under review

மகாகவி பாரதியார் விருது

From Tamil Wiki
Revision as of 11:42, 14 January 2024 by ASN (talk | contribs) (2023 ஆம் ஆண்டு விருதாளர் பெயர் சேர்க்கப்பட்டது)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மகாகவி பாரதியார் விருது (1997 முதல்) தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று. மகாகவி பாரதி தொடர்பான சிறந்த படைப்புகள், ஆய்வுகள் போன்றவற்றுக்கு அளிக்கப்படும் விருது.

மகாகவி பாரதியார் விருது

மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில், பாரதியாரின் படைப்புகள் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கும், பாரதியின் புகழ் பரப்பும் வகையில் கவிதை, உரைநடை நூல்கள் படைப்போருக்கும், பாரதி இயல் வளர்ச்சிக்கு உழைப்பவர்களுக்கும் 1997 முதல் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் இவ்விருது, இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் கொண்டது.

மகாகவி பாரதியார் விருது பெற்றோர் (2022 வரை)

எண் ஆண்டு பெயர்
1 1997 கவிஞர் மதிவண்ணன்
2 1998 குமரி அனந்தன்
3 1999 வலம்புரி ஜான்
4 2000 கவிஞர் வாலி
5 2001 பெ.சு. மணி
6 2002 கே.வி. கிருஷ்ணன்
7 2003 ரா.அ. பத்மநாபன்
8 2004 சீனி. விசுவநாதன்
9 2006 தமிழருவி மணியன்
10 2007 கவிஞர் சௌந்தரா கைலாசம்
11 2008 முனைவர் இரா.மணியன்
12 2009 டாக்டர் சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன்
13 2010 நா.மம்மது
14 2011 முனைவர் இரா. பிரேமா
15 2012 பாரதி காவலர் கு. இராமமூர்த்தி
16 2013 முனைவர் கு. ஞானசம்பந்தன்
17 2014 முனைவர் இளசை சுந்தரம்
18 2015 கவிஞர் பொன்னடியான்
19 2016 பேராசிரியர் முனைவர் ச. கணபதிராமன்
20 2017 முனைவர் சு. பாலசுப்பிரமணியன் (எ) பாரதிபாலன்
21 2018 மா.பாரதி சுகுமாரன்
22 2019 முனைவர் ப.சிவராஜி
23 2020 கவிஞர் பூவை செங்குட்டுவன்
24 2021 பாரதி கிருஷ்ணகுமார்
25 2022 டாக்டர் ஆ.இரா. வேங்கடாசலபதி
26 2023 பழநிபாரதி

உசாத்துணை


✅Finalised Page