ஆ. மாதவன்: Difference between revisions
No edit summary |
(Corrected Category:இதழாசிரியர்கள் to Category:இதழாசிரியர்Corrected Category:இலக்கிய விமர்சகர்கள் to Category:இலக்கிய விமர்சகர்Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்Corrected Category:சிறுகதையாசிரியர்கள் to Category:சிறுகதையாசிரியர்Corrected Category:நாவலாசிரியர்கள் to Category:நாவலாசிரியர்) |
||
(28 intermediate revisions by 6 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=மாதவன்|DisambPageTitle=[[மாதவன் (பெயர் பட்டியல்)]]}} | |||
{{Read English|Name of target article=A. Madhavan|Title of target article=A. Madhavan}} | {{Read English|Name of target article=A. Madhavan|Title of target article=A. Madhavan}} | ||
[[File:Screenshot 20220202-112152 Kindle(1).jpg|thumb|Photo Credit - https://sahitya-akademi.gov.in/library/meettheauthor/aa_madhavan.pdf]] | [[File:Screenshot 20220202-112152 Kindle(1).jpg|thumb|Photo Credit - https://sahitya-akademi.gov.in/library/meettheauthor/aa_madhavan.pdf]] | ||
Line 4: | Line 5: | ||
[[File:கடைத்தெருவின் கலைஞன்.jpg|thumb|கடைத்தெருவின் கலைஞன்]] | [[File:கடைத்தெருவின் கலைஞன்.jpg|thumb|கடைத்தெருவின் கலைஞன்]] | ||
[[File:ஆ.மாதவன் கையெழுத்து.jpg|thumb|ஆ.மாதவன் கையெழுத்து]] | [[File:ஆ.மாதவன் கையெழுத்து.jpg|thumb|ஆ.மாதவன் கையெழுத்து]] | ||
[[File:ஆ.மாதவன் சாகித்ய அக்காதமி.jpg|thumb|ஆ.மாதவன் சாகித்ய அக்காதமி]] | |||
ஆ. மாதவன் (பிப்ரவரி 7, 1934 – ஜனவரி 5, 2021) கேரளா திருவனந்தபுரத்தில் பிறந்து வாழ்ந்த தமிழ் எழுத்தாளர். தமிழ் நவீன இலக்கியத்தில் யதார்த்தவாத எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, இதழாசிரியர் என்று பல இலக்கியத்தளங்களில் இயங்கியவர். தான் வாழ்ந்த கடைத்தெருவின் அன்றாட நிகழ்வுகளை தன்னுடைய படைப்புகளில் கொண்டுவந்தமையால் கடைத்தெருவின் கதைசொல்லி என்று வாசகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டவர். | ஆ. மாதவன் (பிப்ரவரி 7, 1934 – ஜனவரி 5, 2021) கேரளா திருவனந்தபுரத்தில் பிறந்து வாழ்ந்த தமிழ் எழுத்தாளர். தமிழ் நவீன இலக்கியத்தில் யதார்த்தவாத எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, இதழாசிரியர் என்று பல இலக்கியத்தளங்களில் இயங்கியவர். தான் வாழ்ந்த கடைத்தெருவின் அன்றாட நிகழ்வுகளை தன்னுடைய படைப்புகளில் கொண்டுவந்தமையால் கடைத்தெருவின் கதைசொல்லி என்று வாசகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டவர். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
ஆ. மாதவன் பிப்ரவரி 7, 1934-ல் ஆவுடைநாயகம், செல்லம்மாள் | ஆ. மாதவன் பிப்ரவரி 7, 1934-ல் ஆவுடைநாயகம், செல்லம்மாள் தம்பதியின்நான்காவது மகனாக திருவனந்தபுரத்தில் பிறந்தார். ஆவுடைநாயகத்துக்கு ஆ.மாதவனின் அம்மாவில் செல்வமணி, ஆறுமுகம், சண்முகம், மாதவன், சோமசுந்தரம், சாந்தி கிராமச்சந்திரன் என்று ஆறு குழந்தைகள். | ||
ஆ.மாதவனின் தாத்தா சோமசுந்தரம் பிள்ளை தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர். சோமசுந்தரம் பிள்ளை திருவனந்தபுரம் வந்து கலால் காண்டிராக்டராக பணியாற்றி செல்வம் சேர்த்து திருவனந்தபுரம் ஜகதி என்ற இடத்தில் வாழ்ந்தார். அவருடைய இரண்டு மனைவியரில் மூத்ததாரத்தின் மூத்தமகன் ஆ.மாதவனின் தந்தை ஆவுடை நாயகம். ஆவுடைநாயகத்தின் முதல் மனைவி பகவதியம்மாள். இரண்டாவது மனைவியான ஆ.மாதவனின் அம்மா செல்லம்மாவின் சொந்த ஊர் நாகர்கோயில் அருகே கொட்டாரம். அவர்களும் திருவனந்தபுரத்திற்கு வந்து வாழ்ந்துகொண்டிருந்தனர். செல்லம்மாளை ஆவுடைநாயகம் மணந்ததை விரும்பாத சோமசுந்தரம் பிள்ளை அவரை துரத்திவிடவே அவர் திருவனந்தபுரம் பயோனிக் மோட்டார் நிறுவனத்தில் நடத்துநராக பணியாற்றினார். | ஆ.மாதவனின் தாத்தா சோமசுந்தரம் பிள்ளை தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர். சோமசுந்தரம் பிள்ளை திருவனந்தபுரம் வந்து கலால் காண்டிராக்டராக பணியாற்றி செல்வம் சேர்த்து திருவனந்தபுரம் ஜகதி என்ற இடத்தில் வாழ்ந்தார். அவருடைய இரண்டு மனைவியரில் மூத்ததாரத்தின் மூத்தமகன் ஆ.மாதவனின் தந்தை ஆவுடை நாயகம். ஆவுடைநாயகத்தின் முதல் மனைவி பகவதியம்மாள். இரண்டாவது மனைவியான ஆ.மாதவனின் அம்மா செல்லம்மாவின் சொந்த ஊர் நாகர்கோயில் அருகே கொட்டாரம். அவர்களும் திருவனந்தபுரத்திற்கு வந்து வாழ்ந்துகொண்டிருந்தனர். செல்லம்மாளை ஆவுடைநாயகம் மணந்ததை விரும்பாத சோமசுந்தரம் பிள்ளை அவரை துரத்திவிடவே அவர் திருவனந்தபுரம் பயோனிக் மோட்டார் நிறுவனத்தில் நடத்துநராக பணியாற்றினார். | ||
Line 13: | Line 15: | ||
[[File:Aa. Madhavan and his wife.jpg|thumb|500x500px]] | [[File:Aa. Madhavan and his wife.jpg|thumb|500x500px]] | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
