under review

உலா இலக்கிய நூல்கள்

From Tamil Wiki

உலா என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இறைவனோ, அரசனோ, வள்ளலோ, சான்றோனோ யானை, குதிரை, தேர் போன்றவற்றில் ஏறி, மக்களுக்காக வீதிகளில் வருவது உலா எனப்படும். உலா வரும் தலைவனைக் கண்டு பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவத்துப் பெண்களும் காதல் கொள்வதைப் பாடுவதே உலா இலக்கியம். உலா, கலிவெண்பாவால் பாடப்படும்.

உலா இலக்கிய நூல்கள்

பொ.யு. 8-ம் நூற்றாண்டு முதல், பொ.யு. 19-ம் நூற்றாண்டு வரையில் வெளிவந்த உலா இலக்கிய நூல்கள் சிலவற்றின் பட்டியல்.

வரிசை எண் நூற்றாண்டு நூல்கள் ஆசிரியர்
1 பொ.யு. 8-ம் நூற்றாண்டு திருக்கைலாய ஞான உலா சேரமான் பெருமாள் நாயனார்
2 பொ.யு. 9-ம் நூற்றாண்டு ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை நம்பியாண்டார் நம்பி
3 பொ.யு 12.-ம் நூற்றாண்டு இராசராச சோழன் உலா ஒட்டக்கூத்தர்
குலோத்துங்கச் சோழன் உலா ஒட்டக்கூத்தர்
சங்கரசோழன் உலா ஒட்டக்கூத்தர்
விக்கிரம சோழன் உலா ஒட்டக்கூத்தர்
4 பொ.யு. 14-15-ம் நூற்றாண்டு திருவானைக்கா உலா காளமேகப் புலவர்
5 பொ.யு. 15-ம் நூற்றாண்டு ஏகாம்பரநாதர் உலா இரட்டைப் புலவர்கள்
6 பொ.யு. 16-ம் நூற்றாண்டு சிலேடை உலா தத்துவராயர்
சேயூர் முருகன் உலா சேறைக்கவிராசபிள்ளை
ஞானவிநோதன் உலா தத்துவராயர்
திருக்காளத்திநாதர் உலா சேறைக்கவிராசபிள்ளை
திருப்பாலைப்பந்தல் உலா எல்லப்ப நயினார்
மதுரைச் சொக்கநாதர் உலா புராணத் திருமலைநாதர்
வாட்போக்கிநாதர் உலா சேறைக்கவிராசபிள்ளை
7 பொ.யு. 17-ம் நூற்றாண்டு கயத்தாற்றரசன் உலா அந்தகக்கவி வீரராகவர்
கனகசபைநாதன் உலா அம்மையப்பர்
கீழ்வேளூர் உலா அந்தகக்கவி வீரராகவர்
திருக்கழுக்குன்றத்து உலா அந்தகக்கவி வீரராகவர்
திருப்பூவன நாதர் உலா கந்தசாமிப் புலவர்
திருவாரூர் உலா அந்தகக்கவி வீரராகவர்
திருவெங்கை உலா துறைமங்கலம் சிவப்பிரகாசர்
மயிலத்து உலா வேலைய தேசிகர்
8 பொ.யு. 17-18-ம் நூற்றாண்டு அடைக்கல நாயகி உலா வீரமாமுனிவர்
உண்மை உலா ஆறுமுக மெய்ஞான சிவாச்சாரியார்
சண்முகர் உலா ஆறுமுக மெய்ஞான சிவாச்சாரியார்
சிவந்தெழுந்த பல்லவன் உலா படிக்காசுப் புலவர்
வெற்றர் உலா ஆறுமுக மெய்ஞான சிவாச்சாரியார்
9 பொ.யு. 18-ம் நூற்றாண்டு திருக்குற்றாலநாதர் உலா திரிகூடராசப்பக் கவிராயர்
திருத்தணிகை உலா கந்தப்பையர்
திருவிலஞ்சி முருகன் உலா மேலகரம் பண்டாரக் கவிராயர்
தேவையுலா பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
மெய்கண்ட வேலாயுத உலா அழகு முத்துப்புலவர்
10 பொ.யு. 19-ம் நூற்றாண்டு அவிநாசி உலா வடவள்ளி அருணாசலக் கவிராயர்
கோடீச்சுர உலா கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
செப்பறை உலா அழகியகூத்த தேசிகர்
ஞான உலா வேதநாயக சாஸ்திரியார்
தஞ்சைப் பெருவுடையார் உலா கொட்டையூர் சிவக் கொழுந்து தேசிகர்
திருக்கடவூர் உலா சுப்பிரமணியக் கவிராயர்
திருச்செந்தில் உலா தண்டபாணி சுவாமிகள்
திருவிடைமருதூர் உலா மீனாட்சி சுந்தரம் பிள்ளை
நெல்லை வேலவர் உலா சரவணமுத்துப் புலவர்
பேரூர் உலா வடவள்ளி அருணாசலக் கவிராயர்
மருங்காபுரி உலா வெறிமங்கைபாகக் கவிராயர்

உசாத்துணை

  • தஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த தமிழ் இலக்கியம்: பகுதி-1, ம.சா. அறிவுடைநம்பி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.


✅Finalised Page