under review

பாண்டியகோளி விலாசம்

From Tamil Wiki

பாண்டியகோளி விலாசம் மராட்டியர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட நாடக நூல்.

பார்க்க: மராட்டியர் ஆட்சி கால தமிழ் இலக்கியங்கள்

காலம்

பாண்டியகோளி விலாசம் சாகேஜி மன்னர் கேட்டுக் கொள்ள நாராயண கவி இயற்றியது என முனைவர் மு. இளங்கோவன் குறிப்பிடுகிறார். இதன் மூலம் இந்நூலின் காலம் பொ.யு. 1684 - 1712 என அறியமுடிகிறது.

நூல் அமைப்பு

பாண்டியகோளி விலாசம் பாண்டியன் தன் மனைவியுடன் இன்ப விளையாடல் புரிவதைச் சொல்லும் நாடகம். பாண்டியன் மனைவியுடன் பூங்கா சென்று மலர், பறவைகளைக் கண்டு மகிழ்ந்து பாடும் போது ரத்தின வியாபாரி மணிகளை விற்க வருகிறான். அவை அனைத்தையும் அரசன் அரசிக்காக வாங்குகிறான்.

பின் குறிசொல்லும் பூசாரி உடுக்கை ஏந்தியும், உருமாலை அணிந்தும், திருநீறு தரித்தும், தெய்வங்களை அழைத்தும் பாடுகிறார். பூசாரி முகராசி நோக்கியும், முத்து வைத்து பார்த்து குறிச் சொல்லி அரசனிடம் பரிசு பெற்று செல்வதும், அரசனின் பெருமை பாடுவதுமாக பாடல்கள் அமைந்துள்ளன.

உசாத்துணை


✅Finalised Page