திருவள்ளுவமாலை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:திருவள்ளுவமாலை.jpg|thumb|திருவள்ளுவமாலை]]
This page is being created by ka. Siva
This page is being created by ka. Siva
திருவள்ளுவமாலை, [[திருக்குறள்]] மற்றும் [[திருவள்ளுவர்|திருவள்ளுவரின்]] பெருமைகளை புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு நூல். திருவள்ளுவமாலை நூலின் காலம் 11- ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவமாலை, [[திருக்குறள்]] மற்றும் [[திருவள்ளுவர்|திருவள்ளுவரின்]] பெருமைகளை புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு நூல். திருவள்ளுவமாலை நூலின் காலம் 11- ஆம் நூற்றாண்டு.
== பெயர்க் காரணம் ==
== பெயர்க் காரணம் ==
திருவள்ளுவரை வாழ்த்தும் ஐம்பத்து ஐந்து பாடல்களால் தொடுக்கப்பட்ட மாலை என்ற பொருளில் இந்நூலுக்கு திருவள்ளுவமாலை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
திருவள்ளுவரை வாழ்த்தும் ஐம்பத்து ஐந்து பாடல்களால் தொடுக்கப்பட்ட மாலை என்ற பொருளில் இந்நூலுக்கு திருவள்ளுவமாலை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
== காலம் ==
== காலம் ==
திருவள்ளுவமாலை நூலில் உள்ள பாடல்களின் சொல் அமைப்பினை நோக்கும்போது இந்நூலின் காலம் 11- ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.
திருவள்ளுவமாலை நூலில் உள்ள பாடல்களின் சொல் அமைப்பினை நோக்கும்போது இந்நூலின் காலம் 11- ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.
== பாடியவர்கள் ==
== பாடியவர்கள் ==
திருவள்ளுவமாலை நூலில் உள்ள 55 பாடல்களை 53 புலவர்கள் பாடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அசரீரி, நாமகள், இறையனார், உக்கிரப்பெருவழுதி உரைத்த பாக்களுடனே சங்கப்புலவர் நாற்பத்தொன்பது பேரும் பாடிய பாடல்களுமாகக் கூடி ஐம்பத்து மூன்று பாக்களைக் கொண்டதாக வள்ளுவமாலை  முதலில் அறியப்பட்டது. அவற்றுடன் ஔவையார், இடைக்காடர் ஆகியோர் பாக்களையும் சேர்த்து இப்பொழுது திருவள்ளுவமாலை ஐம்பத்தைந்து பாடல்கள் கொண்டதாக உள்ளது.

== மாறுபட்ட கருத்துகள் ==
== மாறுபட்ட கருத்துகள் ==
திருவள்ளுவமாலையில் இடம்பெற்றுள்ள புலவர் பெயர்களை அறிவதற்குரிய ஆதாரங்கள் சங்க நூல்கள் மட்டுமே.  அவ்வாறு நோக்கும்போது இதில் காணப்படும் பெயர்களுள் சில சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை. இறையனார் களவியலுரையின்படி கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் நாற்பத்தொன்பதின்மர் ஆவர். இவர்களில் சேந்தம் பூதனார், அறிவுடையரானார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், மருதன்இளநாகனார் ஆகிய இவர்கள் பெயர் வள்ளுவமாலையில் காணப்படவில்லை. வள்ளுவமாலையில் காணப்படும் உருத்திரசன்மர், நத்தத்தனார், முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், எறிச்சனூர் மலாடனார், போக்கியார், நாகன் தேவனார், செங்குன்றூர்க் கிழார், கவிசாகரப் பெருந்தேவனார், செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார், வண்ணக்கஞ் சாத்தனார், களத்தூர்க் கிழார், நச்சுமனார், அக்காரக்கனி நச்சுமனார், குலபதி நாயனார், தேனீக்குடிக் கீரனார், கொடிஞாழன் மாணிபூதனார், கௌணியனார், மதுரைப் பாலாசிரியனார் என்பவர்களை சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை. சங்கப் புலவர்கள் வாழ்ந்தது ஒரே காலத்தில் அல்ல. அவர்கள் வாழ்ந்த கால இடைவெளி சில நூற்றாண்டுகள் ஆகும். எனவே பாடல்கள் ஒரே காலத்தில் தோன்றியன என்பதும் ஏற்க இயலாது. வள்ளுவமாலைப் பாக்கள் சங்ககாலத்தில் அமைந்துள்ள ஓசை தராமல் பிற்கால இலக்கணம் அமைந்த ஓசை தருகின்றன என்றும் சங்கநுல்களில் காணப்படாத சொற்சிதைவு இப்பாடல்களில் காணப்படுவதையும் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். எனவே திருக்குறளைப் பற்றி சங்கப் புலவர்கள் பாடிய பாடல்களின் திரட்டே திருவள்ளுவமாலை என்பது பொருந்தாத கூற்றாகும்.

