விலாசம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
விலாசம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சகுந்தலை விலாசம்: சகுந்தலை விலாசம் (1845) சகுந்தலை – துஷ்யந்தன் வரலாற்றைக் கூறும் நூல். இதன் ஆசிரியர், இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர்
- சங்கர நாராயண விலாசம்: சங்கர நாராயண விலாசம் மராட்டியர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட நாடக நூல்.
- சங்கர விலாசம்: சங்கர விலாசம் சிவனைப் போற்றிக் கூறும் கவிதை நூல். மராட்டிய மன்னர்கள் காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது
- சந்திரிகா ஹாஸை விலாசம்: சந்திரிகா ஹாஸை விலாச நாடகம் மராட்டியர் ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட நூல். மராட்டியர் ஆட்சியில் நாடகத்தை கல்யாணம், விலாசம், நாடகம் என கூறும் வழக்கம் இருந்துள்ளது
- டம்பாச்சாரி விலாசம்: டம்பாச்சாரி விலாசம், 1867-ல் எழுதப்பட்ட ஒரு தமிழ் நாடக நூல். இதனை இயற்றியவர் சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார்
- பஞ்ச பாஷா விலாசம்: பஞ்ச பாஷா விலாசம்(பொ. யு. பதினேழாம் நூற்றாண்டு) மராட்டிய ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்ட நாடக நூல்
- பஞ்ச லட்சணத் திருமுக விலாசம்: பஞ்ச லட்சணத் திருமுக விலாசம் (1900) தொடக்க காலத் தமிழ் விலாச நூல்களுள் ஒன்று. தாது வருஷப் பஞ்சத்தைப் பாடுபொருளாகக் கொண்டது
- பாண்டியகோளி விலாசம்: பாண்டியகோளி விலாசம் மராட்டியர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட நாடக நூல்.
- பிரதாப சந்திர விலாசம்: பிரதாப சந்திர விலாசம் (1877) தொடக்ககால தமிழ் சமூக நாடகங்களில் ஒன்று. இதனை இயற்றியவர் ப
- பூதத்தம்பி விலாசம்: பூதத்தம்பி விலாசம் (1888) கொஸ்தான் எழுதிய நாடகநூல். இந்நூல் இலங்கையில் ஒல்லாந்தவர் (ஹாலந்து நாட்டினர்) ஆட்சி செய்த காலகட்டத்தில் இராசவாசல் முதலியார்களில் ஒருவராக விளங்கிய பூதத்தம்பி என்பவரின் வாழ்க்கை மற்றும் மரணம் பற்றிய நாட்டார்ப்பாடல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது
- பூலோக தேவேந்திர விலாசம்: பூலோக தேவேந்திர விலாசம் (பொ. யு. பதினேழாம் நூற்றாண்டு) மராட்டியர் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட இசை நாட்டிய நாடகம்
- மதனசுந்தரப் பிரசாத சந்தான விலாசம்: மதனசுந்தரப் பிரசாத சந்தான விலாசம் மராட்டியர் ஆட்சியில் எழுதப்பட்ட நாடக நூல்.
- விஷ்ணு சாஹராஜ விலாசம்: விஷ்ணு சாஹராஜ விலாசம் தஞ்சையில் மராட்டியர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட நாடக நூல்.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.