இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1972
From Tamil Wiki
இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்
இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1972
மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
---|---|---|---|
ஜனவரி | வெளியே ஒருவன் | நா. ஜெயராமன் | கசடதபற |
பிப்ரவரி | நான்காம் ஆசிரமம் | ஆர். சூடாமணி | கணையாழி |
மார்ச் | மயான காண்டம் | வண்ணநிலவன் | தாமரை |
ஏப்ரல் | உரத்த முணுமுணுப்புகள் | விட்டல் ராவ் | தினமணி கதிர் |
மே | பைத்தியக்காரப் பிள்ளை | எம்.வி. வெங்கட்ராம் | ஆனந்த விகடன் |
ஜூன் | சிறகுகள் முறியும் | அம்பை | கணையாழி |
ஜூலை | மூன்றாவது டெலிபோன் கால் | எம்.எஸ். பெருமாள் | செம்மலர் |
ஆகஸ்ட் | எலி | அசோகமித்திரன் | கணையாழி |
செப்டம்பர் | ஒரு செருசலேம் | பா. செயப்பிரகாசம் | தாமரை |
அக்டோபர் | மானுடம் வாழ்வது ? | ஜெகசிற்பியன் | ஆனந்த விகடன் |
நவம்பர் | திடீர்க் குபேரன் | வல்லிக்கண்ணன் | வண்ணங்கள் |
டிசம்பர் | வேறு யாரை அறைவது ? | கம்பராயன் | செம்மலர் |
1972 -ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை
1972 -ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, ஆர். சூடாமணி எழுதிய ‘நான்காம் ஆசிரமம்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. தி.சா. ராஜு இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை கா.ஸ்ரீ.ஸ்ரீ. தேர்ந்தெடுத்தார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
30-Jan-2023, 05:44:38 IST