ஆ. மாதவனின் மனைவி சாந்தா என்கின்ற சூர்ய குமாரி. இவர்களுக்கு 1966-ல் திருமணமானது. கலைச்செல்வி, மலர்ச்செல்வி என்ற இரு மகள்களும் கோவிந்தராஜன் என்ற மகனும் இருந்தனர். 2002-ல் மனைவியும், 2004-ல் மகனும் மறைந்துவிட்டனர். மாதவன் மகளுடன் வசித்து | 1949-ல் ஆ.மாதவன் படிப்பை நிறுத்திவிட்டு தன் அண்ணன் செல்வமணி நடத்திவந்த கடையில் கடைப்பையனாக சேர்ந்தார். 1963-ல் ஆரியசாலையிலேயே செல்வி ஸ்டோர்ஸ் என்னும் பாத்திரம், பிளாஸ்டிக் சாமான்கள் விற்கும்கடையை தொடங்கி தன்னுடைய 75-ஆவது வயது வரை நடத்தி வந்தார். | ||
== | |||
ஆ. மாதவனின் மனைவி சாந்தா என்கின்ற சூர்ய குமாரி. இவர்களுக்கு 1966-ல் திருமணமானது. கலைச்செல்வி, மலர்ச்செல்வி என்ற இரு மகள்களும் கோவிந்தராஜன் என்ற மகனும் இருந்தனர். 2002-ல் மனைவியும், 2004-ல் மகனும் மறைந்துவிட்டனர். மாதவன் மகளுடன் வசித்து வந்தார். | |||
== இலக்கியப் பங்களிப்பு == | |||
====== தொடக்க காலம் ====== | ====== தொடக்க காலம் ====== | ||
[[File:ஆ.மாதவன் இலக்கியத் தடம்.png|thumb|ஆ.மாதவன் இலக்கியத்தடம்]] | [[File:ஆ.மாதவன் இலக்கியத் தடம்.png|thumb|ஆ.மாதவன் இலக்கியத்தடம்]] | ||
பள்ளிக் கல்வி வரை மலையாளத்தில் கற்றவர், தன்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தினால் தமிழை கற்றுக் கொண்டார். | பள்ளிக் கல்வி வரை மலையாளத்தில் கற்றவர், தன்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தினால் தமிழை கற்றுக் கொண்டார். 1952-ல் எஸ்.கே.பொற்றேக்காட்டின் சில கதைகளை மொழியாக்கம் செய்து இமையம் என்னும் இதழில் வெளியிட்டார். பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியூகோவின் குறுநாவல் 'கழுமரம்’ என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்திருந்தது. அதை தமிழில் மொழிபெயர்த்து 1955-ல் 'சிறுகதை’ என்ற இதழில் தொடராக வெளியிட்டார். அது அவரை கவனிக்க வைத்த முதல் படைப்பு. தொடர்ந்து ஆ.மாதவனின் பல்வேறு மொழிபெயர்ப்புகளை 'சிறுகதை’ இதழ் வெளியிட்டது. | ||
====== திராவிட இயக்க இதழ்களில் ====== | ====== திராவிட இயக்க இதழ்களில் ====== | ||
ஆ.மாதவன் டெகாமரண் கதைகளைப் படித்து அதில் பத்து கதைகளை மொழிபெயர்த்தார். அவற்றை | ஆ.மாதவன் டெகாமரண் கதைகளைப் படித்து அதில் பத்து கதைகளை மொழிபெயர்த்தார். அவற்றை 'பகுத்தறிவு’ எனும் மாத இதழ் பிரசுரம் செய்தது. யேசுகிறிஸ்து முறைதவறி பிறந்தார் என்னும் கருவுடன் மலையாளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்த ஒரு கதையை மொழிப்பெயர்த்து 'திராவிடன்’ வாரஇதழில் வெளியிட்டார். அது விவாதத்தை உருவாக்கியது. | ||
ஐயபேரிகை என்ற திராவிட இயக்கப் பத்திரிகை, 1958ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆ.மாதவனின் சிறுகதை முதல் பரிசு 100 பெற்றது. புலவர் அறிவுடை நம்பி, கடலூரிலிருந்து நடத்திவந்த | ஐயபேரிகை என்ற திராவிட இயக்கப் பத்திரிகை, 1958ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆ.மாதவனின் சிறுகதை முதல் பரிசு 100 பெற்றது. புலவர் அறிவுடை நம்பி, கடலூரிலிருந்து நடத்திவந்த 'செண்பகம்’ இதழில் பொங்கல் மலரில் எனது கதையொன்றை வெளியிட்டு, "சிறுகதைச் செல்வர்" என்று பட்டமும் சூட்டியிருந்தது. அக்காலத்தில் திராவிட இயக்க இதழ்கள் வெளியிடும் பொங்கல் மலர்களில் ஆ. மாதவனின் கதைகள் சிறப்பிடம் பெற்றன. முரசொலி பொங்கல் இதழில் ஆ. மாதவன் என்னும் பெயர் அட்டையில் [[அண்ணாத்துரை|சி.என்.அண்ணாத்துரை]], [[மு.கருணாநிதி]], [[எஸ்.எஸ்.தென்னரசு]], [[முடியரசன்]] பெயர்களுடன் வெளிவருமளவு அறியப்பட்டவராக திகழ்ந்தார், | ||
====== நவீனஇலக்கியத்திற்கு ====== | ====== நவீனஇலக்கியத்திற்கு ====== | ||
ஆ.மாதவன் அன்றைய பொதுவாசிப்புச் சூழலில் அறிமுகமானவராக இருந்தார். அக்கால புகழ்பெற்ற இதழான [[அரு.ராமநாதன்|அரு.ராமநாத]]னின் | ஆ.மாதவன் அன்றைய பொதுவாசிப்புச் சூழலில் அறிமுகமானவராக இருந்தார். அக்கால புகழ்பெற்ற இதழான [[அரு. ராமநாதன்|அரு.ராமநாத]]னின் "[[காதல்]]" மாத இதழ் அவர் எழுதிய அர்ச்சனை சிறுகதைக்கு அட்டை ஓவியம் வெளியிட்டது. கவிஞர் [[கண்ணதாசன் (கவிஞர்)|கண்ணதாசன்]] [[தென்றல் இதழ்|தென்றல்]] இதழை ஆரம்பித்தபோது இரண்டாவது இதழிலேயே ஆ.மாதவனின் ’உனக்கும் எனக்கும் உறவுகாட்டி’ யை வெளியிட்டது . | ||
ஆ.மாதவனின் திருமண நிகழ்வு மாலையில் நடந்த ஒரு கலந்துரையாடலில் [[சுந்தர ராமசாமி]], [[கிருஷ்ணன் நம்பி]], [[எம்.சிவசுப்ரமணியம்]], இரா இளஞ்சேரன், கே.முருகேசன், ஜி.எம்.எல். பிரகாஷ், வை. நாறும்பூநாதன், [[நீல பத்மநாபன்]], [[நகுலன்]], [[ஹெப்சிபா ஜேசுதாசன்]] தம்பதியர் என பலர் குழுமியிருந்தபோது சுந்தர ராமசாமி அவரை இலக்கிய இதழ்களில் எழுதும்படிச் சொன்னார். அதை ஓர் அறைகூவலாக ஏற்றுக்கொண்டு 1965 தமிழ்ப் புத்தாண்டு முதல் [[நா. பார்த்தசாரதி]]யின் ஆசிரியர் பொறுப்பில் துவங்கப்பட்டு வெளிவந்துகொண்டிருந்த [[தீபம்]] இதழில் பாச்சி என்னும் கதையை எழுதினார். அதை சுந்தர ராமசாமி. கிருஷ்ணன் நம்பி போன்றவர்கள் பாராட்டினர். அக்கதையை வாசித்த [[தி.க.சிவசங்கரன்]] [[தாமரை (இதழ்)|தாமரை]] இதழில் எழுதும்படி கோரினார்.தாமரை வருட நிறைவு சிறுகதை மலரில் | ஆ.மாதவனின் திருமண நிகழ்வு மாலையில் நடந்த ஒரு கலந்துரையாடலில் [[சுந்தர ராமசாமி]], [[கிருஷ்ணன் நம்பி]], [[எம்.