பாபநாசம் ஸ்ரீமான் பிள்ளை
- பாபநாசம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாபநாசம் (பெயர் பட்டியல்)
பாபநாசம் ஸ்ரீமான் பிள்ளை (பாபநாசம் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை) (1885 - அக்டோபர் 6, 1949) ஒரு தவில் கலைஞர்.
இளமை, கல்வி
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் என்ற ஊரில் தவில் கலைஞர் சாமிநாத பிள்ளை - தனபாக்கியத்தம்மாள் இணையருக்கு 1885-ம் ஆண்டு மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவருடைய தவில் வாசிப்பைப் பாராட்டி மைசூர் மன்னர் 'லயஸ்ரீமான்’ எனப் பாராட்ட, அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
மூத்த சகோதரர் பாபநாசம் முத்தையா பிள்ளையிடம் தவில் கற்றார் ஸ்ரீமான் பிள்ளை. பின்னர் கிடிகிட்டிக் கலைஞர் கீவளூர் ஷண்முகம் பிள்ளையிடம் மேற்பயிற்சி பெற்றார்.
தனிவாழ்க்கை
ஸ்ரீமான் பிள்ளை செந்தலையைச் சேர்ந்த வார்த்தலையம்மாளை மணந்து ஸ்வாமிநாதன், சக்திவேல், சுப்பிரமணியம், குருஸ்வாமி என்ற நான்கு மகன்களைப் பெற்றார்.
இசைப்பணி
பலமுறை யாழ்ப்பாணம் சென்று கச்சேரிகள் செய்த ஸ்ரீமான் பிள்ளைக்கு அங்கு பல மாணவர்கள் இருந்தனர்.
மாணவர்கள்
பாபநாசம் ஸ்ரீமான் பிள்ளையின் முக்கியமான சில மாணவர்கள்:
- பாபநாசம் வீராஸ்வாமி பிள்ளை
- ஆவூர் வீரையா பிள்ளை
- அத்திக்கடை கண்ணுஸ்வாமி பிள்ளை
- பாபநாசம் சின்ன முத்தையா பிள்ளை
- பாபநாசம் கோவிந்தஸ்வாமி பிள்ளை
- வலங்கைமான் ரத்தினஸ்வாமி பிள்ளை
- கும்பகோணம் சிங்காரம் பிள்ளை
- அம்மாசத்திரம் வடிவேல் பிள்ளை
- செந்தலை வீராஸ்வாமி பிள்ளை
உடன் வாசித்த கலைஞர்கள்
பாபநாசம் ஸ்ரீமான் பிள்ளை பின்வரும் கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:
- கும்பகோணம் சிவக்கொழுந்துப் பிள்ளை
- நாகூர் சுப்பய்யா பிள்ளை
- சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை
- பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளை
- மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை
- திருவிடைமருதூர் சிவக்கொழுந்து பிள்ளை
மறைவு
பாபநாசம் ஸ்ரீமான் பிள்ளை அக்டோபர் 6, 1949 அன்று காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Oct-2023, 06:30:37 IST