அம்மானை இலக்கிய நூல்கள்
From Tamil Wiki
- அம்மானை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அம்மானை (பெயர் பட்டியல்)
தமிழில் நூற்றுக்கணக்கான அம்மானை நூல்கள் தோன்றியுள்ளன. சைவ, வைணவ, சமண, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய இலக்கியங்களில் பல அம்மானை இலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளன.
அம்மானை இலக்கிய வகை
தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று அம்மானை. மகளிர் விளையாட்டுகளை அடிப்படையாக வைத்துப் புனையப்பட்டது. பெண்பாற் பிள்ளைத் தமிழ் இலக்கியங்களில் 'அம்மானை' ஓர் உறுப்பாக இடம் பெற்றுள்ளது.
அம்மானை இலக்கிய நூல்கள் பட்டியல்
| எண் | ஆண்டு | நூலின் பெயர் | ஆசிரியர்/பதிப்பித்தவர் |
|---|---|---|---|
| 1 | 1869 | பவளக்கொடி மாலை | கருணானந்த சுவாமிகள் & கேசவ முதலியார் |
| 2 | 1870 | கான்சாயயு சண்டை | கந்தசாமி முதலியார் (ப) |
| 3 | 1870 | பஞ்சபாண்டவர் வனவாசம் | புகழேந்திப் புலவர் |
| 4 | 1871 | ஸ்ரீராமர் சீதாதேவி வனவாசம் | சுந்தசாமி முதலியார் |
| 5 | 1871 | ஹரிஹரபுத்திரரென்னும் ஐயனார் கதை | காயற்பட்டணம் ஹைகுலப்பை |
| 6 | 1872 | அல்லியரசாணி மாலை | புகழேந்திப் புலவர் |
| 7 | 1874 | அலசம்மானை | அருணாசல செட்டியார் (ப) |
| 8 | 1874 | சீராளன் அம்மானை (சிறுத்தொண்ட பக்தன் கதை) | புகழேந்திப் புலவர் (ஆ) |
| 9 | 1874 | தேசிங்குராசன் கதை | புகழேந்திப் புலவர் |
| 10 | 1874 | பொன்னுருவி மசக்கை | நாராயணசாமி நாட்டார் |
| 11 | 1874 | வைகுந்த அம்மானை (மாவிந்தம்) | புகழேந்திப் புலவர் (ஆ) |
| 12 | 1874 | மூவர் அம்மானை | கருணானந்த சுவாமிகள் |
| 13 | 1875 | ஆதியூர் அவதானி சரிதம் | சேஷைய்யங்கார் |
| 14 | 1875 | பாப்பரத்தியார் அம்மானை | சையதுமீரான் புலவர் (ஆ) |
| 15 | 1876 | அர்ச். கித்தேரியம்மாளம்மானை | வீரமாமுனிவர் (ஆ) |
| 16 | 1876 | அர்ச். மேரி கருதம்மாள் அம்மானை | அப்துல்லா சாயபு (ப) |
| 17 | 1876 | குருச்சேத்திர அம்மானை | குஞ்நூமுசுலப்பை காறியாவிம் புலவர் (ஆ) |
| 18 | 1878 | அர்ச். அந்தோணியார் அம்மானை | எஸ்.ஜகராவ் முதலி (ப) |
| 19 | 1878 | தருமர் அசுவமேத அம்மானை | அருணாசல செட்டியார் |
| 20 | 1878 | நபியவதார அம்மானை | சையது மீரான் புலவர் (ஆ) |
| 21 | 1880 | மலுக்கு முலுக்கு ராஜன் கதை | வா. அப்துல்காதிர் சாயபு |
| 22 | 1881 | கோவிலன் கதை | புகழேந்திப் புலவர் |
| 23 | 1890 | இரணியாசுரன் கதை | சுந்தரராச கவிராயர் (ஆ) |
| 24 | 1890 | ஞானசவுந்தரி அம்மானை | மயிலு பிள்ளை |
| 25 | 1891 | பொன்னர் சங்கர் அம்மானை | வாரணவாசிக் கவிராயர் (ஆ) |