Line 22: Line 18:

இடைக்காடர், ஔவையார் என்ற பெயர்களில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள்   குறட்பாவிலும், ஏனைய ஐம்பத்து மூன்று பாடல்களும்  வெண்பாக்களாலும், திருவள்ளுவரையும் திருக்குறளையும் புகழும் வண்ணம்  பாமாலைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

== திருவள்ளுவமாலை நூலிலுள்ள பாடல்கள்; ==
== திருவள்ளுவமாலை நூலிலுள்ள பாடல்கள்; ==
(தலைப்பாக அமைந்தவை பாடிய புலவர்களின் பெயராக குறிப்பிடப்பட்டுள்ளவை)
(தலைப்பாக அமைந்தவை பாடிய புலவர்களின் பெயராக குறிப்பிடப்பட்டுள்ளவை)
Line 28: Line 23:
[[அசரீரி]]
[[அசரீரி]]

''திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடுஉருத்தகு நற்பலகை ஒக்க – இருக்கஉருத்திர சன்மர் எனஉரைத்து வானில்ஒருக்கஓ என்றதுஓர் சொல்உருத்திர சன்மர் எனஉரைத்து வானில்ஒருக்கஓ என்றதுஓர் சொல்ஒருக்கஓ என்றதுஓர் சொல்''
''திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடுஉருத்தகு''
 
''நற்பலகை ஒக்க – இருக்கஉருத்திர சன்மர் எனஉரைத்து வானில்ஒருக்கஓ என்றதுஓர் சொல்உருத்திர சன்மர் எனஉரைத்து வானில்ஒருக்கஓ என்றதுஓர் சொல்ஒருக்கஓ என்றதுஓர் சொல்''

[[நாமகள்]]
[[நாமகள்]]
Line 94: Line 91:
''உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்தெள்ளுதல் அன்றே செயற்பால – வள்ளுவனார்முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப்பகர்வார்எப்பா வலரினும் இல்''
''உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்தெள்ளுதல் அன்றே செயற்பால – வள்ளுவனார்முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப்பகர்வார்எப்பா வலரினும் இல்''

[[ஆசிரியர் நல்லந்துவனார்]]
[[நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]]

''சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்போற்றி உரைத்த பொருள் எல்லாம் – தோற்றவேமுப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்எப்பா வலரினும் இல்''
''சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்போற்றி உரைத்த பொருள் எல்லாம் – தோற்றவேமுப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்எப்பா வலரினும் இல்''
Line 247: Line 244:

''அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்குறுகத் தறித்த குறள்''
''அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்குறுகத் தறித்த குறள்''
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* திருவள்ளுவமாலை, மூலமும் தெளிவுரையும், பேராசிரியர் அ. மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம்
* திருவள்ளுவமாலை, மூலமும் தெளிவுரையும், பேராசிரியர் அ. மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம்

* திருவள்ளுவமாலை, குறள்.திறன்; <nowiki>http://kuralthiran.com/Valluvar/ValluvaMaalai.aspx</nowiki>
* திருவள்ளுவமாலை, குறள்.திறன்; <nowiki>http://kuralthiran.com/Valluvar/ValluvaMaalai.aspx</nowiki>

Revision as of 17:16, 5 August 2022

திருவள்ளுவமாலை

This page is being created by ka. Siva திருவள்ளுவமாலை, திருக்குறள் மற்றும் திருவள்ளுவரின் பெருமைகளை புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு நூல். திருவள்ளுவமாலை நூலின் காலம் 11- ஆம் நூற்றாண்டு.

பெயர்க் காரணம்

திருவள்ளுவரை வாழ்த்தும் ஐம்பத்து ஐந்து பாடல்களால் தொடுக்கப்பட்ட மாலை என்ற பொருளில் இந்நூலுக்கு திருவள்ளுவமாலை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

காலம்

திருவள்ளுவமாலை நூலில் உள்ள பாடல்களின் சொல் அமைப்பினை நோக்கும்போது இந்நூலின் காலம் 11- ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.

