under review

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text:  )
(Added First published date)
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
[[File:சிஎல் எஸ்.jpg|thumb|கிறிஸ்தவ இலக்கிய சங்கம்]]
[[File:Christian Literature Soceity.jpg|thumb|கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை]]
[[File:Christian Literature Soceity.jpg|thumb|கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை]]
கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் (1858) தாய்மொழி வழிக் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காகவும், தமிழில் கல்வி, சமயம் சார்ந்த நூல்களை அச்சிட வேண்டும் என்ற நோக்கத்திலும், சென்னையில், 1858-ல், ஜான் மர்டாக் என்பவரால் தொடங்கப்பட்டது. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் கிறிஸ்தவ சமயம் சார்ந்த நூல்களுடன், கல்வி சார் நூல்கள், கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், வாழ்க்கை வரலாறு, ஆய்வு நூல்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது.
கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் (1858) (THE CHRISTIAN LITERATURE SOCIETY)தாய்மொழி வழிக் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காகவும், தமிழில் கல்வி, சமயம் சார்ந்த நூல்களை அச்சிட வேண்டும் என்ற நோக்கத்திலும், சென்னையில், 1858-ல், ஜான் மர்டாக் என்பவரால் தொடங்கப்பட்டது. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் கிறிஸ்தவ சமயம் சார்ந்த நூல்களுடன், கல்வி சார் நூல்கள், கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், வாழ்க்கை வரலாறு, ஆய்வு நூல்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது.


== தோற்றம் ==
== தோற்றம் ==
19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்வேறு நூல் வெளியீட்டு நிறுவனங்கள் நூல்களை அச்சிட்டு வந்தன. அவை பெரும்பாலும் சமயம் சார்ந்த நூல்களாகவும், ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொண்ட பாட நூல்களாகவும் இருந்தன. தமிழ் மொழிக் கல்வி நூல்கள் அதிகம் வெளியாகாத நிலை இருந்தது. அதனை மாற்றும் பொருட்டு 1858-ல், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் நிறுவப்பட்டது. [[ஜான் மர்டாக்]], இதனைத் தோற்றுவித்தார். இவ்வமைப்பின் முதல் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.
19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்வேறு நூல் வெளியீட்டு நிறுவனங்கள் நூல்களை அச்சிட்டு வந்தன. அவை பெரும்பாலும் சமயம் சார்ந்த நூல்களாகவும், ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொண்ட பாட நூல்களாகவும் இருந்தன. தமிழ் மொழிக் கல்வி நூல்கள் அதிகம் வெளியாகாத நிலை இருந்தது. அதனை மாற்றும் பொருட்டு 1858-ல், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் நிறுவப்பட்டது. [[ஜான் மர்டாக்]], இதனைத் தோற்றுவித்தார். இவ்வமைப்பின் முதல் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.


== நோக்கம் ==
== நோக்கம் ==
Line 108: Line 109:
* [http://onlinebooks.library.upenn.edu/webbin/book/lookupname?key=Christian%20Literature%20Society%20for%20India CHRISTIAN LITERATURE SOCIETY BOOKS]
* [http://onlinebooks.library.upenn.edu/webbin/book/lookupname?key=Christian%20Literature%20Society%20for%20India CHRISTIAN LITERATURE SOCIETY BOOKS]
* கிறித்தவமும் தமிழகமும், சூ. இன்னாசி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
* கிறித்தவமும் தமிழகமும், சூ. இன்னாசி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|22-Jul-2023, 09:31:46 IST}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 13:54, 13 June 2024

கிறிஸ்தவ இலக்கிய சங்கம்
கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் (1858) (THE CHRISTIAN LITERATURE SOCIETY)தாய்மொழி வழிக் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காகவும், தமிழில் கல்வி, சமயம் சார்ந்த நூல்களை அச்சிட வேண்டும் என்ற நோக்கத்திலும், சென்னையில், 1858-ல், ஜான் மர்டாக் என்பவரால் தொடங்கப்பட்டது. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் கிறிஸ்தவ சமயம் சார்ந்த நூல்களுடன், கல்வி சார் நூல்கள், கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், வாழ்க்கை வரலாறு, ஆய்வு நூல்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது.

தோற்றம்

19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்வேறு நூல் வெளியீட்டு நிறுவனங்கள் நூல்களை அச்சிட்டு வந்தன. அவை பெரும்பாலும் சமயம் சார்ந்த நூல்களாகவும், ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொண்ட பாட நூல்களாகவும் இருந்தன. தமிழ் மொழிக் கல்வி நூல்கள் அதிகம் வெளியாகாத நிலை இருந்தது. அதனை மாற்றும் பொருட்டு 1858-ல், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் நிறுவப்பட்டது. ஜான் மர்டாக், இதனைத் தோற்றுவித்தார். இவ்வமைப்பின் முதல் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.

நோக்கம்

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சமயம் சார்ந்த நிறுவனமாக இருப்பினும், தமிழ் மொழிக்கும், அதன் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டு செய்வதை தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. கிறிஸ்தவ சமயம் சார்ந்த நூல்களுடன், கல்வி சார் நூல்கள், கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், வாழ்க்கை வரலாறு, ஆய்வு நூல்கள், இலக்கியம், இலக்கணம் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது.

