standardised

மணிக்கொடி (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:மணிக்கொடி காலம்.jpeg|thumb|மணிக்கொடி காலம்]]

'மணிக்கொடி' செப்டம்பர் 17, 1933- ல் அரசியல் பத்திரிகையாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் வார இதழாக செயல்பட்டது. [[கே. சீனிவாசன்]], [[வ. ரா.]], [[டி.எஸ்.சொக்கலிங்கம்|டி.எஸ். சொக்கலிங்கம்]] ஆகியோரின் கூட்டு முயற்சியால் செயல்பட்டு வந்தது. தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு 'மணிக்கொடி' இதழ் முக்கிய பங்கு வகித்தது.
'மணிக்கொடி' செப்டம்பர் 17, 1933-ல் அரசியல் பத்திரிகையாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் வார இதழாக செயல்பட்டது. [[கே. சீனிவாசன்]], [[வ. ரா.]], [[டி.எஸ்.சொக்கலிங்கம்|டி.எஸ். சொக்கலிங்கம்]] ஆகியோரின் கூட்டு முயற்சியால் செயல்பட்டு வந்தது. தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு 'மணிக்கொடி' இதழ் முக்கிய பங்கு வகித்தது.
 
== இதழ் வரலாறு ==
== இதழ் வரலாறு ==
வார இதழின் ஆரம்பகாலத்தில் கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. வ.ரா., [[டி.எஸ்.சொக்கலிங்கம்|டி.எஸ். சொக்கலிங்கம்]], சீனிவாசன் கட்டுரைகள் புது சிந்தனையாக அமைந்தன. தமிழில் புது முயற்சியான 'நடைச்சித்திரம்' என்பதை வ.ரா. இதில் தொடர்ந்து எழுதினார்.

[[சிட்டி]], [[ந. ராமரத்னம்]], [[கு.ப. ராஜகோபாலன்|கு. ப. ராஜகோபாலன்]], [[ந. பிச்சமூர்த்தி]] ஆகியோர் முதலில் கட்டுரைகளே எழுதினார்கள். பின்னர் ‘மணிக் கொடி' வார இதழில் சிறுகதைகளும் வெளியாகின. மணிக்கொடி வார இதழ் பெரிய அளவில் வந்து கொண்டிருந்தது.

அரசியல் மற்றும் சமூக விஷயங்களுக்கும், கட்டுரைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வந்த 'மணிக்கொடி' வாரப் பதிப்பு ஜனவரி 1945-ல் நின்று விட்டது. [[பி.எஸ். ராமையா]] தீவிரமாக முயன்று, மார்ச் 1935 முதல் 'மணிக்கொடி'யை மாதம் இருமுறை பத்திரிகையாகக் கொண்டு வந்தார்.

மணிக்கொடியின் அமைப்பும் உள்ளடக்கமும், நோக்கும் முற்றிலும் மாறுபட்டுவிட்ட போதிலும், அது பழைய தொடர்ச்சியாகவே கணக்கிடப்பட்டது. கதைப் பத்திரி இதழ் 'கொடி 3, மணி 1' என்று இலக்கம் பெற்றிருந்தது.  

Line 16: Line 14:
மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று மூன்று பிரிவாகப் பிரித்துப் பார்க்கலாம். மணிக்கொடி [[சீனிவாசன்]], [[பி.எஸ். ராமையா]], [[புதுமைப்பித்தன்]], [[கு.ப. ராஜகோபாலன்|கு.ப. ரா.]], இவர்கள் ஒரு பிரிவு. [[க.நா.சுப்ரமணியம்|க.நா.சு.]], [[சி.சு. செல்லப்பா]], [[தி.ஜானகிராமன்|தி.ஜா.]], [[சிட்டி]], [[மௌனி]], [[லா.ச. ராமாமிர்தம்|லா.ச.ரா.]], [[நா. சிதம்பர சுப்பிரமணியன்]] இவர்கள் இரண்டாம் பிரிவினர், றாலி போன்றோர் மூன்றாம் பிரிவினர்.