பாடியவர்கள்

திருவள்ளுவமாலை நூலில் உள்ள 55 பாடல்களை 53 புலவர்கள் பாடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அசரீரி, நாமகள், இறையனார், உக்கிரப்பெருவழுதி உரைத்த பாக்களுடனே சங்கப்புலவர் நாற்பத்தொன்பது பேரும் பாடிய பாடல்களுமாகக் கூடி ஐம்பத்து மூன்று பாக்களைக் கொண்டதாக வள்ளுவமாலை  முதலில் அறியப்பட்டது. அவற்றுடன் ஔவையார், இடைக்காடர் ஆகியோர் பாக்களையும் சேர்த்து இப்பொழுது திருவள்ளுவமாலை ஐம்பத்தைந்து பாடல்கள் கொண்டதாக உள்ளது.

மாறுபட்ட கருத்துகள்

திருவள்ளுவமாலையில் இடம்பெற்றுள்ள புலவர் பெயர்களை அறிவதற்குரிய ஆதாரங்கள் சங்க நூல்கள் மட்டுமே.  அவ்வாறு நோக்கும்போது இதில் காணப்படும் பெயர்களுள் சில சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை. இறையனார் களவியலுரையின்படி கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் நாற்பத்தொன்பதின்மர் ஆவர். இவர்களில் சேந்தம் பூதனார், அறிவுடையரானார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், மருதன்இளநாகனார் ஆகிய இவர்கள் பெயர் வள்ளுவமாலையில் காணப்படவில்லை. வள்ளுவமாலையில் காணப்படும் உருத்திரசன்மர், நத்தத்தனார், முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், எறிச்சனூர் மலாடனார், போக்கியார், நாகன் தேவனார், செங்குன்றூர்க் கிழார், கவிசாகரப் பெருந்தேவனார், செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார், வண்ணக்கஞ் சாத்தனார், களத்தூர்க் கிழார், நச்சுமனார், அக்காரக்கனி நச்சுமனார், குலபதி நாயனார், தேனீக்குடிக் கீரனார், கொடிஞாழன் மாணிபூதனார், கௌணியனார், மதுரைப் பாலாசிரியனார் என்பவர்களை சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை. சங்கப் புலவர்கள் வாழ்ந்தது ஒரே காலத்தில் அல்ல. அவர்கள் வாழ்ந்த கால இடைவெளி சில நூற்றாண்டுகள் ஆகும். எனவே பாடல்கள் ஒரே காலத்தில் தோன்றியன என்பதும் ஏற்க இயலாது. வள்ளுவமாலைப் பாக்கள் சங்ககாலத்தில் அமைந்துள்ள ஓசை தராமல் பிற்கால இலக்கணம் அமைந்த ஓசை தருகின்றன என்றும் சங்கநுல்களில் காணப்படாத சொற்சிதைவு இப்பாடல்களில் காணப்படுவதையும் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். எனவே திருக்குறளைப் பற்றி சங்கப் புலவர்கள் பாடிய பாடல்களின் திரட்டே திருவள்ளுவமாலை என்பது பொருந்தாத கூற்றாகும்.

இந்நூல் அனைத்தும் ஒரே புலவரால் பாடி இயற்றப்பட்டிருக்கூடும் என்னும் கருத்தையும்  அறிஞர்கள் மறுத்துள்ளனர். இந்தப் பாராட்டு மாலை யாரோ ஒருவரோ அல்லது ஒரு சிலரோ வெவ்வேறு காலங்களில் எழுதிய பாடல்களின் தொகுப்பாக இருக்கலாம் என்பது பொதுவான கருத்து. திருவள்ளுவமாலையிலுள்ள பாடல்களுள் சில சங்கப் புலவர்களாலும், சில பிற்காலப் புலவர்களாலும் பாடப் பெற்றிருக்கலாம்; பின்னர் இவை நுலாகத் தொகுக்கப் பெற்றிருக்க வேண்டும் எனவும் கொள்ள முடிகிறது.

சங்கப்புலவர்கள் பாடியதுபோலப் பிற்காலத்தவர் பாடிவைத்த பாடல் தொகுப்பே திருவள்ளுவமாலை என்பது மற்றொரு கருத்து. திருவள்ளுவமாலையை இயற்றியவர் தமது பல்வேறு பாடல்களுக்குத் தம் விருப்பத்திற்கேற்பப் புகழ்வாய்ந்த சங்கப் புலவர்களின் பெயர்களை அமைத்துக் கொண்டிருக்கலாம். பாடல்களின் அமைப்பையும் பாடுபொருளையும் காணும்போதும் இம்மாலையை ஒருவரே தொகுத்தார் என்பது ஏற்கத்தக்கதாக உள்ளது.