சிவசுப்ரமணியம்]], இரா இளஞ்சேரன், கே.முருகேசன், ஜி.எம்.எல். பிரகாஷ், வை. நாறும்பூநாதன், [[நீல பத்மநாபன்]], [[நகுலன்]], [[ஹெப்சிபா ஜேசுதாசன்]] தம்பதியர் என பலர் குழுமியிருந்தபோது சுந்தர ராமசாமி அவரை இலக்கிய இதழ்களில் எழுதும்படிச் சொன்னார். அதை ஓர் அறைகூவலாக ஏற்றுக்கொண்டு 1965 தமிழ்ப் புத்தாண்டு முதல் [[நா. பார்த்தசாரதி]]யின் ஆசிரியர் பொறுப்பில் துவங்கப்பட்டு வெளிவந்துகொண்டிருந்த [[தீபம் (இலக்கிய இதழ்)|தீபம்]] இதழில் பாச்சி என்னும் கதையை எழுதினார். அதை சுந்தர ராமசாமி. கிருஷ்ணன் நம்பி போன்றவர்கள் பாராட்டினர். அக்கதையை வாசித்த [[தி.க.சிவசங்கரன்]] [[தாமரை (இதழ்)|தாமரை]] இதழில் எழுதும்படி கோரினார். தாமரை வருட நிறைவு சிறுகதை மலரில் 'பதினாலு முறி’ சிறப்புக் குறிப்புரையுடன் வெளிவந்தது. பிறகு தாமரையின் ஒவ்வொரு மலரிலும் ஆ.மாதவனின் கதை தவறாது இடம்பெற்றது. தீபம், தாமரை இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார். | ||
சிறுகதைகள் | சிறுகதைகள் | ||
1974-ல் ஆ. மாதவனின் முதல் சிறுகதைத் தொகுதியான | 1974-ல் ஆ. மாதவனின் முதல் சிறுகதைத் தொகுதியான 'மோகபல்லவி’யை சென்னை கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. அதே ஆண்டு கடைத்தெருக் கதைகள் என்னும் பதினாறு கதைகள்கொண்ட தொகுதியை மாதவனே வெளியிட்டார்., 'காமினிமூலம்', 'மாதவன் கதைகள்', 'ஆனைச்சந்தம்', 'அரேபியக்குதிரை' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கின்றன. அவருடைய 'நாயனம்’, 'பூனை’, 'பதினாலுமுறி’, 'புறா முட்டை’, 'தண்ணீர்’, 'அன்னக்கிளி’ஆகிய கதைகள் குறிப்பிடத்தக்கவை.வாழ்நாளெல்லாம் குற்றவாளியாக மட்டுமே இருந்த சாளைப்பட்டாணி தன்னுடைய இறுதி நாட்களில் நோய்வாய்ப் பட்டு அவதிப்படுகின்ற நிலையை விளக்கிய 'எட்டாவது நாள்' குறுநாவல் ஆ. மாதவனுடைய படைப்புகளில் பரவலாகப் பேசப்பட்டது. | ||
====== நாவல்கள் ====== | ====== நாவல்கள் ====== | ||
ஆ.மாதவனின் முதல் நாவலான | ஆ.மாதவனின் முதல் நாவலான 'புனலும் மணலும்’ கரமனையாற்றில் மணல் அள்ளும் ஒரு குடும்பத்தின் கதை. 1974-ல் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வாசகர் வட்டம் அதை வெளியிட்டது. 1982-ல் வெளியான 'கிருஷ்ணப்பருந்து' நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. | ||
====== மொழியாக்கங்கள் ====== | ====== மொழியாக்கங்கள் ====== | ||
ஆ. மாதவன் மொழிபெயர்ப்பாளராகவும் தமிழுக்கு முக்கிய பங்காற்றி இருக்கின்றார். 1974-ல் காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய சம்மானம் எனும் குறுநாவலை தமிழாக்கம் செய்தார். 2002-ல் சாகித்ய அகாதெமி வெளியிட்ட மலையாள எழுத்தாளர் பி. கெ. பாலகிருஷ்ணனின் 'இனி ஞான் உறங்ஙட்டே' என்ற நாவலை 'இனி நான் உறங்கட்டும்' என்ற பேரில் மொழியாக்கம் செய்தார். மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் | ஆ. மாதவன் மொழிபெயர்ப்பாளராகவும் தமிழுக்கு முக்கிய பங்காற்றி இருக்கின்றார். 1974-ல் காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய சம்மானம் எனும் குறுநாவலை தமிழாக்கம் செய்தார். 2002-ல் சாகித்ய அகாதெமி வெளியிட்ட மலையாள எழுத்தாளர் பி. கெ. பாலகிருஷ்ணனின் 'இனி ஞான் உறங்ஙட்டே' என்ற நாவலை 'இனி நான் உறங்கட்டும்' என்ற பேரில் மொழியாக்கம் செய்தார். மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் 'யட்சி’ என்ற நாவலையும் தமிழுக்கு கொண்டு வந்திருக்கின்றார். | ||
== இதழியல் == | == இதழியல் == | ||
* 1978-ல் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க வெளியீடாக ஆரம்பிக்கப்பட்ட 'கேரளத்தமிழ்' என்னும் ஏடு கேரளா வாழ் தமிழர் வாழ்வின் இலக்கிய முகமாக விளங்கியது. | * 1978-ல் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க வெளியீடாக ஆரம்பிக்கப்பட்ட 'கேரளத்தமிழ்' என்னும் ஏடு கேரளா வாழ் தமிழர் வாழ்வின் இலக்கிய முகமாக விளங்கியது. ஆ. மாதவனை ஆசிரியராகக் கொண்டு பல்வேறு முன்னணி எழுத்தாளர்களுடைய படைப்புகளையும் நினைவுகளையும் சுமந்து அது வெளிவந்தது. 1978 முதல் 1985 வரை கேரளத்தமிழ் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. அவை ஆ.மாதவனால் தொகுக்கப்பட்டன | ||
* 1981-ல் நா. பார்த்தசாரதியின் தீபம் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தார். | * 1981-ல் நா. பார்த்தசாரதியின் தீபம் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தார். | ||
== அமைப்புப்பணிகள் == | == அமைப்புப்பணிகள் == | ||
1963 ல் தொடங்கப்பட்ட திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தை தொடங்கியவர்களில் ஆ.மாதவன் ஒருவர். ஆயிரத்துக்கும் அதிகமான நூல்களைக் கொண்டு நகரின் மிகப்பெரிய நூலகமாகவும், கலாச்சார அரங்கமாகவும் திகழ்கின்ற | 1963-ல் தொடங்கப்பட்ட திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தை தொடங்கியவர்களில் ஆ.மாதவன் ஒருவர். ஆயிரத்துக்கும் அதிகமான நூல்களைக் கொண்டு நகரின் மிகப்பெரிய நூலகமாகவும், கலாச்சார அரங்கமாகவும் திகழ்கின்ற திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சியில் ஆ. மாதவனின் பங்கு மிக முக்கியமானது. சங்கச் செயலாளராகவும் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். | ||
