under review

முழுநீறு பூசிய முனிவர்

From Tamil Wiki
முழுநீறு பூசிய முனிவர் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

சேக்கிழார் பெருமான், பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களுடன் தொகையடியார்கள் ஒன்பதுபேரைப் பற்றிப் பாடியுள்ளார். ‘முழுநீறு பூசிய முனிவர் புராணம்' என்பது அவற்றில் ஒன்று.

முழுநீறு பூசிய முனிவர் - விளக்கம்

“முழுநீறு பூசிய முனிவர்கள், பிறப்பொழுக்கத்தில் தலைமையான அற ஒழுக்கத்தை உடையவர்கள். மெய்யுணர்வு உடையவர்களாய், தாம் கொண்ட அறநெறியில் தவறாது நிற்பவர்கள். தொன்று தொட்டு வரும் மும்மலங்களையும் அறுத்த வாய்மையுடைய அரிய முனிவர்கள், முறையாகச் செய்துவரும் நாள்வேள்வியில் விளைத்து எடுத்த திருநீற்றைப் புதிய கலத்தில் வைத்துக் கொண்டு, புலித் தோலை உடுத்த இறைவரை வணங்கி, அத்திருநீற்றை மேனி முழுவதும் பூசிக் கொள்பவர்கள். இவர்களே முழுநீறு பூசிய முனிவர் எனப்படுவார்.” என்று சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்

சாதியினில் தலையான தரும சீலர்
தத்துவத்தின் நெறியுணர்ந்தோர் தங்கள் கொள்கை
நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர்
நித்தநிய மத்துநிகழ்அங்கி தன்னில்
பூதியினைப் புதியபா சனத்துக் கொண்டு
புலியதளின் உடையானைப் போற்றி நீற்றை
ஆதிவரும் மும்மலமும் அறுத்த வாய்மை
அருமுனிவர் முழுவதும்மெய் யணிவா ரன்றே.

குரு பூஜை

முழுநீறு பூசிய முனிவர்களின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், பங்குனி மாதத்தின் இறுதி நாளன்று நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page