under review

சங்கர நாராயண விலாசம்

From Tamil Wiki

சங்கர நாராயண விலாசம் மராட்டியர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட நாடக நூல்.

நூலாசிரியர்

இந்நூலின் ஆசிரியர் ஆபத்சகாய பாரதி.

காலம்

மோடி ஆவணக் குறிப்பில் இடம்பெற்றுள்ள, 'ஆரவி - சங்கரநாராயண விலாச நாடகம் - பூர்வகசிவ விஷ்ணு சரித்திர (பக்கம் 48)' என்னும் குறிப்பின் மூலம் இந்நூல் சாகேஜி மன்னரின் காலத்தில் இயற்றப்பட்டது தெரிகிறது. சாகேஜி மன்னரின் காலம் பொ.யு. 1684 - 1712.

சுவடி

சங்கர நாராயண விலாசத்தின் சுவடி தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் தெலுங்கு நாடகப் பிரிவில் ‘சங்கர நாராயணக் கல்யாணம்’ என்னும் பெயரில் படியெடுக்கப்பட்டுள்ளது. ’சங்கர நாராயண விலாசமும்’, ‘சங்கர நாராயணக் கல்யாணமும்’ ஒன்றா அல்லது இரு வேறு நூல்களா எனத் தெரியவில்லை.

உசாத்துணை

  • மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம்


✅Finalised Page