பணிகள்

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் 1953 வரை இங்கிலாந்தில் இருந்த கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் அங்கமாகச் செயல்பட்டு வந்தது. அக்டோபர் 1953-ல், இச்சங்கம் தன்னாட்சி பெற்ற இந்திய நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு பல நூல்களை வெளியிட்டது. பல இலக்கிய நிகழ்வுகளை, பயிற்சிப் பட்டறைகளை ஒருங்கிணைத்தது. இலக்கியச் சிற்றிதழ்களை நடத்தியது.

கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் அலுவலகம், சென்னை பூங்கா நகரில் உள்ள மெமோரியல் கட்டிட வளாகத்தில் அமைந்துள்ளது. அங்கு பொதுச்செயலாளர் அலுவலகம், கணக்காளர் அலுவலகம், தமிழ், ஆங்கிலப் பதிப்புத்துறைகள், நூல் விநியோகத்துறை அலுவலகம், பணியாளர் கண்காணிப்புத் துறை மற்றும் நூல் விற்பனை நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்திற்குச் சொந்தமான அச்சகமும் இங்கு அமைந்துள்ளது. நூல்களை அச்சிடுதல், மறுபதிப்புச் செய்தல், விற்பனை போன்ற பணிகளை கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் செய்து வருகிறது.

பொறுப்பாளர்கள்

கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் முதல் பொதுச் செயலாளராக ஜான் மர்டாக் பணியாற்றினார். அவரைத் தொடர்ந்து எச்.கிளிப்போர்ட், பாஸ்மோர் தொடங்கி தி. தயானந்தன் பிரான்சிஸ் வரை பலர் இதன் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்தனர்.

பதிப்பாசிரியர்கள்

கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் முதல் தமிழ்ப் பதிப்பாசிரியராக ஹென்றி ஆல்பர்ட் கிருஷ்ணப்பிள்ளை 1892 தொடங்கி 1900 வரை பணியாற்றினார். அவர் தொடங்கி திருமதி ஸ்வீட்லின் பிரபாகரன் வரை பலர் கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் தமிழ்ப் பதிப்பாசிரியர்களாக அமைந்து தமிழ் வளர்த்தனர்.

இயக்குநர்கள்

கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் தற்போதைய இயக்குநர்களாக ஆண்ட்ரூ பலராமன் நடராஜன், தன்ராஜ் லூயிஸ் சிவகுமார், ஜயராஜ் ஜார்ஜ் ஸ்டீஃபன், சுவாமிநாதன் அசோக்குமார் ஆகியோர் செயல்படுகின்றனர்.

நூல்கள்

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நூல்களை வெளியிட்டது. தமிழில் சமயம் சார்ந்த நூல்களை மட்டுமல்லாமல் அகராதிகள், இலக்கணங்கள், மொழிப்பயிற்சி நூல்கள், செய்யுள், இலக்கியம், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள், நாடகங்கள், சிறார் இலக்கியம், வாழ்க்கை வரலாறு, கணித நூல்கள், பள்ளிப் பாட நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள் எனப் பல வகையினதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது. அவற்றில் பல நூல்கள் பல்வேறு விருதுகளைப் பெற்றன.

நூலாசிரியர்கள்

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் மூலம் வெளியான சில நூல்களின் ஆசிரியர்கள்:

மற்றும் பலர்.

நூல்கள் பட்டியல்

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் வெளியிட்ட சில நூல்களின் பட்டியல்:

  • பிள்ளை தன்மை ஆராய்ச்சி
  • இளம்பிள்ளைக் கல்வி
  • செந்தமிழ்ப் பொழில் நான்காம் படிவம்
  • செந்தமிழ்ப் பொழில் நான்காம் படிவம்-சிறப்புப்பகுதி
  • செந்தமிழ்ப் பொழில் ஐந்தாம் படிவம்
  • செந்தமிழ்ப் பொழில் ஐந்தாம் படிவம்-சிறப்புப்பகுதி
  • இந்திய நர்சுகளுக்கான பாடப்புத்தகம்
  • கர்நாடக சங்கீத வித்தியாபோதினி
  • கமலா
  • சுகுணா
  • தமிழ் வாக்கிய அகராதிகள்
  • நல்ல தாய்
  • இரட்சண்ய சரிதம்
  • அருமையான துணை
  • மில்ட்டன் மாமல்லன் சிம்சோன்
  • மன்னிக்கத் தெரியாதவர்
  • பரிசுத்த யோவான் எழுதின சுவிசேஷம்: மூலமும் உரையும்
  • விந்தன் கட்டுரைகள்
  • கடல் முத்து
  • ஏசுநாதர் சரிதம்
  • மலரும் சருகும்
  • இரட்சணிய யாத்திரிகம்
  • டால்ஸ்டாய் சிறு கதைகள்
  • தெய்வ தற்சொரூபன்
  • தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்

மற்றும் பல.

இலக்கிய இடம்

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் வெளியிட்டுள்ள கல்வி, கலாச்சார நூல்கள் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்தன. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் வெளியிட்ட நூல்கள் பலவும் தமிழ்மொழி மற்றும் கிறித்தவ இலக்கிய வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சமயம் கடந்தது, மதம் கடந்து கல்விப் பணி ஆற்றிவருகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Jul-2023, 09:31:46 IST