திருவள்ளுவமாலை நூலைப்போல, ஒருநூலுக்கோ, நூலாசிரியனுக்கோ இப்படிப் பல புலவர்கள் பெயரில் புகழாரம் தொடுத்தளித்தது, திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் மட்டுமே கிடைத்த சிறப்பு.

இடைக்காடர், ஔவையார் என்ற பெயர்களில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள்   குறட்பாவிலும், ஏனைய ஐம்பத்து மூன்று பாடல்களும்  வெண்பாக்களாலும், திருவள்ளுவரையும் திருக்குறளையும் புகழும் வண்ணம்  பாமாலைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

திருவள்ளுவமாலை நூலிலுள்ள பாடல்கள்;

(தலைப்பாக அமைந்தவை பாடிய புலவர்களின் பெயராக குறிப்பிடப்பட்டுள்ளவை)

அசரீரி

திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடுஉருத்தகு

நற்பலகை ஒக்க – இருக்கஉருத்திர சன்மர் எனஉரைத்து வானில்ஒருக்கஓ என்றதுஓர் சொல்உருத்திர சன்மர் எனஉரைத்து வானில்ஒருக்கஓ என்றதுஓர் சொல்ஒருக்கஓ என்றதுஓர் சொல்

நாமகள்

நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் – கூடாரைஎள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின்எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின்வள்ளுவன் வாயதுஎன் வாக்கு

இறையனார்

என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும்நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாதசெந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம்மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்

உக்கிரப் பெருவழுதியார்

நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூல்முறையைவந்திக்க சென்னிவாய் வாழ்த்துகநல் நெஞ்சம்சிந்திக்க கேட்க செவிவந்திக்க சென்னிவாய் வாழ்த்துகநல் நெஞ்சம்சிந்திக்க கேட்க செவிசிந்திக்க கேட்க செவி

கபிலர்

தினையளவு போதாச் சிறுபுல் நீர்கண்டபனையளவு காட்டும் படித்தால் – மனையளகுவள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்வெள்ளைக் குறட்பா விரி

பரணர்

மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்ஞாலம் முழுதும் நயந்தளந்தான் – வாலறிவின்வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து

நக்கீரர்

தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்ஆனா அறம்முதலா அந்நான்கும் – ஏனோர்க்குஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்வாழிஉலகு என்ஆற்றும் மற்று

மாமூலனார்

அறம்பொருள் இன்பம்வீ டென்னுமந் நான்கின்திறந்தெரிந்து செப்பிய தேவை – மறந்தேயும்வள்ளுவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல்கொள்ளார் அறிவுடையார்

கல்லாடர்

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறுஎனின்அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றுஎனஅன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றுஎனஎப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்முப்பால் மொழிந்த மொழி

சீத்தலைச் சாத்தனார்

மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் – மும்மாவும்தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோதாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோபாமுறைதேர் வள்ளுவர்முப் பால்

மருத்துவன் தாமோதரனார்

சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேன்அளாய்மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில் – காந்திமலைக்குத்தும் மால்யானை வள்ளுவர் முப்பாலால்தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு

நாகன் தேவனார்

தாளார் மலர்ப்பொய்கை தாம்குடைவார் தண்ணீரைவேளாது ஒழிதல் வியப்பன்று – வாளாதாம்அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவனார்முப்பால் மொழிமூழ்கு வார்

அரிசில்கிழார்

பரந்த பொருள் எல்லாம் பாரறிய வேறு பொருள் எல்லாம் பாரறிய வேறுதெரிந்து திறந்தொறும் சேரச் – சுருங்கியசொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்வல்லார்ஆர் வள்ளுவர்அல் லால்

பொன்முடியார்

கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன் தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்கூநின்று அளந்த குறளென்ப – நூல்முறையான்வான்நின்று மண்ணின்று அளந்ததே வள்ளுவனார்தாம்நின்று அளந்த குறள்

கோதமனார்

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்போற்றி யுரைத்துஏட்டின் புறத்தெழுதார் – ஏட்டெழுதிவல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று

நத்தத்தனார்

ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் – போயொருத்தர்வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவராய்க்கேட்க வீற்றிருக்க லாம்வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவராய்க்கேட்க வீற்றிருக்க லாம்ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்

முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்

உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்தெள்ளுதல் அன்றே செயற்பால – வள்ளுவனார்முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப்பகர்வார்எப்பா வலரினும் இல்