| 26 | 1892 | அந்தோணியார் அம்மானை | தோமைப் பிள்ளை பட்டங்கட்டியார் |
| 27 | 1892 | சந்தந்தோனியார் அம்மானை | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 28 | 1892 | பஞ்சரதி அம்மானை | சி. வி. வேல்முருக பாண்டியன் |
| 29 | 1892 | மகாபாரத அம்மானை | சைமுகம்மது அண்ணாவியார் |
| 30 | 1892 | மதுரை வீரன் அம்மானை | மீனாட்சி தாசர் (ஆ) |
| 31 | 1893 | ஸ்தாபக சஞ்சுவாம் அம்மானை | புவிமன்ன சிங்கமுதலியார் |
| 32 | 1893 | அகினேச சுன்னி அம்மானை | செயின்ட் அகினேசு (ஆ) மேரி |
| 33 | 1893 | தேவமாதா அம்மானை | அ.சங்கரமூர்த்திக் கோனார் |
| 34 | 1893 | பாகவத அம்மானை | மு. மாரியப்ப கவிராயர் (ஆ) |
| 35 | 1893 | விராடபர்வ அம்மானை | சிறுமணவூர் முனிசாமி முதலியார் |
| 36 | 1894 | அபிமன்னன் சண்டை | வீரபத்திர தாஸர் |
| 37 | 1895 | மாதர்நீதி அம்மானை | இராமலிங்கம் பிள்ளை |
| 38 | 1899 | பொன்னரங்கர் அம்மானை | எம். வடிவேலு முதலி |
| 39 | 1900 | சீரங்க அம்மானை | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 40 | 1900 | காட்டுபாவா சாகிப் அம்மானை | முத்துமுகம்மது புலவர் (ஆ) |
| 41 | 1901 | மகாராணி அம்மானை | பெரியசுப்பா ரெட்டியார் |
| 42 | 1904 | நளச்சக்கரவர்த்தி அம்மானை | எம். எஸ். முத்துபழனிய பிள்ளை |
| 43 | 1904 | மாணிக்கவாசகர் அம்மானை | நாகலிங்கம் பிள்ளை |
| 44 | 1905 | புவனேந்திர அம்மானை (விக்ரமாதித்தன் கதை) | சரவண பெருமான் கவிராயர் (ஆ) |
| 45 | 1906 | சுந்தரி கல்யாண அம்மானை | சுப்பிரமணிய பிள்ளை |
| 46 | 1906 | தமிழறியும்பெருமாள் அம்மானை | மதுரை என். ராமலிங்கம் பிள்ளை |
| 47 | 1907 | ஸ்ரீராமர் வனவாசம் | அரங்கசாமி நாயகர் |
| 48 | 1909 | பசுக்கடை அம்மானை | குழந்தைவேலு பிள்ளை |
| 49 | 1910 | வழக்குரைத்த அம்மானை | பி. கதிர்வேலு பிள்ளை |
| 50 | 1911 | ஏறல் மாநகரம் சேர்மன் அருணாசல சுவாமிகளின் சித்துவிளையாடல் அம்மானை | இராமகிருஷ்ண முத்து நாடார் |
| 51 | 1911 | திருச்செல்வர் அம்மானை | திருச்செல்வராயன் |
| 52 | 1912 | கந்தரம்மானை | வி.இராமலிங்க செட்டி |
| 53 | 1913 | சித்து விளையாடல் அம்மானை | கந்தசாமி நாடார் |
| 54 | 1914 | திருமரணத்திறவுகோல் என்னும் நன்மரண அம்மானை | எஸ். ஆர். நாதன் (ஆ) |
| 55 | 1915 | ஐரோப்பிய யுத்த அம்மானை | எஸ். ஆர். சூசைய பிள்ளை (ஆ) |
| 56 | 1915 | நன்மரண அம்மானை | மரியம் பிள்ளை (ஆ) |
| 57 | 1916 | சந்தீக்கிலாவின் தவசதித அம்மானை | டி. ஏ. பெருமாள் பிள்ளை |
| 58 | 1916 | திருமுருக அம்மானை | எஸ். எஸ். இராமசாமி பிள்ளை |
