under review

செம்மொழி செவ்வியல் நூல்கள் மொழிபெயர்ப்பு

From Tamil Wiki

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழி செவ்வியல் நூல்கள் மொழிபெயர்ப்பை தனது முக்கியத் திட்டப் பணிகளுள் ஒன்றாகக் கொண்டு செயலாற்றி வருகிறது.

செவ்வியல் நூல்கள் மொழிபெயர்ப்பு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சிறப்பினை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. அதற்கேற்ற முறையில் மொழிபெயர்ப்புகள், ஆய்வுநூல்கள் முதலான பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயலாற்றி வருகிறது. உலக மொழிகள் பலவற்றிலும் தமிழ்ச் செவ்விலக்கிய நூல்களை மொழிபெயர்க்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

மொழிபெயர்ப்புப் பணிகள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதன்மையான நோக்கம் தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் வெளிப்படுத்துவது. அதற்கேற்ற வகையில் பல திட்டங்கள் வகுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட உலக மொழிகளிலும் செவ்வியல் நூல்களை மொழிபெயர்த்து வெளியிடும் பணிகள் நடைபெறுகின்றன.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இலக்கண நூலான தொல்காப்பியத்தை ஆங்கிலம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. மலையாள மொழியில் தொல்காப்பிய மொழிபெயர்ப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிற இலக்கண, இலக்கிய நூல்கள் மொழிபெயர்ப்புத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மொழிபெயர்ப்பு (ஆங்கிலம் அல்லாதவை)

ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் செவ்வியல் நூல்கள் மொழிபெயர்ப்புத் திட்டத்தை கீழ்க்காணும் அறிஞர்கள் முன்னெடுத்தனர். இவற்றுள் சில நூலாக்கம் பெற்றுவிட்டன. சில நூலாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. ஏனைய நூல்கள் படிப்படியாக நூலாக்கம் செய்யப்பட உள்ளன.

எண் நூல் மொழிபெயர்ப்பாளர்
1 தொல்காப்பியம் - இந்தி மொழிபெயர்ப்பு எச்.பாலசுப்பிரமணியம் & கிருஷ்ணசாமி நாச்சிமுத்து
2 தொல்காப்பியம் - மலையாள மொழிபெயர்ப்பு மா. தட்சிணாமூர்த்தி
3 தொல்காப்பியம் - கன்னட மொழிபெயர்ப்பு ஜெயலலிதா
4 குறுந்தொகை - பிரெஞ்சு மொழிபெயர்ப்பு சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்
5 நற்றிணை - பிரெஞ்சு மொழிபெயர்ப்பு சி. திருமுருகன்
6 புறநானூறு - உருது மொழிபெயர்ப்பு மு.இரா. சஃப்ரா பேகம்
7 குறுந்தொகை - சிங்கள மொழிபெயர்ப்பு அ. சண்முகதாஸ்
8 எட்டுத்தொகை - இந்தி மொழிபெயர்ப்பு மா. கோவிந்தராஜன்
9 பத்துப்பாட்டு - இந்தி மொழிபெயர்ப்பு மா. கோவிந்தராஜன்
10 எட்டுத்தொகை - தெலுங்கு மொழிபெயர்ப்பு தேவசங்கீதம்
11 பத்துப்பாட்டு - தெலுங்கு மொழிபெயர்ப்பு தேவசங்கீதம்
12 எட்டுத்தொகை - கன்னட மொழிபெயர்ப்பு இரா. சீனிவாசன்
13 பத்துப்பாட்டு - கன்னட மொழிபெயர்ப்பு இரா. சீனிவாசன்
14 ஐங்குறுநூறு - மலையாள மொழிபெயர்ப்பு உள்ளூர் எம். பரமேஸ்வரன்
15 திருக்குறள் - அரபு மொழிபெயர்ப்பு அ.பஷீர் அகமது
16 திருக்குறள் – பாரசீக மொழிபெயர்ப்பு எஸ். சாத்தப்பன்
17 திருக்குறள் - நேபாளி மொழிபெயர்ப்பு சுனிதா சுரேஷ்
18 திருக்குறள் - உருது மொழிபெயர்ப்பு எம்.பி. அமநுல்லா
19 திருக்குறள் – குஜராத்தி மொழிபெயர்ப்பு பி.சி. கோகிலா
20 திருக்குறள் - மணிப்புரி மொழிபெயர்ப்பு சோய்பம் ரெபிக்கா தேவி
21 திருக்குறள் – கன்னட மொழிபெயர்ப்பு எஸ். சீனிவாசன்
22 திருக்குறள் - தெலுங்கு மொழிபெயர்ப்பு எஸ். ஜெயப்பிரகாஷ் & தார்லோச்சன் சிங் பேடி
23 திருக்குறள் - பஞ்சாபி மொழிபெயர்ப்பு மா. கோவிந்தராஜன்
24 திருக்குறள் – இந்தி மொழிபெயர்ப்பு என். லலிதா
25 திருக்குறள் - மராத்தி மொழிபெயர்ப்பு கிரிபாலா மொஹந்தி
26 திருக்குறள் - ஒடியா மொழிபெயர்ப்பு ந.மனோகரன்
27 திருக்குறள் - மலையாள மொழிபெயர்ப்பு கோ.சீனிவாசவர்மா
28 திருக்குறள் - வாக்ரிபோலி மொழிபெயர்ப்பு சி.பி.கே. குலோத்துங்கன்
29 திருக்குறள் - படுகு மொழிபெயர்ப்பு மேரி பியரி அகஸ்டின் & எம்.
30 நாலடியார் - பிரெஞ்சு மொழிபெயர்ப்பு திருமலை
31 நாலடியார் - மலையாள மொழிபெயர்ப்பு எஸ். முகம்மது யூசுப்
32 பதினெண் கீழ்க்கணக்கு - இந்தி மொழிபெயர்ப்பு (திருக்குறள், நாலடியார் நீங்கலாக) பி.கே.பாலசுப்பிரமணியன்

உசாத்துணை


✅Finalised Page