செம்மலர் (இதழ்)

From Tamil Wiki
செம்மலர் 2021 - முகப்பு

முற்போக்கு இலக்கியங்களை வெளியிடுவது, நல்ல படைப்பாளிகளை ஊக்குவிப்பது ஆரோக்கியமான சமூகச்சூழலை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மதுரையிலிருந்து வெளிவருகிற மாத இதழ் 'செம்மலர்'.

மேலாண்மை பொன்னுச்சாமி போன்ற பல முக்கிய எழுத்தாளர்கள் செம்மலர் இதழால் அறியப்பட்ட பெருமைக்குரியவர்கள்.

துவக்கம்

'செம்மலர்' இதழ் 1970-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேல் வெளிவந்துகொண்டிருக்கிறது.

துவக்கத்தில் கு.சின்னப்பாரதி ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் இடையில் கே.முத்தையா நீண்டகாலம் ஆசிரியராகவும், தற்போது எஸ்.ஏ. பெருமாள் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

உள்ளடக்கம்

ஆரம்பகாலத்தில் சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகப்படியான சிறுகதைகளை வெளியிட்டு வந்தது. பின்னர் நூல் மதிப்புரை, கவிதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், நேர்காணல்கள், தமிழ்ப் பழமொழிகள் போன்றவை இடம்பெறத் துவங்கின.

ஒவ்வொரு மாதமும் வெளிவரக்கூடிய சிறுகதைகளில் இருந்து, சிறந்த கதைகளைத் தேர்வு செய்து 'சிகரசிறுகதைகள்' என பாராட்டி வெளியிட்டு சன்மானமும் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

வேலூர் சிப்பாய் புரட்சி தினம்

வேலூர் சிப்பாய் புரட்சி நூறாவது ஆண்டு விழாவையொட்டி 'வேலூர் சிப்பாய் புரட்சி சிறப்பிதழ்' வெளியிட்டது செம்மலர். அதற்குப் பிறகு தான் அரசு 'வேலூர் சிப்பாய் புரட்சி தினம்' ஏற்படுத்தியது என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

படைப்பாளர்கள்

உசாத்துணை