கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு: Difference between revisions
(Changed incorrect text: ) |
(Added First published date) |
||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 11: | Line 11: | ||
* வேத வினா விடை [[அம்மானை]] - [[வேதநாயகம் சாஸ்திரியார்|வேதநாயக சாஸ்திரியார்]] | * வேத வினா விடை [[அம்மானை]] - [[வேதநாயகம் சாஸ்திரியார்|வேதநாயக சாஸ்திரியார்]] | ||
* பெண்டீர் விடு[[தூது இலக்கிய நூல்கள்|தூது]] - வேதநாயக சாஸ்திரியார் | * பெண்டீர் விடு[[தூது இலக்கிய நூல்கள்|தூது]] - வேதநாயக சாஸ்திரியார் | ||
* | * [[சேசுநாதர் சதகம்]] - ந. சவரிமுத்து உடையார் | ||
* சேசுநாதர் [[பிள்ளைத்தமிழ்]] - வித்துவான் சாமிநாத பிள்ளை | * சேசுநாதர் [[பிள்ளைத்தமிழ்]] - வித்துவான் சாமிநாத பிள்ளை | ||
* இரக்ஷண்ய காதல் - ஞான மிக்கேல் பிள்ளை | * இரக்ஷண்ய காதல் - ஞான மிக்கேல் பிள்ளை | ||
Line 37: | Line 37: | ||
* கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு, பொதுப்பதிப்பாசிரியர்: முனைவர் ஜி. ஜான் சாமுவேல்; பதிப்பாசிரியர்: முனைவர் யோ. ஞானச்சந்திர ஜாண்சன், ஆசியவியல் நிறுவன வெளியீடு. முதல் பதிப்பு: 2014 | * கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு, பொதுப்பதிப்பாசிரியர்: முனைவர் ஜி. ஜான் சாமுவேல்; பதிப்பாசிரியர்: முனைவர் யோ. ஞானச்சந்திர ஜாண்சன், ஆசியவியல் நிறுவன வெளியீடு. முதல் பதிப்பு: 2014 | ||
* [https://johnsonmcc.blogspot.com/ கிறித்தவ இலக்கியப் பதிவுகள்: முனைவர் யோ. ஞானச்சந்திர ஜாண்சன்] | * [https://johnsonmcc.blogspot.com/ கிறித்தவ இலக்கியப் பதிவுகள்: முனைவர் யோ. ஞானச்சந்திர ஜாண்சன்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|05-May-2024, 13:02:03 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 16:00, 13 June 2024
கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு (2014) கிறிஸ்தவச் சிற்றிலக்கியங்களைப் பற்றிய அறிமுகங்களின் தொகுப்பு. முனைவர் யோ. ஞானச்சந்திர ஜாண்சன் இந்நூலின் பதிப்பாசிரியர்.
பதிப்பு, வெளியீடு
கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு நூலை 2014-ல், ஆசியவியல் நிறுவனம் வெளியிட்டது. முனைவர் யோ. ஞானச்சந்திர ஜாண்சன் இந்நூலின் பதிப்பாசிரியர். முனைவர் ஜி. ஜான் சாமுவேல் பொதுப்பதிப்பாசிரியர்.
நூல் அமைப்பு
கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு, கிறிஸ்தவ சமயம் சார்ந்த பல்வேறு சிற்றிலக்கியங்களின் அறிமுகத் தொகுப்பு. கீழ்க்காணும் சிற்றிலக்கிய அறிமுகங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
- அன்னையின் பிரலாப வண்ணம் - அந்தோனிக்குட்டி அண்ணாவியார்
- வேத வினா விடை அம்மானை - வேதநாயக சாஸ்திரியார்
- பெண்டீர் விடுதூது - வேதநாயக சாஸ்திரியார்
- சேசுநாதர் சதகம் - ந. சவரிமுத்து உடையார்
- சேசுநாதர் பிள்ளைத்தமிழ் - வித்துவான் சாமிநாத பிள்ளை
- இரக்ஷண்ய காதல் - ஞான மிக்கேல் பிள்ளை
- திருவருள் அந்தாதி - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- அதிசயக் கும்மி - அருள்திரு. அ. வேதக்கண்
- சங்கீத பூரணி - அருள்திரு. அ. வேதக்கண்
- ரூத்தம்மானை - அருமை நாயகம் சட்டம்பிள்ளை
- நடுத்தீர்வை உலா - கனகப்பன்
- மாதர் கும்மி - அருள்திரு. ஜா.சே. வேதநாயகர்
- நித்தியாநந்தக் காதல் - அருள்திரு. ஜா.சே. வேதநாயகர்
- மெய்ஞ்ஞான மாலை - திட்டூர் தேசிகர்
- திட்டூர்க் கலம்பகம் - திட்டூர் தேசிகர்
- வேத விடுகதா மஞ்சரி - எஸ். மோட்சக்கண்
- சிலுவைத் திருமொழிப் பதிகம் - எஸ். மோட்சக்கண்
- சாலமோன் திருவருட் கோவை - மு. பவுல் இராமகிருட்டிணன்
உள்ளடக்கம்
சேசுநாதர் பிள்ளைத் தமிழ் இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றியும் விளையாடல்கள் பற்றியும் கூறுகிறது. வேத வினா விடை அம்மானை, பைபிள் வேத சாஸ்திரம் பற்றி வினா-விடை வடிவில் விவரிக்கிறது. இயேசுநாதர் மீது பாடப்பட்ட சதக இலக்கியங்களுள் ஒன்றாக சேசுநாதர் சதகம் அமைந்துள்ளது. மற்றும் கும்மி, பதிகம், மஞ்சரி, உலா, கும்மி போன்ற பல சிற்றிலக்கிய வகைமைகளில் நூல் அறிமுகக் கட்டுரைகள் இடம்பெற்றன.
மதிப்பீடு
கிறிஸ்தவச் சிற்றிலக்கியத் திரட்டு, கிறிஸ்தவ சமயம் சார்ந்த பல்வேறு சிற்றிலக்கியங்களின் அறிமுகத் தொகுப்பு. கிறிஸ்தவச் சிற்றிலக்கியங்கள் பற்றியும், அதன் அமைப்பு, நோக்கம் பற்றியும் ஆசிரியர்கள் பற்றியுமான விரிவான அறிமுகங்கள் இந்நூலில் இடம்பெற்றன.
உசாத்துணை
- கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு, பொதுப்பதிப்பாசிரியர்: முனைவர் ஜி. ஜான் சாமுவேல்; பதிப்பாசிரியர்: முனைவர் யோ. ஞானச்சந்திர ஜாண்சன், ஆசியவியல் நிறுவன வெளியீடு. முதல் பதிப்பு: 2014
- கிறித்தவ இலக்கியப் பதிவுகள்: முனைவர் யோ. ஞானச்சந்திர ஜாண்சன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
05-May-2024, 13:02:03 IST