[[File:Aa. Madhavan receiving award.jpg|thumb|500x500px]] | [[File:Aa. Madhavan receiving award.jpg|thumb|500x500px]] | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
* செண்பகம் இலக்கிய அமைப்பு வழங்கிய சிறுகதைச் செல்வர் பட்டம் - 1977 | * செண்பகம் இலக்கிய அமைப்பு வழங்கிய சிறுகதைச் செல்வர் பட்டம் - 1977 | ||
* திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் சிறந்த சிறுகதை | * திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் சிறந்த சிறுகதை நூல்விருது (அரேபியக்குதிரை) - 1994 | ||
* மொழி பெயர்ப்புகளுக்காக உள்ளூர் பரமேஸ்வர அய்யர் நினைவுப் பரிசு - 2002 | * மொழி பெயர்ப்புகளுக்காக உள்ளூர் பரமேஸ்வர அய்யர் நினைவுப் பரிசு - 2002 | ||
* கன்னியாகுமரி மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய தமிழ் மாமணி பட்டம் - 2003 | * கன்னியாகுமரி மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய தமிழ் மாமணி பட்டம் - 2003 | ||
* 2007 தமிழக அரசின் இயல் துறைக்கான கலைமாமணி விருது | * 2007 தமிழக அரசின் இயல் துறைக்கான கலைமாமணி விருது | ||
* 2010- | * 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் விஷ்ணுபுரம் இலக்கிய விருது | ||
* 2015 | * 2015 'இலக்கிய சுவடுகள்’ என்ற திறனாய்வுக் கட்டுரை நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது. | ||
== மறைவு == | == மறைவு == | ||
ஆ மாதவன் ஜனவரி 5, 2021 அன்று தன்னுடைய 86-ஆவது வயதில் திருவனந்தபுரத்தில் காலமானார். | ஆ மாதவன் ஜனவரி 5, 2021 அன்று தன்னுடைய 86-ஆவது வயதில் திருவனந்தபுரத்தில் காலமானார். | ||
Line 53: | Line 57: | ||
2010-ல் விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டபோது இவரது இலக்கிய உலகை திறனாய்வு செய்து 'கடைத்தெருவின் கலைஞன்' என்ற நூலை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வெளியிட்டது. | 2010-ல் விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டபோது இவரது இலக்கிய உலகை திறனாய்வு செய்து 'கடைத்தெருவின் கலைஞன்' என்ற நூலை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வெளியிட்டது. | ||
2021 ல் ஆ.மாதவன் இலக்கியத்தடம் நெல்லை சு.முத்துவால் தொகுக்கப்பட்டு அருள்பதிப்பகம் சென்னை வெளியீடாக வந்தது | 2021-ல் ஆ.மாதவன் இலக்கியத்தடம் நெல்லை சு.முத்துவால் தொகுக்கப்பட்டு அருள்பதிப்பகம் சென்னை வெளியீடாக வந்தது | ||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பு முடிந்த உடன் வணிகத்துக்குள் நுழைந்து விட்டார். ஆயினும் இலக்கிய ஆர்வமும் தேடலும் மிகுந்தவராக இருந்தார்.பள்ளிக்காலத்தில் தீவிர வாசகராக இருந்தார். அப்போது வாசிக்கக் கிடைத்த புத்தகங்கள், இதழ்கள்தான் தன்னை ஒரு கதாசிரியனாக ஆக்கின என்று ஆ. மாதவன் குறிப்பிட்டார். அவருடைய ஆரம்ப கால படைப்புகள் | குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பு முடிந்த உடன் வணிகத்துக்குள் நுழைந்து விட்டார். ஆயினும் இலக்கிய ஆர்வமும் தேடலும் மிகுந்தவராக இருந்தார். பள்ளிக்காலத்தில் தீவிர வாசகராக இருந்தார். அப்போது வாசிக்கக் கிடைத்த புத்தகங்கள், இதழ்கள்தான் தன்னை ஒரு கதாசிரியனாக ஆக்கின என்று ஆ. மாதவன் குறிப்பிட்டார். அவருடைய ஆரம்ப கால படைப்புகள் பெரும்பாலும் திராவிட இயக்கம் சார்ந்த நாளிதழ்கள், சஞ்சிகைகளில் வெளிவந்தன. ஆனால் அவருடைய படைப்புகளில் அரசியல் இருக்கவில்லை. சமூக சீர்திருத்தம் சார்ந்த பார்வையிலேயே பெரும்பாலும் எழுதினார். பின்னாளில் அவருடைய இலக்கிய நண்பர்களுடைய தூண்டுதலால் யதார்த்தவாத எழுத்துக்கு மாறினார். | ||
தன்னுடைய ஆயுளின் பெரும்பகுதியை ஆ. மாதவன் திருவனந்தபுரம் சாலை கம்போளத்தில் ஒரு வியாபாரியாகத்தான் கழித்தார். அங்கு வாழ்ந்த பலதரப்பட்ட மனிதர்கள், விலங்குகள், பொருட்கள் என தன் கருத்தைக் கவர்ந்த அனைத்தையும் படைப்புகளில் கொண்டு வந்தார். ஒரு கடைத் தொகுதியின் தெளிவான குறுக்குவெட்டுத் தோற்றத்தை தன்னுடைய கதைகளின் வழியாகக் காட்டியதால் ஆ. மாதவன் கடைத் தெருவின் கதைசொல்லி என்று அழைக்கப்படுகின்றார். கேரளத்தில் இரண்டு தெருக்களே இலக்கியத்தில் முழுமையாக பதிவானவை, ஆ.மாதவனின் சாலைத் தெருவும் எஸ்.கே.பொற்றேக்காட் எழுதிய கோழிக்கோடின் மிட்டாய்த்தெருவும். | தன்னுடைய ஆயுளின் பெரும்பகுதியை ஆ. மாதவன் திருவனந்தபுரம் சாலை கம்போளத்தில் ஒரு வியாபாரியாகத்தான் கழித்தார். அங்கு வாழ்ந்த பலதரப்பட்ட மனிதர்கள், விலங்குகள், பொருட்கள் என தன் கருத்தைக் கவர்ந்த அனைத்தையும் படைப்புகளில் கொண்டு வந்தார். ஒரு கடைத் தொகுதியின் தெளிவான குறுக்குவெட்டுத் தோற்றத்தை தன்னுடைய கதைகளின் வழியாகக் காட்டியதால் ஆ. மாதவன் கடைத் தெருவின் கதைசொல்லி என்று அழைக்கப்படுகின்றார். கேரளத்தில் இரண்டு தெருக்களே இலக்கியத்தில் முழுமையாக பதிவானவை, ஆ.மாதவனின் சாலைத் தெருவும் எஸ்.கே.பொற்றேக்காட் எழுதிய கோழிக்கோடின் மிட்டாய்த்தெருவும். | ||
