under review

காளமேகப் புலவர்

From Tamil Wiki
காளமேகப் புலவர்

காளமேகப் புலவர் (பொ.யு. 15-ம் நுற்றாண்டு) தமிழ்ப் புலவர். ஆசு கவி, சைவப்பாடல்கள், சிலேடைப் பாடல்கள், நகைச் சுவைப் பாடல்கள் இயற்றியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

காளமேகப் புலவரின் இயற்பெயர் வரதன். விழுப்புரம் மாவடத்தில் உள்ள "எண்ணாயிரம்" என்ற ஊரில் பிறந்தார் என்றும் திருக்குடந்தைகருகிலுள்ள நந்திக் கிராமத்தில் பிறந்தார் என்றும் கூறுவர். இவர் பார்ப்பனர், வைணவர். இவரது காலத்தில் தென்னாட்டைச் சாளுவ மன்னன் திருமலை ராயன் (1453 - 1468) ஆண்டுவந்தான். "கார்மேகம் போல்" கவிதை பாடியதால் "காளமேகப்புலவர்" என அழைக்கப்பெற்றார். திருவரங்கம் பெரிய கோயிலில் மடைப்பள்ளியில் சமையல் தொழில் செய்தவர். திருவானைக்கா கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்ற தாசியின் வழி சைவ சமயத்துக்கு மாறினார். திருவானைக்காவில் காலமானார்.

வேறு பெயர்கள்
  • வசை பாட காளமேகம்
  • வசைகவி
  • ஆசுகவி

இலக்கிய வாழ்க்கை

சிலேடை, வசைப்பாடுவதில் வல்லவர். திருமலைராயன்அவைக்களதலைமைப் புலவர் அதிமதுரகவியோடு வாதிட்டு "எமகண்டம்" பாடி அவரை வென்றவர். வர்க்க எழுத்துக்களை மட்டுமே கொண்டு பாடல்கள் புனைந்தவர்.

நூல் பட்டியல்

  • திருவானைக்கா உலா
  • சரஸ்வதி மாலை
  • திருவானைக்கா உலா
  • சமுத்திரவிலாசம்
  • சித்திரமடல்
  • பரப்பிரம்ம விளக்கம்
  • வினோதரசமஞ்சரி
  • தமிழ் நாவலர் சரிதை
  • புலவர் புராணம்
  • தனிச்செய்யுள் சிந்தாமணி
  • பெருந்தொகை
  • கடல் விலாசம்

உசாத்துணை


✅Finalised Page