under review

எண்செய்யுள்

From Tamil Wiki

To read the article in English: Enseyyul. ‎


எண்செய்யுள் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாட்டுடைத் தலைவன் ஒருவனின் ஊரையும் பெயரையும் சிறப்பித்து, பத்து முதல் ஆயிரம் பாடல்கள் வரை அமையப்பெற்றது எண்செய்யுள் . ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட பாடலை இறைவன் குடிகொண்டுள்ள அல்லது அரசன் வாழும் ஊரின் பெயரைச் சொல்லிப் புகழ்வது எண்செய்யுள்.

ஒத்திடும் பாட்டுடைத்தலைவன் ஊர்பெயரினை
எடுத்தும் எண்ணால் பெயர் பெற
ஈரைந்து கவிமுதல் ஆயிரம்வரை சொல்லல்
எண்செய்யுள் ஆகுமன்றே
                                             - பிரபந்த தீபிகை - பாடல் 15

பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் எண் செய்யுள் என்ற இலக்கிய வகையில் பல பிரிவுகள் உண்டென்பதும் பத்து பாடல்கள் முதல் ஆயிரம் பாடல்கள் வரை பாடப்படும் எண் செய்யுள்கள் பாடப்படும் பாடல்களின் எண்ணிக்கைக்கேற்பப் பெயர்பெறும் என்பதும் பெறப்படுகின்றது.

ஊரையும் பெயரையும் உவந்து எண்ணாலே
சீரிதின் பாடல் எண்செய்யுள் ஆகும் - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 848

இலக்கண விளக்கப் பாட்டியல் எண் செய்யுள் நூற்பாவிற்கு எழுதியுள்ள உரையில், “பாட்டுடைத் தலைவன் ஊரினையும் பெயரினையும் உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரமளவும் பொருட்சிறப்பினாலே பாடுதல் அவ்வவ் எண்ணாற் பெயர்பெற்று நடக்கும் எண் செய்யுளாம். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன” என்று விளக்கம் தரப்பட்டுள்ளது

எடுத்துக்காட்டு நூல்கள்

எண்செய்யுள் நூல்கள் சில:

உசாத்துணை

இதர இணைப்புகள்


✅Finalised Page