பசி, காமம், வன்முறை போன்ற அந்தரங்கமான உணர்வு சார்ந்த விஷயங்களை நுட்பமாகக் கூறும் எழுத்துக்களின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் ஆ. மாதவன். உலகின் எல்லா அவலங்களுக்கும், அனர்த்தங்களுக்கும், அர்த்தங்களுக்கும் எடுத்துக்காட்டு வடிவங்கள் இந்தத் தெருவிலே உள்ளன என்று கருதினார்.அந்த வகையில் எளிய | பசி, காமம், வன்முறை போன்ற அந்தரங்கமான உணர்வு சார்ந்த விஷயங்களை நுட்பமாகக் கூறும் எழுத்துக்களின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் ஆ. மாதவன். உலகின் எல்லா அவலங்களுக்கும், அனர்த்தங்களுக்கும், அர்த்தங்களுக்கும் எடுத்துக்காட்டு வடிவங்கள் இந்தத் தெருவிலே உள்ளன என்று கருதினார்.அந்த வகையில் எளிய அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை யதார்த்தமான முறையில் கொண்டு வந்த படைப்புகளின் முன்னோடியாக ஆ. மாதவன் திகழ்கிறார். தமிழும் மலையாளமும் கலந்த அந்த வட்டார வழக்குக்கு ஒரு செழுமையையும் மதிப்புக்குரிய இடத்தையும் இலக்கிய உலகில் அளித்தார். | ||
ஆ.மாதவன் பற்றி [[ந. பிச்சமூர்த்தி]] | ஆ.மாதவன் பற்றி [[ந. பிச்சமூர்த்தி]] "மாதவன் படைப்புகள் கதைகளுக்குரிய விஷயங்களை தேர்ந்துள்ள விதத்திலும் அவற்றைச் சொல்லிச் செல்லும் முறையிலும் நடை நயத்திலும் தனித்தன்மை புலனாகிறது" என்று மதிப்பிட்டார். சுந்தர ராமசாமி "புதுமைப்பித்தனுக்கும் ஜி. நாகராஜனுக்கும் இடைப்பட்ட ஒரு யதார்த்தவாதியாக ஆ. மாதவனைச் சொல்லலாம். மனிதனின் அந்தரங்கங்களைக் கண்டு சொல்வதில் மிகுந்த ஆசை கொண்டவர் இவர். சுய அனுபவங்கள் சார்ந்து நிற்பதாலும் கோட்பாடுகளுக்காக மனித இயல்புகளை விட்டுக் கொடுக்க மறுப்பதாலும் எப்போதும் நம்பகத்தன்மை கொண்டுவிடுகின்றன இவரது கதைகள். பொருளாதார ஏற்றத்தாழ்வு போல - ஒருக்கால் அதற்கும் மேலாக - பாலுணர்ச்சி உந்தல்கள் மனிதனை ஆட்டிக் குலைக்கும் உண்மைக்கு அழுத்தம் தந்தவர். எவ்வாறு மனிதன் இருக்க வேண்டும் என்பது அல்ல - அவ்வாறு இல்லாமல் போனதற்கான விமர்சனமும் அல்ல நமது சுலபக் கணிப்புகளுக்கு அப்பால் மனிதன் எவ்வாறு இருந்து கொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்வதே இவர் அடிப்படை" என்கிறார் (கலைகள் கதைகள் சிறுகதைகள்) .ஜெயமோகன் "ஆ. மாதவன் சிறுதைகள் இயல்புவாதச் சிறுகதையின் உச்சநிலையில் இருந்து முன்னகர்ந்து நவீனத்துவ சிறுகதையின் எல்லைக்குள் நுழைந்தவை" என்று வரையறுக்கிறார். | ||
[[File:Aa Madhavan - Thiruvananthapuram Tamil sangam.jpg|thumb|500x500px]] | [[File:Aa Madhavan - Thiruvananthapuram Tamil sangam.jpg|thumb|500x500px]] | ||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
Line 78: | Line 82: | ||
* தூவானம் - 1990 | * தூவானம் - 1990 | ||
===== கட்டுரை ===== | ===== கட்டுரை ===== | ||
* இலக்கியச்சுவடுகள் - | * இலக்கியச்சுவடுகள் - 2015 | ||
===== மொழியாக்கம் ===== | ===== மொழியாக்கம் ===== | ||
* யட்சி [மூலம் | * யட்சி [மூலம் யக்ஷி, மலையாற்றூர் ராமகிருஷ்ணன்] | ||
* இனி நான் உறங்கட்டும் [மூலம் இனி ஞான் உறங்ஙட்டே, பி.கெ.பாலகிருஷ்ணன்] | * இனி நான் உறங்கட்டும் [மூலம் இனி ஞான் உறங்ஙட்டே, பி.கெ.பாலகிருஷ்ணன்] - 2002 | ||
* சம்மானம் [மூலம் காரூர் நீலகண்டப்பிள்ளை] - 1974 | * சம்மானம் [மூலம் காரூர் நீலகண்டப்பிள்ளை] - 1974 | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
Line 97: | Line 101: | ||
*[https://s-pasupathy.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF சுந்தர ராமசாமி கலைகள் கதைகள் சிறுகதைகள்] | *[https://s-pasupathy.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF சுந்தர ராமசாமி கலைகள் கதைகள் சிறுகதைகள்] | ||
*[https://www.hindutamil.in/news/literature/73416-.html ஒரு ஆளுமை, கோணங்கள் பல | ஒரு ஆளுமை, கோணங்கள் பல - hindutamil.in] | *[https://www.hindutamil.in/news/literature/73416-.html ஒரு ஆளுமை, கோணங்கள் பல | ஒரு ஆளுமை, கோணங்கள் பல - hindutamil.in] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|15-Nov-2022, 12:06:32 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] | |||
[[Category:இதழாசிரியர்]] | |||
[[Category:எழுத்தாளர்]] | |||
[[Category:நாவலாசிரியர்]] | |||
[[Category:இலக்கிய விமர்சகர்]] | |||
[[Category:சிறுகதையாசிரியர்]] |
Latest revision as of 11:53, 17 November 2024
- மாதவன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மாதவன் (பெயர் பட்டியல்)
To read the article in English: A. Madhavan.
ஆ. மாதவன் (பிப்ரவரி 7, 1934 – ஜனவரி 5, 2021) கேரளா திருவனந்தபுரத்தில் பிறந்து வாழ்ந்த தமிழ் எழுத்தாளர். தமிழ் நவீன இலக்கியத்தில் யதார்த்தவாத எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, இதழாசிரியர் என்று பல இலக்கியத்தளங்களில் இயங்கியவர். தான் வாழ்ந்த கடைத்தெருவின் அன்றாட நிகழ்வுகளை தன்னுடைய படைப்புகளில் கொண்டுவந்தமையால் கடைத்தெருவின் கதைசொல்லி என்று வாசகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டவர்.
