ப்ரியம்வதா
- ப்ரியம்வதா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ப்ரியம்வதா (பெயர் பட்டியல்)
ப்ரியம்வதா (உமா மகேஸ்வரி) (பிறப்பு: நவம்பர் 29, 1971) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். சிறுகதைகள், கவிதைகள் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
ப்ரியம்வதாவின் இயற்பெயர் உமா மகேஸ்வரி. கடலூரில் பெ.கிருஷ்ணமூர்த்தி, கி.நளாயினி இணையருக்கு நவம்பர் 29, 1971-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் இரு சகோதரிகள். கடலூர் செயின்ட் பிலோமினாஸ் நடுநிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
ப்ரியம்வதா நவம்பர் 17, 1996-ல் மோகன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மகள் ப்ரியம்வதா
இலக்கிய வாழ்க்கை
ப்ரியம்வதா கல்லூரி மலரில் ஆங்கிலக் கவிதைகள் எழுதினார். இவரின் முதல் நூல் ’மௌனப் பெருங்கடல்’ 2019-ல் வெளியானது. ஆனந்த விகடன், புதிய பார்வை, உயிரோசை.காம் (உயிர்மை), திண்ணை.காம், தினமணி கதிர், தி இந்து ஆங்கிலம், நமது மண், குங்குமம் தோழி ஆகிய இதழ்களில் கவிதைகள் எழுதினார். ஆதர்ச எழுத்தாளர்கள் லாசரா, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுஜாதா, வைரமுத்து, நகுலன், பிரமிள், விக்ரமாதித்யன், ஞானக்கூத்தன், தேவதச்சன், சுந்தர ராமசாமி, மனுஷ்யபுத்திரன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
விருதுகள்
- ஐயை சக்தி விருது
நூல் பட்டியல்
கவிதைத்தொகுப்பு
- மௌனப் பெருங்கடல்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
07-Mar-2024, 12:54:43 IST