under review

பாபநாசம் முத்தையா பிள்ளை

From Tamil Wiki

பாபநாசம் முத்தையா பிள்ளை (1873 - 1932) ஒரு தவில் கலைஞர்.

இளமை, கல்வி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் என்ற ஊரில் தவில் கலைஞர் சாமிநாத பிள்ளை - தனபாக்கியத்தம்மாள் இணையருக்கு 1873-ம் ஆண்டு முத்தையா பிள்ளை முதல் மகனாகப் பிறந்தார்.

தந்தையிடம் தவில் கற்றார் முத்தையா பிள்ளை.

தனிவாழ்க்கை

முத்தையா பிள்ளையின் உடன் பிறந்த தம்பி தவில் கலைஞர் பாபநாசம் ஸ்ரீமான் பிள்ளை. ஒரு தங்கை இளம் வயதிலேயே இறந்துவிட்டார். பந்தணைநல்லூர் குருஸ்வாமி பிள்ளையின் சகோதரி கோமளத்தம்மாளை முத்தையா பிள்ளை மணந்தார். இவர்களுக்கு மீனாக்ஷி, குப்பம்மாள் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் திருக்காட்டுப்பள்ளி முருகய்யா பிள்ளை), குஞ்சம்மாள் (கணவர்: பாபநாசம் சுந்தரராஜ பிள்ளை), ராஜாயி என்ற மகள்களும் பாபநாசம் ராமஸ்வாமி பிள்ளை (தவில்) என்ற ஒரு மகனும் பிறந்தனர்.

இசைப்பணி

பாபநாசம் முத்தையா பிள்ளை நெடுங்காலம் திருவிடைமருதூர் சிவக்கொழுந்து பிள்ளைக்குத் தவில் வாசித்திருக்கிறார். இருவரும் சேர்ந்து வாசித்து மைசூர் மன்னரிடம் பரிசுகள் பெற்றனர்.

மாணவர்கள்

பாபநாசம் முத்தையா பிள்ளையின் முக்கியமான சில மாணவர்கள்:

மறைவு

பாபநாசம் முத்தையா பிள்ளை 1932-ம் ஆண்டு ஐம்பத்தி ஒன்பதாவது வயதில் காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page