பிறப்பு, கல்வி
ஆ. மாதவன் பிப்ரவரி 7, 1934-ல் ஆவுடைநாயகம், செல்லம்மாள் தம்பதியின்நான்காவது மகனாக திருவனந்தபுரத்தில் பிறந்தார். ஆவுடைநாயகத்துக்கு ஆ.மாதவனின் அம்மாவில் செல்வமணி, ஆறுமுகம், சண்முகம், மாதவன், சோமசுந்தரம், சாந்தி கிராமச்சந்திரன் என்று ஆறு குழந்தைகள்.
ஆ.மாதவனின் தாத்தா சோமசுந்தரம் பிள்ளை தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர். சோமசுந்தரம் பிள்ளை திருவனந்தபுரம் வந்து கலால் காண்டிராக்டராக பணியாற்றி செல்வம் சேர்த்து திருவனந்தபுரம் ஜகதி என்ற இடத்தில் வாழ்ந்தார். அவருடைய இரண்டு மனைவியரில் மூத்ததாரத்தின் மூத்தமகன் ஆ.மாதவனின் தந்தை ஆவுடை நாயகம். ஆவுடைநாயகத்தின் முதல் மனைவி பகவதியம்மாள். இரண்டாவது மனைவியான ஆ.மாதவனின் அம்மா செல்லம்மாவின் சொந்த ஊர் நாகர்கோயில் அருகே கொட்டாரம். அவர்களும் திருவனந்தபுரத்திற்கு வந்து வாழ்ந்துகொண்டிருந்தனர். செல்லம்மாளை ஆவுடைநாயகம் மணந்ததை விரும்பாத சோமசுந்தரம் பிள்ளை அவரை துரத்திவிடவே அவர் திருவனந்தபுரம் பயோனிக் மோட்டார் நிறுவனத்தில் நடத்துநராக பணியாற்றினார்.
திருவனந்தபுரம் ஆரியசாலையில் மலையாளம், எம்.எம். பள்ளியில் ஆரம்பித்த ஆ.மாதவனின் கல்வி பள்ளிப் படிப்போடு முடிவுக்கு வந்தது.
தனிவாழ்க்கை
1949-ல் ஆ.மாதவன் படிப்பை நிறுத்திவிட்டு தன் அண்ணன் செல்வமணி நடத்திவந்த கடையில் கடைப்பையனாக சேர்ந்தார். 1963-ல் ஆரியசாலையிலேயே செல்வி ஸ்டோர்ஸ் என்னும் பாத்திரம், பிளாஸ்டிக் சாமான்கள் விற்கும்கடையை தொடங்கி தன்னுடைய 75-ஆவது வயது வரை நடத்தி வந்தார்.
ஆ. மாதவனின் மனைவி சாந்தா என்கின்ற சூர்ய குமாரி. இவர்களுக்கு 1966-ல் திருமணமானது. கலைச்செல்வி, மலர்ச்செல்வி என்ற இரு மகள்களும் கோவிந்தராஜன் என்ற மகனும் இருந்தனர். 2002-ல் மனைவியும், 2004-ல் மகனும் மறைந்துவிட்டனர். மாதவன் மகளுடன் வசித்து வந்தார்.
இலக்கியப் பங்களிப்பு
தொடக்க காலம்
பள்ளிக் கல்வி வரை மலையாளத்தில் கற்றவர், தன்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தினால் தமிழை கற்றுக் கொண்டார். 1952-ல் எஸ்.கே.பொற்றேக்காட்டின் சில கதைகளை மொழியாக்கம் செய்து இமையம் என்னும் இதழில் வெளியிட்டார். பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியூகோவின் குறுநாவல் 'கழுமரம்’ என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்திருந்தது. அதை தமிழில் மொழிபெயர்த்து 1955-ல் 'சிறுகதை’ என்ற இதழில் தொடராக வெளியிட்டார். அது அவரை கவனிக்க வைத்த முதல் படைப்பு. தொடர்ந்து ஆ.மாதவனின் பல்வேறு மொழிபெயர்ப்புகளை 'சிறுகதை’ இதழ் வெளியிட்டது.
திராவிட இயக்க இதழ்களில்
ஆ.மாதவன் டெகாமரண் கதைகளைப் படித்து அதில் பத்து கதைகளை மொழிபெயர்த்தார். அவற்றை 'பகுத்தறிவு’ எனும் மாத இதழ் பிரசுரம் செய்தது. யேசுகிறிஸ்து முறைதவறி பிறந்தார் என்னும் கருவுடன் மலையாளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்த ஒரு கதையை மொழிப்பெயர்த்து 'திராவிடன்’ வாரஇதழில் வெளியிட்டார். அது விவாதத்தை உருவாக்கியது.
ஐயபேரிகை என்ற திராவிட இயக்கப் பத்திரிகை, 1958ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆ.மாதவனின் சிறுகதை முதல் பரிசு 100 பெற்றது. புலவர் அறிவுடை நம்பி, கடலூரிலிருந்து நடத்திவந்த 'செண்பகம்’ இதழில் பொங்கல் மலரில் எனது கதையொன்றை வெளியிட்டு, "சிறுகதைச் செல்வர்" என்று பட்டமும் சூட்டியிருந்தது. அக்காலத்தில் திராவிட இயக்க இதழ்கள் வெளியிடும் பொங்கல் மலர்களில் ஆ. மாதவனின் கதைகள் சிறப்பிடம் பெற்றன. முரசொலி பொங்கல் இதழில் ஆ. மாதவன் என்னும் பெயர் அட்டையில் சி.என்.அண்ணாத்துரை, மு.கருணாநிதி, எஸ்.எஸ்.தென்னரசு, முடியரசன் பெயர்களுடன் வெளிவருமளவு அறியப்பட்டவராக திகழ்ந்தார்,
நவீனஇலக்கியத்திற்கு
ஆ.மாதவன் அன்றைய பொதுவாசிப்புச் சூழலில் அறிமுகமானவராக இருந்தார். அக்கால புகழ்பெற்ற இதழான அரு.ராமநாதனின் "காதல்" மாத இதழ் அவர் எழுதிய அர்ச்சனை சிறுகதைக்கு அட்டை ஓவியம் வெளியிட்டது. கவிஞர் கண்ணதாசன் தென்றல் இதழை ஆரம்பித்தபோது இரண்டாவது இதழிலேயே ஆ.மாதவனின் ’உனக்கும் எனக்கும் உறவுகாட்டி’ யை வெளியிட்டது .