முதல் பிரிவினர், மணிக்கொடியின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் துணை நின்றவர்கள். சிறுகதையின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்கள்.

தொடக்க கால மணிக்கொடி எழுத்தாளர்கள் பலரும் சிறுகதை, நாவல், கவிதை என்ற பிரிவுகளில் சோதனை முயற்சிகள் செய்தவர்கள். பிறநாட்டு சாத்திரங்களைப் படித்து அதுபோலவே எழுத முன் வந்தவர்கள்.

[[புதுமைப்பித்தன்]], [[ந. பிச்சமூர்த்தி]], [[கு.ப. ராஜகோபாலன்]], [[பி.எஸ். ராமையா]], [[ந. சிதம்பரசுப்பிரமணியன்]], [[பெ.கோ. சுந்தரராஜன்]] (சிட்டி), [[சி.சு. செல்லப்பா]], [[மௌனி]] ஆகிய படைப்பாளிகளின் சிறந்த கதைகள் பலவற்றை மணிக்கொடி வெளியிட்டுள்ளது. பின்னர் க. நா. சுப்ரமண்யமும் இக்குழுவில் சேர்ந்தார். கி.ரா., [[எம்.வி.வெங்கட்ராம்|எம்.வி. வெங்கட்ராம்]], [[ஆர். சண்முக சுந்தரம்]], [[லா.ச. ராமாமிர்தம்]] முதலிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்திய பெருமையும் மணிக்கொடிக்கு உண்டு.

== இலக்கிய அழகியல் ==
== இலக்கிய அழகியல் ==
தமிழில் சிறுகதைக்கு என்று தனியாக ஒரு பத்திரிகை இல்லாத குறையை நீக்குவதற்காகவும், பிற நாட்டவர் கண்டு போற்றும்படியான உயர்ந்த கதைகளை எழுதக்கூடிய தமிழ் எழுத்தாளர்களை வெளிப்படுத்தவும், 'மணிக்கொடி' தோன்றியுள்ளது என்று [[பி.எஸ். ராமையா]] முதல் இதழில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சாதனையை மணிக்கொடியின் பிந்திய இதழ்கள் செய்து காட்டின.

[[பிச்சமூர்த்தி]]யின் 'தாய்' போன்ற உயர்ந்த தரத்துச் சில கதைகளை வெளியிட வாய்த்ததிலேயே, மணிக்கொடி கதைப் பதிப்பு முயற்சி ஒரு சாதனையாக நிறைவு பெற்று விட்டது என்று கூறலாம். மணிக்கொடி காலம் என்பதற்கு அந்த மாதிரி இலக்கியத்தரமான கதைகள் எழுதப்பட்ட ஒரு காலகட்டம் என்று பொருள் கொள்ளலாம் என்று தோன்றுகிறது ('மணிக்கொடி காலம்').

மணிக்கொடி போன்ற தனித்தன்மை உள்ள ஒரு பத்திரிகை காலத்தின் தேவையாக இருந்தது.இது குறித்துப் [[புதுமைப்பித்தன்]] 'ஆண்மை' என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்

Line 33: Line 29:

உலக இலக்கியங்களை ஆங்கிலத்தின் மூலம் நன்கு அறிந்திருந்த திறமையாளர்கள் இலக்கியத்தரமான சிறுகதைகளை- கதைக்கலையின் பல்வேறு தன்மையான படைப்புகளை- வாழ்க்கையின் அடிமட்டம் வரை ஆழ்ந்து அலசிப் பார்த்து உண்மைகளை உள்ளது உள்ளபடி சித்திரிக்கும் சிருஷ்டிகளை- பலரகமான உணர்ச்சி வெளிப்பாடுகளை எல்லாம் ஆழமாகவும் அழுத்தமாகவும் தமிழிலும் உருவாக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார்கள். இத்தகைய புது முயற்சிகளுக்கு மணிக்கொடி இடம் அளித்தது.'

