under review

மாலை இலக்கிய நூல்கள்-சைவம்

From Tamil Wiki

’மாலை’ என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. மலர்களைத் தொடுத்து மாலை அமைப்பது போல, ஒரு பொருளை முன்னிட்டு, அப்பொருளைப் பற்றிய பல்வேறு அம்சங்களைக் குறித்து, ஒரே வகைப் பாவகையைக் கொண்டும், பல்வேறு வகைப் பாக்களையும், பாவினங்களையும் கொண்டும் பாடப்படுவது மாலை. மாலை இலக்கிய நூல்களில் சைவ சமயம் சார்ந்த மாலை நூல்களும் இயற்றப்பட்டுள்ளன.

மாலை இலக்கிய நூல்கள் - சைவ சமயம்

சைவ சமயம் சார்ந்த மாலை நூல்கள் பலவும் சிவன் மீதும் அன்னை பார்வதி மீதும் பாடப்பட்டனவாக அமைந்துள்ளன. இறைவனாகிய சிவபெருமானின் பெருமை, அடியவர்களுக்கு இறைவன் அருள்புரியும் விதம், இறைவனின் கருணை, அவரது பேராற்றல் போன்றவற்றையும், புராணக் கூறுகளையும், சமய தத்துவக் கருத்துக்களையும் கொண்டனவாக சைவ சமயம் சார்ந்த மாலை நூல்கள் அமைந்துள்ளன.

மாலை இலக்கிய நூல்கள் பட்டியல் - சைவ சமயம்

சைவ சமயம் சார்ந்து பல மாலை நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் சில..

