under review

அப்பாலும் அடிசார்ந்தார்

From Tamil Wiki
அப்பாலும் அடிசார்ந்தார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

சேக்கிழார் பெருமான், பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களுடன் தொகையடியார்கள் ஒன்பது பேரைப் பற்றி பாடியுள்ளார். ‘அப்பாலும் அடிசார்ந்தார் புராணம்' என்பது அவற்றில் ஒன்று.

அப்பாலும் அடிசார்ந்தார் - விளக்கம்

”சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களால் ஆளப்படும் தமிழ்நாட்டுக்கு அப்பாலுள்ள பிற நாடுகளில் பிறந்து சிவபெருமான் திருவடிகளை அடைந்தவர்களும், சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டத் தொகையிலே போற்றப்பெற்ற சிவனடியார்கள் வாழ்ந்த காலத்துக்கு முன்னும் பின்னும் தோன்றிச் சிவபெருமானுடைய திருவடிகளைச் சார்ந்தவர்களும் அப்பாலும் அடிசார்ந்தார் என்னும் திருக்கூட்டத்தினராவர்.” - என்று சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்

மூவேந்தர் தமிழ்வழங்கு நாட்டுக் கப்பால்
முதல்வனா ரடிச்சார்ந்த முறைமை யோரும்
நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையிற் கூறும்
நற்றொண்டர் காலத்து முன்னும் பின்னும்
பூவேய்ந்த நெடுஞ்சடைமே லடம்பு தும்பை
புதியமதி நதியிதழி பொருந்த வைத்த
சேவேந்து வெல்கொடியா னடிச்சார்ந் தார்கள்
செப்பியவப் பாலுமடிச் சார்ந்தார் தாமே.

குரு பூஜை

அப்பாலும் அடிசார்ந்தார்களின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், பங்குனி மாதத்தின் இறுதி நாளன்று நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page