்சியார்கோவிலில் நவம்பர் 8, 1910 அன்று பக்கிரி நட்டுவனார் - கண்ணம்மாள் தம்பதிக்கு கடைசி மகனாகப் பிறந்தார். ராமச்சந்திர பிள்ளை (நட்டுவனார்), ரங்கஸ்வாமி பிள்ளை (பாடகர்), நடராஜ பிள்ளை என்ற மூத்த சகோதரர்களும், காமு அம்மாள், அம்மணி அம்மாள், வஞ்சுள வல்லியம்மாள் என்ற மூத்த சகோதரிகளும் இருந்தனர்.திருவாழப்புத்தூர் பசுபதிப் பிள்ளையிடம் ராகவப் பிள்ளை தவில் கற்று, இரண்டு ஆண்டுகளில் வாசிக்கத் தொடங்கினார். நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் குருகுலமாக பதினோரு ஆண்டுகள் தங்கி, தவிலில் மேற்பயிற்சி பெற்றார்.
தனிவாழ்க்கை
நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தன் மகள் ஜயலக்ஷ்மியை ராகவப் பிள்ளைக்கு மே 7, 1935 அன்று மணமுடித்து வைத்தார். இவர்களுக்கு கமலாம்பாள், கோமதி, வேம்பு, சித்ரா என்ற பெண்களும் வாசுதேவன் என்ற ஒரு மகனும் பிறந்தனர்.
இசைப்பணி
நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளையின் லயக்கணக்குகள் புகழ்பெற்றவை.
மாணவர்கள்
நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:
- வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளை
- யாழ்ப்பாணம் தக்ஷிணாமூர்த்தி
- பெரும்பள்ளம் வெங்கடேச பிள்ளை
- இலுப்பூர் நல்லகுமார் பிள்ளை
உடன் வாசித்த கலைஞர்கள்
நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:
- கீரனூர் சகோதரர்கள்
- செம்பொன்னார் கோவில்கோவிந்தஸ்வாமி பிள்ளை சகோதரர்கள்
- திருவீழிமிழலை சகோதரர்கள்
- திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை
- திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை
- திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளை
- தருமபுரம் அபிராமிசுந்தரம் பிள்ளை
- திருவீழிமிழலை கோவிந்தராஜ பிள்ளை சகோதரர்கள்
- திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை
- திருவாவடுதுறை 'கக்காயி' நடராஜசுந்தரம் பிள்ளை
- குழிக்கரை காளிதாஸ் பிள்ளை
- நாச்சியார்கோவில் ராஜம்-துரைக்கண்ணு சகோதரர்கள்
- வண்டிக்காரத்தெரு மணி-மாமுண்டி சகோதரர்கள்
- குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை
- வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளை
- காருகுறிச்சி அருணாசலம்
- திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை
- கோட்டூர் ராஜரத்தினம் பிள்ளை
- நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்
- இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணுப் பிள்ளை
- பெரம்பலூர் அங்கப்ப பிள்ளை
- அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை
- கும்பகோணம் ராமையா பிள்ளை
- ஆண்டாங்கோவில் கருப்பையா பிள்ளை
- திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை
மறைவு
ராகவப் பிள்ளை ஏப்ரல் 10, 1964 அன்று நாச்சியார்கோவிலில் மறைந்தார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
23-Sep-2023, 07:19:12 IST