ஆ.மாதவனின் திருமண நிகழ்வு மாலையில் நடந்த ஒரு கலந்துரையாடலில் சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, எம்.சிவசுப்ரமணியம், இரா இளஞ்சேரன், கே.முருகேசன், ஜி.எம்.எல். பிரகாஷ், வை. நாறும்பூநாதன், நீல பத்மநாபன், நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன் தம்பதியர் என பலர் குழுமியிருந்தபோது சுந்தர ராமசாமி அவரை இலக்கிய இதழ்களில் எழுதும்படிச் சொன்னார். அதை ஓர் அறைகூவலாக ஏற்றுக்கொண்டு 1965 தமிழ்ப் புத்தாண்டு முதல் நா. பார்த்தசாரதியின் ஆசிரியர் பொறுப்பில் துவங்கப்பட்டு வெளிவந்துகொண்டிருந்த தீபம் இதழில் பாச்சி என்னும் கதையை எழுதினார். அதை சுந்தர ராமசாமி. கிருஷ்ணன் நம்பி போன்றவர்கள் பாராட்டினர். அக்கதையை வாசித்த தி.க.சிவசங்கரன் தாமரை இதழில் எழுதும்படி கோரினார். தாமரை வருட நிறைவு சிறுகதை மலரில் 'பதினாலு முறி’ சிறப்புக் குறிப்புரையுடன் வெளிவந்தது. பிறகு தாமரையின் ஒவ்வொரு மலரிலும் ஆ.மாதவனின் கதை தவறாது இடம்பெற்றது. தீபம், தாமரை இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார்.
சிறுகதைகள்
1974-ல் ஆ. மாதவனின் முதல் சிறுகதைத் தொகுதியான 'மோகபல்லவி’யை சென்னை கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. அதே ஆண்டு கடைத்தெருக் கதைகள் என்னும் பதினாறு கதைகள்கொண்ட தொகுதியை மாதவனே வெளியிட்டார்., 'காமினிமூலம்', 'மாதவன் கதைகள்', 'ஆனைச்சந்தம்', 'அரேபியக்குதிரை' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கின்றன. அவருடைய 'நாயனம்’, 'பூனை’, 'பதினாலுமுறி’, 'புறா முட்டை’, 'தண்ணீர்’, 'அன்னக்கிளி’ஆகிய கதைகள் குறிப்பிடத்தக்கவை.வாழ்நாளெல்லாம் குற்றவாளியாக மட்டுமே இருந்த சாளைப்பட்டாணி தன்னுடைய இறுதி நாட்களில் நோய்வாய்ப் பட்டு அவதிப்படுகின்ற நிலையை விளக்கிய 'எட்டாவது நாள்' குறுநாவல் ஆ. மாதவனுடைய படைப்புகளில் பரவலாகப் பேசப்பட்டது.
நாவல்கள்
ஆ.மாதவனின் முதல் நாவலான 'புனலும் மணலும்’ கரமனையாற்றில் மணல் அள்ளும் ஒரு குடும்பத்தின் கதை. 1974-ல் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வாசகர் வட்டம் அதை வெளியிட்டது. 1982-ல் வெளியான 'கிருஷ்ணப்பருந்து' நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
மொழியாக்கங்கள்
ஆ. மாதவன் மொழிபெயர்ப்பாளராகவும் தமிழுக்கு முக்கிய பங்காற்றி இருக்கின்றார். 1974-ல் காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய சம்மானம் எனும் குறுநாவலை தமிழாக்கம் செய்தார். 2002-ல் சாகித்ய அகாதெமி வெளியிட்ட மலையாள எழுத்தாளர் பி. கெ. பாலகிருஷ்ணனின் 'இனி ஞான் உறங்ஙட்டே' என்ற நாவலை 'இனி நான் உறங்கட்டும்' என்ற பேரில் மொழியாக்கம் செய்தார். மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் 'யட்சி’ என்ற நாவலையும் தமிழுக்கு கொண்டு வந்திருக்கின்றார்.
இதழியல்
- 1978-ல் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க வெளியீடாக ஆரம்பிக்கப்பட்ட 'கேரளத்தமிழ்' என்னும் ஏடு கேரளா வாழ் தமிழர் வாழ்வின் இலக்கிய முகமாக விளங்கியது. ஆ. மாதவனை ஆசிரியராகக் கொண்டு பல்வேறு முன்னணி எழுத்தாளர்களுடைய படைப்புகளையும் நினைவுகளையும் சுமந்து அது வெளிவந்தது. 1978 முதல் 1985 வரை கேரளத்தமிழ் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. அவை ஆ.மாதவனால் தொகுக்கப்பட்டன
- 1981-ல் நா. பார்த்தசாரதியின் தீபம் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தார்.
அமைப்புப்பணிகள்
1963-ல் தொடங்கப்பட்ட திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தை தொடங்கியவர்களில் ஆ.மாதவன் ஒருவர். ஆயிரத்துக்கும் அதிகமான நூல்களைக் கொண்டு நகரின் மிகப்பெரிய நூலகமாகவும், கலாச்சார அரங்கமாகவும் திகழ்கின்ற திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சியில் ஆ. மாதவனின் பங்கு மிக முக்கியமானது. சங்கச் செயலாளராகவும் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
விருதுகள்
- செண்பகம் இலக்கிய அமைப்பு வழங்கிய சிறுகதைச் செல்வர் பட்டம் - 1977
- திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் சிறந்த சிறுகதை நூல்விருது (அரேபியக்குதிரை) - 1994
- மொழி பெயர்ப்புகளுக்காக உள்ளூர் பரமேஸ்வர அய்யர் நினைவுப் பரிசு - 2002
- கன்னியாகுமரி மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய தமிழ் மாமணி பட்டம் - 2003
- 2007 தமிழக அரசின் இயல் துறைக்கான கலைமாமணி விருது
- 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் விஷ்ணுபுரம் இலக்கிய விருது
- 2015 'இலக்கிய சுவடுகள்’ என்ற திறனாய்வுக் கட்டுரை நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது.
மறைவு
ஆ மாதவன் ஜனவரி 5, 2021 அன்று தன்னுடைய 86-ஆவது வயதில் திருவனந்தபுரத்தில் காலமானார்.
நினைவுகள், நூல்கள்
2010-ல் விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டபோது இவரது இலக்கிய உலகை திறனாய்வு செய்து 'கடைத்தெருவின் கலைஞன்' என்ற நூலை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வெளியிட்டது.
2021-ல் ஆ.மாதவன் இலக்கியத்தடம் நெல்லை சு.முத்துவால் தொகுக்கப்பட்டு அருள்பதிப்பகம் சென்னை வெளியீடாக வந்தது
இலக்கிய இடம்
குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பு முடிந்த உடன் வணிகத்துக்குள் நுழைந்து விட்டார். ஆயினும் இலக்கிய ஆர்வமும் தேடலும் மிகுந்தவராக இருந்தார். பள்ளிக்காலத்தில் தீவிர வாசகராக இருந்தார். அப்போது வாசிக்கக் கிடைத்த புத்தகங்கள், இதழ்கள்தான் தன்னை ஒரு கதாசிரியனாக ஆக்கின என்று ஆ. மாதவன் குறிப்பிட்டார். அவருடைய ஆரம்ப கால படைப்புகள் பெரும்பாலும் திராவிட இயக்கம் சார்ந்த நாளிதழ்கள், சஞ்சிகைகளில் வெளிவந்தன. ஆனால் அவருடைய படைப்புகளில் அரசியல் இருக்கவில்லை. சமூக சீர்திருத்தம் சார்ந்த பார்வையிலேயே பெரும்பாலும் எழுதினார். பின்னாளில் அவருடைய இலக்கிய நண்பர்களுடைய தூண்டுதலால் யதார்த்தவாத எழுத்துக்கு மாறினார்.