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* தமிழில் சிறு பத்திரிகைகள் - வல்லிக் கண்ணன் (மணிவாசகர் பதிப்பகம்)

* 'மணிக்கொடி காலம்' - பி.எஸ். ராமையா (மெய்யப்பன் பதிப்பகம்)

{{Standardised}}
{{Standardised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 18:53, 25 April 2022

மணிக்கொடி காலம்

'மணிக்கொடி' செப்டம்பர் 17, 1933-ல் அரசியல் பத்திரிகையாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் வார இதழாக செயல்பட்டது. கே. சீனிவாசன், வ. ரா., டி.எஸ். சொக்கலிங்கம் ஆகியோரின் கூட்டு முயற்சியால் செயல்பட்டு வந்தது. தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு 'மணிக்கொடி' இதழ் முக்கிய பங்கு வகித்தது.

இதழ் வரலாறு

வார இதழின் ஆரம்பகாலத்தில் கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. வ.ரா., டி.எஸ். சொக்கலிங்கம், சீனிவாசன் கட்டுரைகள் புது சிந்தனையாக அமைந்தன. தமிழில் புது முயற்சியான 'நடைச்சித்திரம்' என்பதை வ.ரா. இதில் தொடர்ந்து எழுதினார்.

சிட்டி, ந. ராமரத்னம், கு. ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி ஆகியோர் முதலில் கட்டுரைகளே எழுதினார்கள். பின்னர் ‘மணிக் கொடி' வார இதழில் சிறுகதைகளும் வெளியாகின. மணிக்கொடி வார இதழ் பெரிய அளவில் வந்து கொண்டிருந்தது.

அரசியல் மற்றும் சமூக விஷயங்களுக்கும், கட்டுரைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வந்த 'மணிக்கொடி' வாரப் பதிப்பு ஜனவரி 1945-ல் நின்று விட்டது. பி.எஸ். ராமையா தீவிரமாக முயன்று, மார்ச் 1935 முதல் 'மணிக்கொடி'யை மாதம் இருமுறை பத்திரிகையாகக் கொண்டு வந்தார்.

மணிக்கொடியின் அமைப்பும் உள்ளடக்கமும், நோக்கும் முற்றிலும் மாறுபட்டுவிட்ட போதிலும், அது பழைய தொடர்ச்சியாகவே கணக்கிடப்பட்டது. கதைப் பத்திரி இதழ் 'கொடி 3, மணி 1' என்று இலக்கம் பெற்றிருந்தது.

இந்த முதல் இதழில் புதுமைப்பித்தனின் 'துன்பக்கேணி’, சி.சு. செல்லப்பாவின் 'ஸரஸாவின் பொம்மை', பி.எஸ். ராமையாவின் 'புலியின் பெண்டாட்டி', சங்கு சுப்பிரமணியனின் 'வேதாளம் சொன்ன கதை' முதலியன பிரசுரம் பெற்றன.

மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று மூன்று பிரிவாகப் பிரித்துப் பார்க்கலாம். மணிக்கொடி சீனிவாசன், பி.எஸ். ராமையா, புதுமைப்பித்தன், கு.ப. ரா., இவர்கள் ஒரு பிரிவு. க.நா.சு., சி.சு. செல்லப்பா, தி.ஜா., சிட்டி, மௌனி, லா.ச.ரா., நா. சிதம்பர சுப்பிரமணியன் இவர்கள் இரண்டாம் பிரிவினர், றாலி போன்றோர் மூன்றாம் பிரிவினர்.

முதல் பிரிவினர், மணிக்கொடியின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் துணை நின்றவர்கள். சிறுகதையின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்கள்.

