அகராதி நூல்கள்

From Tamil Wiki
Revision as of 13:48, 3 November 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added; Name List Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வீரமாமுனிவரின் சதுரகராதி - தமிழின் முதல் அகராதி நூல் - 1732

ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல்கள் ‘அகர முதலி’ என்றும் ‘அகராதி’ என்றும் அழைக்கப்படுகின்றன. அகரத்தை முதன்மையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளதால், ‘அகர முதலி’; அகரம் + ஆதி = அகராதி. தமிழில் பல்வேறு அகராதி நூல்கள் பயன்பாட்டில் உள்ளன. வீரமாமுனிவர் இயற்றிய ‘சதுரகராதி’, தமிழின் முதல் அகராதி நூலாகக் கருதப்படுகிறது.

தமிழில் அகராதி நூல்கள் தோற்றம்

அகராதியின் பயன், ஒரு சொல்லுக்கு உரிய பல பொருள்களையும், அப்பொருள்களுக்குரிய பெயர் விளக்கங்களையும் தருவதாகும். பண்டைக் காலத்தில் இவை ‘நிகண்டுகள்’ என அழைக்கப்பட்டன. நிகண்டுகள், அகராதிகள் தோன்ற அடிப்படைக் காரணமான நூல் தொல்காப்பியம். தொல்காப்பியர், தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் உரியியலில், 120 உரிச்சொற்களின் பொருளை நூற்பாவில் அறிவித்துள்ளார் . இதனை அடிப்படையாக வைத்தே தொல்காப்பியர் காலத்திற்குப் பின் ‘உரிச்சொல் பனுவல்களும், நிகண்டுகளும் தோன்றின. இவையே காலமாற்றத்திற்கேற்ப விரிவு கொண்டு அகராதிகளாயின.

பெப்ரியஸ் அகராதி- 1779 : தமிழின் இரண்டாவது அகராதி நூல்

தமிழ் அகராதி நூல்களின் பட்டியல்

தமிழின் முதல் அகராதி நூல், வீரமாமுனிவர் இயற்றிய ‘சதுரகராதி’. இது பொதுயுகம் 1732-ல் உருவானது. இதனை அடுத்து, 1779-ல், பெப்ரியஸ் பாதிரியார், ‘பெப்ரிசியஸ் அகராதி'யைத் தொகுத்து வெளியிட்டார். தொடர்ந்து பல அகராதி நூல்கள் வெளியாகின.

எண் ஆண்டு அகராதியின் பெயர் ஆசிரியர்/பதிப்பாளர்
1 1732 சதுரகராதி வீரமாமுனிவர்
2 1779 பெப்ரிசியஸ் அகராதி பெப்ரியஸ் பாதிரியார்
3 1834 ராட்லர் தமிழ் அகராதி (நான்கு பாகங்கள்) ராட்லர்
4 1842 மானிப்பாய் அகராதி யாழ்ப்பாணம், சந்திரசேகரபண்டிதர் & சரவணமுத்துப்பிள்ளை
5 1850 சொற்பொருள் விளக்கம் அண்ணாசாமிப் பிள்ளை
6 1862 வின்ஸ்லோ-தமிழ் அகராதி வின்ஸ்லோ
7 1869 போப்புத் தமிழ் அகராதி ஜி.யு. போப்
8 1883 அகராதிச் சுருக்கம் விஜயரங்க முதலியார்
9 1893 பேரகராதி காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு
10 1897 தரங்கம்பாடி அகராதி (பெப்ரிசியசு அகராதியின் விரிவு) பெப்ரியஸ் பாதிரியார்
11 1899 தமிழ்ப் பேரகராதி (வித்தியாரத்நாகர அச்சியந்திரசாலை) நா. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம்
12 1901 தமிழ்ப் பேரகராதி (நிரஞ்சனவிலாச அச்சியந்திர சாலை) நா. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம்
13 1904 தமிழ்ச் சொல்லகராதி (அகரம் மட்டும்) கு. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம்
14 1908 சிறப்புப் பெயர் அகராதி ஈக்காடு இரத்தினவேலு முதலியார்
15 1909 இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதி பி. ஆர். இராமநாதன்
16 1910 அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியார்
17 1910 தமிழ்ச் சொல்லகராதி-மூன்று தொகுதிகள் (மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடு) கு. கதிரைவேற்பிள்ளை
18 1911 தமிழ்மொழி அகராதி காஞ்சி நாகலிங்க முனிவர்
19 1914 இலக்கியச் சொல்லகராதி அ. குமாரசுவாமிப் பிள்ளை, சுன்னாகம்
20 1921 மாணவர் தமிழ் அகராதி எஸ். அனவரதவிநாயகம் பிள்ளை
21 1924 சொற்பொருள் விளக்கம் என்னும் தமிழகராதி ச. சுப்பிரமணிய சாஸ்திரி
22 1925 தற்காலத் தமிழ்ச்சொல் அகராதி ச. பவானந்தம் பிள்ளை
23 1926 தமிழ் லெக்சிகன் சென்னைப் பல்கலைக்கழகம்
24 1928 இளைஞர் தமிழ்க் கையகராதி மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை
25 1935 ஜூபிலி தமிழ்ப் பேரகராதி சங்கரலிங்க முதலியார்
26 1935 ஆனந்தவிகடன் அகராதி ஆனந்தவிகடன் ஆசிரியர் குழு
27 1935 நவீன தமிழ் அகராதி சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை
28 1937 மதுரைத் தமிழ்ப் பேரகராதி பண்டிதர் பலர் - இ. மா. கோபாலகிருஷ்ணக் கோனார் வெளியீடு
29 1938 சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி ரெ. எஸ். சுவாமி ஞானப்பிரகாசம்
30 1939 தமிழறிஞர் அகராதி சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை
31 1939 தமிழமிழ்த அகராதி சி.கிருஷ்ணசாமிப் பிள்ளை
32 1939 விக்டோரியா தமிழ் அகராதி எஸ். குப்புஸ்வாமி
33 1940 கழகத் தமிழ்க் கையகராதி சேலை சகதேவ முதலியார் & காழி சிவகண்ணுசாமிப்பிள்ளை
34 1950 செந்தமிழ் அகராதி ந.சி. கந்தையாப் பிள்ளை
35 1951 கம்பர் தமிழ் அகராதி வே. இராமச்சந்திர சர்மா
36 1955 சுருக்கத் தமிழ் அகராதி கலைமகள் ஆபீஸ்
37 1955 கோனார் தமிழ்க் அகராதி (கையடக்கப் பதிப்பு) ஐயன்பெருமாள் கோனார்
38 1957 தமிழ் இலக்கிய அகராதி பாலூர். து. கண்ணப்ப முதலியார்
39 1964 கழகத் தமிழ் அகராதி கழகப் புலவர் குழு-சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
40 1969 லிப்கோ தமிழ்-தமிழ் அகராதி லிஃப்கோ நிறுவணம்
41 1979 மணிமேகலைத் தமிழகராதி மணிமேகலைப் பிரசுரம்
42 1980 தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி அனந்தநாராயணன்
43 1984 தமிழ்-தமிழ் அகரமுதலி மு.சண்முகம்பிள்ளை (தொகுப்பாசிரியர்)
44 1984 செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி ஞா. தேவநேயப் பாவாணர்
45 1989 தமிழ் இலக்கியக் கலைச்சொல் அகராதி டாக்டர் ப. கோபாலன்
46 2009 தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி அன்னிதாமசு, ஜெ. சரஸ்வதி
47 2010 பெருஞ்சொல் அகராதி தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்