வரிசை எண் நூல் பெயர் ஆசிரியர் பெயர்
1 அகிலாண்டநாயகி மாலை மீனாட்சிசுந்தரம் பிள்ளை
2 அகிலாண்டேஸ்வரி மாலை ஞானச்சித்தர்
3 அங்கயற்கண்ணி மாலை கலிய பெருமாள்
4 அங்கயற்கண்ணி அம்மன் இரட்டைமணிமாலை புலவர் தட்சிணாமூர்த்தி
5 அங்கயற்கண்ணி அலங்கார மாலை அ. நரசிம்மபாரதி
6 அடைக்கல மாலை தொழுவூர் வேலாயுத முதலியார்
7 அட்டைஸ்வரிய மாலை சுப்பிரமணிய ஐயர்
8 அண்ணாமலை தோத்திரப் பாமாலை கந்தப்ப ஞானதேசிகர்
9 அதிசய மாலை துறைசை அம்பலவாண தேசிகர்
10 அதிசய மாலை இராமலிங்க அடிகள்
11 அபய மாலை தொழுவூர் வேலாயுத முதலியார்
12 அபயாம்பிகை மாலை மு.ரா. சீனுவாச சர்மா
13 அபராத மன்னிப்பு மாலை இராமலிங்க அடிகளார்
14 அபராத மாலை இராமலிங்க அடிகளார்
15 அபிடேக மாலை வீமணக் கவிராயர்
16 அபிடேக மாலை அவிநாசிநாத செட்டியார்
17 அபிஷேகநாதர் மாலை அருளப்பச் செட்டியார்
18 அபிஷேக மாலை சிவப்பிரகாசர்
19 அபிராமி மாலை சுந்தரம் அம்மையார்
20 அருள்மணி மாலை மணி சுப்பிரமணி ஐயர்
21 அம்பலவாண தேசிகர் திருவடிப் புகழ்ச்சி மாலை தொட்டிக்கலை சுப்பிரமணி முதலியார்
22 அம்பலவாணர் பஞ்சரத்தின மாலை தொட்டிக்கலை சுப்பிரமணி முதலியார்
23 அமுத சித்தர் நான்மணிமாலை வேதநாயக்கர்
24 அம்பிகை மாலை குலசேகர பாண்டியர்
25 அம்மையப்பர் பதிக மாலை சிவராச சுவாமிகள்
26 அம்பிகை பதிக மாலை குணபதி சுவாமிகள்
27 அருகேச நல்லூர் சிவகாமி மாலை அருணாசலம் பிள்ளை
28 அருட்பிரகாசர் அற்புத மாலை ச.மு. கந்தசாமிப்பிள்ளை
29 அருட்பிரகாச மாலை இராமலிங்க அடிகளார்
30 அருட்பிரகாச மாலை சுத்தானந்த பாரதியார்
31 அருள்மொழி மாலை இராமலிங்க அடிகளார்
32 அருணாசல அட்சர மணி மாலை ரமண மகரிஷி
33 அருணாசலேஸ்வர் தோத்திரப் பாமாலை சதம்பா உபாத்தியாயர்
34 அருணாசல சுவாமிகள் மாலை அட்டமுத்து நாடார்
35 அருணேசர் மாலை சரவணக் கவிராயர்
36 அச்சோதி மாலை போசகராசர்
37 ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை நம்பியாண்டார் நம்பி
38 அச்சோதி மாலை போசகராசர்
39 ஆனந்த மாலை வீர கவிராச பண்டிதர்
40 இரட்டைமணிமாலை காரைக்கால் அம்மையார்
41 இரட்டைமணிமாலை கபிலர்
42 இங்கித மாலை இராமலிங்க அடிகளார்
43 இட்டலிங்க அபிடேக மாலை சிவப்பிரகாசர்
44 இரட்டைமணி மாலை குமரகுருபரர்
45 உபதேச மாலை சிவஞான வாயிலார்
46 கணபதி மாலை தண்டபாணி சுவாமிகள்
47 கிரிதர மாலை சுப்பையா தீட்சிதர்
48 குரு பாமாலை தண்டபாணி தேசிகர்
49 குருஞானசம்பந்தர் மாலை வெள்ளியம்பலவானத் தம்பிரான்
50 கோயில் நான்மணிமாலை பட்டினத்தார்
51 கைஷிதல மாலை சிவப்பிரகாசர்
52 வைகைச் சிதம்பரேஸ்வரர் மாலை மீனாட்சிசுந்தரம் பிள்ளை
53 ஞானப்பிரகாசர் மாலை குருஞான சம்பந்தர்
54 சகலகலாவல்லி மாலை குமரகுருபரர்
55 சச்சிதானந்த மாலை வாலையானந்த சுவாமி
56 சிவபெருமான் இரட்டை மணிமாலை கபிலர்
57 சிவானந்த மாலை சிவானந்த முனிவர்
58 சிவகாமியம்மை இரட்டை மணிமாலை குமரகுருபரர்
59 சிவஞானசுவாமிகள் இரட்டை மணி மாலை பாண்டித்துரைத் தேவர்
60 சோணசைல மாலை சிவப்பிரகாசர்
61 செந்தமிழ்ப் பாமாலை பொன்னாயிரக் கவிராயர்
62 திருப்பணி மாலை தாண்டவமூர்த்தி
63 திருந்தொண்டர் மாலை குமாரபாரதி
64 தியாகப்பெருமான் பாமாலை சுத்தானந்த பாரதியார்
65 திருச்செந்தில் மாலை சொக்கலிங்கஞ் செட்டியார்
66 திருவாரூர் மருந்து வெண்பாமாலை தியாகராசச் செட்டியார்
67 திருவாரூர் நான்மணிமாலை குமரகுருபரர்
68 திருத்தணிகை மாலை கந்தப்ப ஐயர்
69 திருப்போரூர் மாலை சிதம்பர அடிகள்
70 திருக்காவூர் முல்லைவனநாத சுவாமி மாலை வீரபத்திர சுவாமி
71 தெய்வமணி மாலை இராமலிங்க அடிகள்
72 நமச்சிவாய மாலை குரு நமசிவாயர்
73 நாரையூர் விநாயகர் மணிமாலை நம்பியாண்டார் நம்பி
74 நாவுக்கரசர் ஏகாதச மாலை நம்பியாண்டார் நம்பி
75 நால்வர் நான்மணிமாலை சிவப்பிரகாசர்
76 பராபர மாலை அம்பிகாபதி
77 பரமாதசிய மாலை குருநமச்சிவாயர்
78 பஞ்சாக்கர தேசிக மாலை சிவஞானமுனிவர்
79 பஞ்சரத்தின மாலை சிவஞான சுவாமிகள்
80 பஞ்சாக்கர மாலை மறைஞான சம்பந்தர்
81 பிராசாத மாலை கமலை அம்பலவாணத் தம்பிரான்
82 பூமாலை கமலநாதர்
83 பெரிய நாயகிமாலை சண்முகசாமி
84 மணிச்சுடர் மாலை தில்லைக் காமாட்சியம்மை
85 மகாதேவ மாலை இராமலிங்க அடிகளார்
86 மதுரை மீனாட்சியம்மை திருவடி மாலை அரசஞ்சண்முகனார்
87 மதுராபுரியம்பிகை மாலை உக்கிரகுமார பாண்டியன்
88 மதுரை மாலை சபாபதி முதலியார்
89 மெய்கண்டார் புகழ் மாலை மு.சுந்தரேசம்பிள்ளை
90 வடிவுடைமாணிக்க மாலை இராமலிங்க அடிகளார்
91 வராகி மாலை கவிராசபண்டிதர்
92 வீர மாலை பாண்டி கவிராயர்

உசாத்துணை


✅Finalised Page