தன்னுடைய ஆயுளின் பெரும்பகுதியை ஆ. மாதவன் திருவனந்தபுரம் சாலை கம்போளத்தில் ஒரு வியாபாரியாகத்தான் கழித்தார். அங்கு வாழ்ந்த பலதரப்பட்ட மனிதர்கள், விலங்குகள், பொருட்கள் என தன் கருத்தைக் கவர்ந்த அனைத்தையும் படைப்புகளில் கொண்டு வந்தார். ஒரு கடைத் தொகுதியின் தெளிவான குறுக்குவெட்டுத் தோற்றத்தை தன்னுடைய கதைகளின் வழியாகக் காட்டியதால் ஆ. மாதவன் கடைத் தெருவின் கதைசொல்லி என்று அழைக்கப்படுகின்றார். கேரளத்தில் இரண்டு தெருக்களே இலக்கியத்தில் முழுமையாக பதிவானவை, ஆ.மாதவனின் சாலைத் தெருவும் எஸ்.கே.பொற்றேக்காட் எழுதிய கோழிக்கோடின் மிட்டாய்த்தெருவும்.
பசி, காமம், வன்முறை போன்ற அந்தரங்கமான உணர்வு சார்ந்த விஷயங்களை நுட்பமாகக் கூறும் எழுத்துக்களின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் ஆ. மாதவன். உலகின் எல்லா அவலங்களுக்கும், அனர்த்தங்களுக்கும், அர்த்தங்களுக்கும் எடுத்துக்காட்டு வடிவங்கள் இந்தத் தெருவிலே உள்ளன என்று கருதினார்.அந்த வகையில் எளிய அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை யதார்த்தமான முறையில் கொண்டு வந்த படைப்புகளின் முன்னோடியாக ஆ. மாதவன் திகழ்கிறார். தமிழும் மலையாளமும் கலந்த அந்த வட்டார வழக்குக்கு ஒரு செழுமையையும் மதிப்புக்குரிய இடத்தையும் இலக்கிய உலகில் அளித்தார்.
ஆ.மாதவன் பற்றி ந. பிச்சமூர்த்தி "மாதவன் படைப்புகள் கதைகளுக்குரிய விஷயங்களை தேர்ந்துள்ள விதத்திலும் அவற்றைச் சொல்லிச் செல்லும் முறையிலும் நடை நயத்திலும் தனித்தன்மை புலனாகிறது" என்று மதிப்பிட்டார். சுந்தர ராமசாமி "புதுமைப்பித்தனுக்கும் ஜி. நாகராஜனுக்கும் இடைப்பட்ட ஒரு யதார்த்தவாதியாக ஆ. மாதவனைச் சொல்லலாம். மனிதனின் அந்தரங்கங்களைக் கண்டு சொல்வதில் மிகுந்த ஆசை கொண்டவர் இவர். சுய அனுபவங்கள் சார்ந்து நிற்பதாலும் கோட்பாடுகளுக்காக மனித இயல்புகளை விட்டுக் கொடுக்க மறுப்பதாலும் எப்போதும் நம்பகத்தன்மை கொண்டுவிடுகின்றன இவரது கதைகள். பொருளாதார ஏற்றத்தாழ்வு போல - ஒருக்கால் அதற்கும் மேலாக - பாலுணர்ச்சி உந்தல்கள் மனிதனை ஆட்டிக் குலைக்கும் உண்மைக்கு அழுத்தம் தந்தவர். எவ்வாறு மனிதன் இருக்க வேண்டும் என்பது அல்ல - அவ்வாறு இல்லாமல் போனதற்கான விமர்சனமும் அல்ல நமது சுலபக் கணிப்புகளுக்கு அப்பால் மனிதன் எவ்வாறு இருந்து கொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்வதே இவர் அடிப்படை" என்கிறார் (கலைகள் கதைகள் சிறுகதைகள்) .ஜெயமோகன் "ஆ. மாதவன் சிறுதைகள் இயல்புவாதச் சிறுகதையின் உச்சநிலையில் இருந்து முன்னகர்ந்து நவீனத்துவ சிறுகதையின் எல்லைக்குள் நுழைந்தவை" என்று வரையறுக்கிறார்.
நூல்கள்
சிறுகதை
- மோகபல்லவி - 1974, சென்னை கலைஞன் பதிப்பகம்
- கடைத்தெருக்கதைகள் - 1974
- காமினிமூலம் - 1975, சென்னை கலைஞன் பதிப்பகம்
- மாதவன் கதைகள் - 1984
- ஆனைச்சந்தம் - 1990
- அரேபியக்குதிரை - 1995
- ஆ.மாதவன் கதைகள் முழுத்தொகுப்பு (72 கதைகள் அடங்கியது) - 2002, தமிழினி பதிப்பகம்
- ஆ.மாதவன் கதைகள் முழுத்தொகுப்பு (66 கதைகள் அடங்கியது) - 2016, நற்றிணை பதிப்பகம்
நாவல்
- புனலும் மணலும் - 1974, வாசகர் வட்டம்
- கிருஷ்ணப்பருந்து - 1982
- தூவானம் - 1990
கட்டுரை
- இலக்கியச்சுவடுகள் - 2015
மொழியாக்கம்
- யட்சி [மூலம் யக்ஷி, மலையாற்றூர் ராமகிருஷ்ணன்]
- இனி நான் உறங்கட்டும் [மூலம் இனி ஞான் உறங்ஙட்டே, பி.கெ.பாலகிருஷ்ணன்] - 2002
- சம்மானம் [மூலம் காரூர் நீலகண்டப்பிள்ளை] - 1974
உசாத்துணை
- புகைப்படங்கள் நன்றி https://sahitya-akademi.gov.in/library/meettheauthor/aa_madhavan.pdf
- ஆ.மாதவன்... மலையாள மொழியின் செழுமையைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர்!" - நாஞ்சில் நாடன், ஆனந்தவிகடன், 2021
- கடைத்தெருக் கதைகளைச் சொன்ன ஆ.மாதவன்! - கதை சொல்லிகளின் கதை, ச. தமிழ்ச்செல்வன், ஆனந்தவிகடன் 2018
- ஆ.மாதவன்: எளியவர்களின் கதைக்காரர்!, கவிஞர் சுகுமாரன், இந்து தமிழ்திசை 2021
- ஆ. மாதவன் - கம்போளத்தின் கதைஞர், சுகுமாரன், வாழ்நிலம் வலைத்தளம், தி இந்து நாளிதழ் 2015-2016
- ஆ. மாதவன் – அஞ்சலி, ஆர்வி சுப்ரமனியம், சிலிக்கான்ஷெல்ப்
- மாதவம், ஜெயமோகன் 2010
- கடைத் தெருவின் கலைஞன், முன்னுரை, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
- திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி, 2010, ஜெயமோகன்.இன்
- Sahitya Academy, meet the author Aa. Madhavan
- Sahitya Academy awards list
- சுந்தர ராமசாமி கலைகள் கதைகள் சிறுகதைகள்
- ஒரு ஆளுமை, கோணங்கள் பல | ஒரு ஆளுமை, கோணங்கள் பல - hindutamil.in
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:06:32 IST