under review

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-மொழிபெயர்ப்பு விருது

From Tamil Wiki
Revision as of 14:38, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் உலக அளவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளிக்கிறது. அவற்றுள் மொழிபெயர்ப்புக்காக வழங்கப்படும் விருதும் ஒன்று.

கனடா இலக்கியத் தோட்டம்-மொழிபெயர்ப்பு விருது

தமிழ் இலக்கியத் தோட்டம், கனடாவில் இருந்து இயங்கி வரும் இலக்கிய அமைப்பு. உலகளாவிய அலவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளித்து வருகிறது. அவற்றுள் ‘மொழிபெயர்ப்பு’க்காக வழங்கப்படும் விருதும் ஒன்று. இவ்விருது 2011 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது, கேடயமும் 500/- கனடியன் டாலர் பரிசுத்தொகையும் கொண்டது.

மொழிபெயர்ப்பு விருது பெற்றோர் பட்டியல்

ஆண்டு மொழிபெயர்ப்பாளர் நூல் மூல நூல் மூல நூல் ஆசிரியர் மொழியாக்க வகைமை
2011 ஜி.குப்புசாமி என் பெயர் சிவப்பு My Name is Red ஓரான் பாமுக் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு
2012 எம். ஏ. சுசீலா அசடன் The Idiot பியோதர் தஸ்தயெவ்ஸ்கி ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு
2012 வைதேகி ஹெர்பர்ட் முல்லைப்பாட்டு மற்றும் நெடுநல்வாடை முல்லைப்பாட்டு & நெடுநல்வாடை சங்கப் புலவர்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு
2013 சி. மோகன் ஓநாய் குலச்சின்னம் Wolf Totem ஜியாங் ரோங் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு
2013 அனிருத்தன் வாசுதேவன் One Part Woman மாதொருபாகன் பெருமாள் முருகன் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு
2014 சொர்ணவேல் ஈஸ்வரன் பிள்ளை Madras Studios – Narrative Genre and Ideology in Tamil Cinema சொர்ணவேல் ஈஸ்வரன் பிள்ளை ஆங்கிலம்
2014 கே. வி. ஷைலஜா யாருக்கும் வேண்டாத கண் ஆருக்கும் வேண்டாத ஒரு கண்ணு சிஹாபுதின் பொய்த்தும்கடவு மலையாளத்திலிருந்து தமிழுக்கு
2015 ந. கல்யாணராமன் Farewell, Mahatma தேவிபாரதியின் சிறுகதைகள் தேவிபாரதி தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு
2015 புவியரசு மிர்தாதின் புத்தகம் The Book of Mirdad Mikhail Naimy ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு
2016 எம். ரிஷான் ஷெரீப் இறுதி மணித்தியாலம் சிங்களக் கவிதைத் தொகுப்பு மஹேஷ் முணசிங்க சிங்களத்திலிருந்து தமிழுக்கு
2016 ஈவ்லின் மாசிலாமணி Bananenblatter und StraBenstaub வாழை இலையும் வீதிப்புழுதியும் (சிறுகதைத் தொகுப்பு) தமிழிலிருந்து ஜெர்மன் மொழிக்கு
2017 டி. ஐ. அரவிந்தன் பாலசரஸ்வதி - வாழ்வும் கலையும் Balasaraswathi - Her Life and Art டக்லஸ் எம்.நைட் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு
2018 இரா. முருகன் பீரங்கிப் பாடல்கள் லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள் என். எஸ். மாதவன் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு
2018 முனைவர் ஆர். கார்த்திகேசு Beyond the Sea கடலுக்கு அப்பால் ப.சிங்காரம் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு
2021 முனைவர் மார்த்தா ஆன் செல்பி Cat in the Agraharam and other stories கடவு - சிறுகதைத் தொகுப்பு திலீப் குமார் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு
2022 சிவசங்கரி இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு Knit India Through Literature சிவசங்கரி ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு

உசாத்துணை


✅Finalised Page