| 59 | 1918 | செழுகை அம்மானை | பி. மாணிக்கசாமி முதலி |
| 60 | 1922 | பொன்னாக்ஷி அம்மன் அம்மானை | கருப்பசாமி கவி (ஆ) |
| 61 | 1923 | வள்ளிநாயகி அம்மானை | ஆறுமுக நாடார் |
| 62 | 1924 | கள்ளழகர் அம்மானை | பி. என். சிதம்பர முதலி |
| 63 | 1927 | வீரப்பம்மாள் அம்மானை | டி.சங்குப் புலவர் (ஆ) |
| 64 | 1927 | கற்பினணிகலம் : கன்னிகையும் வேதசாக்ஷியுமான அர்ச். செசீலியம்மாளின் அற்புதச்சரிதை அம்மானை | மரிய சூசை ஆச்சாரியார் |
| 65 | 1933 | ஸ்ரீமத் மஹாபாரத அம்மானை | மதுரை புக்ஷாப் ஸ்ரீ பழனியாண்டி அண்ட் கோ (பதி.) |
| 66 | 1930 | அர்ச் யாகப்பர் அம்மானை | பேதுருப் புலவர் |
| 67 | 1935 | காந்தி அம்மானை | எம்.எச். கான் முகமது |
| 68 | 1940 | கண்ணப்பர் அம்மானை | வெ.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் (ப) |
| 69 | 1951 | இராமப்பய்யன் அம்மானை | எஸ். வையாபுரிப் பிள்ளை |
| 70 | 1952 | ஆண்டவர் அம்மானை | தாஸ் & பிரதர் (வெளியீட்டாளர்) |
| 71 | 1953 | அகிலத் திரட்டு அம்மானை | அரிகோபால் (பதி) |
| 72 | 1956 | மாக புராண அம்மானை : மாகஸ்நான புராண அம்மானை | தெ.பொ.மீனாட்சிசுந்தரம் (பதி) |
| 73 | 1979 | வீரையன் அம்மானை | அ.மா. பரிமணம் (பதி) |
| 74 | 1980 | திரு அம்மானை | கி.வா. ஜகந்நாதன் (பதி) |
| 75 | 1980 | ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை | புலவர் வி. சொக்கலிங்கம் (பதி) |
| 76 | 1981 | ஸ்ரீ ராமர் அம்மானை | டாக்டர் அ.மா. பரிமணம் (பதி) |
| 77 | 1982 | சீவக சிந்தாமணி அம்மானை | வி.சொக்கலிங்கம் (பதி.ஆசி.) |
| 78 | 1986 | சித்திரபுத்திரர் அம்மானை | கி. கோதண்ட பாணி (பதி) |
| 79 | 1989 | அருளப்பர் அம்மானை | பா. சத்தியசீலன் (பதி) |
| 80 | 1990 | காஞ்சி மன்னன் அம்மானை | எம்.சீராளன் (பதி) |
| 81 | 1995 | புதுவூர்ச் சக்கரவர்த்தி அம்மானை | மருதமுத்து, மொ. |
| 82 | 1995 | அரிச்சந்திரன் அம்மானை | ய. மணிகண்டன் (பதி) |
| 83 | 1995 | சுந்தரி அம்மானை | ச. திலகம் (பதி) |
| 84 | 1996 | ஆமையர் அம்மானை | ஆர். மருதமுத்து (பதி) |
| 85 | 1999 | வைகுண்ட அம்மானை | ஜான் சாமுவேல் (பதி) |
| 86 | 1999 | மதுரை வீரன் அம்மானை | ம. சீராளன் (பதி) |
| 87 | 2004 | வைகுந்த அம்மானை | புலவர் வீ. சொக்கலிங்கம் (பதி) |
| 88 | 2007 | அதிரியர் அம்மானை | பொ.சாம் டேனியல் (பதி) |
| 89 | 2011 | அருச்சுனன் பாசுபத அம்மானை | ஏ. பாக்கியராஜன் (பதிப்பாளர்) |
| 90 | ஆண்டினை அறிய இயலவில்லை | ரூத் அம்மானை | ஏ.என். சட்டாம்பிள்ளை |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
18-Sep-2023, 09:46:33 IST