தொடக்க கால மணிக்கொடி எழுத்தாளர்கள் பலரும் சிறுகதை, நாவல், கவிதை என்ற பிரிவுகளில் சோதனை முயற்சிகள் செய்தவர்கள். பிறநாட்டு சாத்திரங்களைப் படித்து அதுபோலவே எழுத முன் வந்தவர்கள்.

புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், பி.எஸ். ராமையா, ந. சிதம்பரசுப்பிரமணியன், பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி), சி.சு. செல்லப்பா, மௌனி ஆகிய படைப்பாளிகளின் சிறந்த கதைகள் பலவற்றை மணிக்கொடி வெளியிட்டுள்ளது. பின்னர் க. நா. சுப்ரமண்யமும் இக்குழுவில் சேர்ந்தார். கி.ரா., எம்.வி. வெங்கட்ராம், ஆர். சண்முக சுந்தரம், லா.ச. ராமாமிர்தம் முதலிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்திய பெருமையும் மணிக்கொடிக்கு உண்டு.

இலக்கிய அழகியல்

தமிழில் சிறுகதைக்கு என்று தனியாக ஒரு பத்திரிகை இல்லாத குறையை நீக்குவதற்காகவும், பிற நாட்டவர் கண்டு போற்றும்படியான உயர்ந்த கதைகளை எழுதக்கூடிய தமிழ் எழுத்தாளர்களை வெளிப்படுத்தவும், 'மணிக்கொடி' தோன்றியுள்ளது என்று பி.எஸ். ராமையா முதல் இதழில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சாதனையை மணிக்கொடியின் பிந்திய இதழ்கள் செய்து காட்டின.

பிச்சமூர்த்தியின் 'தாய்' போன்ற உயர்ந்த தரத்துச் சில கதைகளை வெளியிட வாய்த்ததிலேயே, மணிக்கொடி கதைப் பதிப்பு முயற்சி ஒரு சாதனையாக நிறைவு பெற்று விட்டது என்று கூறலாம். மணிக்கொடி காலம் என்பதற்கு அந்த மாதிரி இலக்கியத்தரமான கதைகள் எழுதப்பட்ட ஒரு காலகட்டம் என்று பொருள் கொள்ளலாம் என்று தோன்றுகிறது ('மணிக்கொடி காலம்').

மணிக்கொடி போன்ற தனித்தன்மை உள்ள ஒரு பத்திரிகை காலத்தின் தேவையாக இருந்தது.இது குறித்துப் புதுமைப்பித்தன் 'ஆண்மை' என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்

'மணிக்கொடி பத்திரிகையானது வெளிவரும் முன்பு எத்தனையோ இலக்கியப் பத்திரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், புதிய இடம் தொடுக்கும்- உற்காகம் ஊட்டும்- வரவேற்கும் பத்திரிகை காலத்தின் தேவையாக இருந்தது.

உலக இலக்கியங்களை ஆங்கிலத்தின் மூலம் நன்கு அறிந்திருந்த திறமையாளர்கள் இலக்கியத்தரமான சிறுகதைகளை- கதைக்கலையின் பல்வேறு தன்மையான படைப்புகளை- வாழ்க்கையின் அடிமட்டம் வரை ஆழ்ந்து அலசிப் பார்த்து உண்மைகளை உள்ளது உள்ளபடி சித்திரிக்கும் சிருஷ்டிகளை- பலரகமான உணர்ச்சி வெளிப்பாடுகளை எல்லாம் ஆழமாகவும் அழுத்தமாகவும் தமிழிலும் உருவாக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார்கள். இத்தகைய புது முயற்சிகளுக்கு மணிக்கொடி இடம் அளித்தது.'

உசாத்துணை

  • தமிழில் சிறு பத்திரிகைகள் - வல்லிக் கண்ணன் (மணிவாசகர் பதிப்பகம்)
  • 'மணிக்கொடி காலம்' - பி.எஸ். ராமையா (மெய்யப்பன் பதிப்பகம்)

⨮ Standardised

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.