ஆசிரியர் நல்லந்துவனார்

சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்போற்றி உரைத்த பொருள் எல்லாம் – தோற்றவேமுப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்எப்பா வலரினும் இல்

கீரந்தையார்

தப்பா முதற்பாவால் தாம்மாண்ட பாடலினால்முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் – எப்பாலும்வைவைத்த கூர்வேல் வழுதி மனம்மகிழத்வைவைத்த கூர்வேல் வழுதி மனம்மகிழத்தெய்வத் திருவள் ளுவர்

சிறுமேதாவியார்

வீடொன்று பாயிரம் நான்கு விளங்கறம்நாடிய முப்பத்துமூன்று ஒன்றூழ் – கூடுபொருள்நாடிய முப்பத்துமூன்று ஒன்றூழ் – கூடுபொருள்எள்ளில் எழுபது இருபதிற்றைந் தின்பம்வள்ளுவர் சொன்ன வகை

நல்கூர் வேள்வியார்

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்உத்தர மாமதுரைக்கு அச்சென்ப – இப்பக்கம்உத்தர மாமதுரைக்கு அச்சென்ப – இப்பக்கம்மாதானுபங்கி மறுவுஇல் புலச்செந்நாப்போதார் புனற்கூடற்கு அச்சு

தொடித்தலை விழுத்தண்டினார்

அறம்நான்கு அறிபொருள் ஏழொன்று காமத்திறம்மூன்று எனப்பகுதி செய்து – பெறல்அறியநாலும் மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்போலும் ஒழிந்த பொருள்

வெள்ளி வீதியார்

செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்தபொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே – செய்யாஅதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனைஇதற்குரியர் அல்லாதார் இல்

மாங்குடி மருதனார்

ஓதற்கு  எளிதாய் உணர்தற்கு அரிதாகிவேதப் பொருளாய்

மிகவிளங்கித் – தீதற்றோர் உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமேவள்ளுவர் வாய்மொழி மாண்பு

எறிச்சலூர் மலாடனார்

பாயிரம் நான்குஇல் லறம்இருபான் பன்மூன்றேதூய துறவறம்ஒன் றுஊழாக – ஆயதூய துறவறம்ஒன் றுஊழாக – ஆயஅறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து

போத்தியார்

அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்துஉருவல் அரண்இரண்டு ஒன்றுஒண்கூழ் – இருவியல்திண்படை நட்புப் பதினேழ்குடி பதின்மூன்றுஎண்பொருள் ஏழாம் இவை

மோசிகீரனார்

ஆண்பால் ஏழ்ஆ றிரண்டுபெண்பால் அடுத்தன்புபூண்பால் இருபால்ஓர் ஆறாக – மாண்பாயகாமத்தின் பக்கம்ஒரு மூன்றாகக் கட்டுரைத்தார்நாமத்தின் வள்ளுவனார் நன்கு

காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

ஐயாரும் நூறும் அதிகாரம் மூன்றுமாம்மெய்யாய வேதப் பொருள்விளங்கப் – பொய்யாதுமெய்யாய வேதப் பொருள்விளங்கப் – பொய்யாதுதந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகிஅந்தாமரை மேல் அயன்

மதுரைத் தமிழ்நாகனார்

எல்லாப் பொருளும் இதன்பால்உள இதன்பால்இல்லாத எப்பொருளும் இல்லையால் – சொல்லால்பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார்இல்லாத எப்பொருளும் இல்லையால் – சொல்லால்பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார்பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார்சுரந்தபா வையத் துணை

பாரதம் பாடிய பெருந்தேவனார்

எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் – முப்பாற்குப்செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் – முப்பாற்குப்பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறைநேர்வனமற் றில்லை நிகர்

உருத்திர சன்மகண்ணர்

மணற்கிளைக்க நீர்ஊறும் மைந்தர்கள் வாய்வைத்துஉணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால் – பிணக்குஇலாவாய்மொழி வள்ளுவர் முப்பால்மதிப் புலவோர்க்குஆய்தொறும் ஊறும் அறிவு

பெருஞ்சித்திரனார்

ஏதம்இல் வள்ளுவர் இன்குறள் வெண்பாவினால்ஓதிய ஒண்பொருள் எல்லாம் உரைத்ததனால்ஓதிய ஒண்பொருள் எல்லாம் உரைத்ததனால்தாதுஅவிழ் தார்மாற தாமே தமைப்பயந்தவேதமே மேதக் கன

நரிவெரூஉத் தலையார்

இன்பம் பொருள்அறம் வீடுஎன்னும் இந்நான்கும்முன்பு அறியச்சொன்ன முதுமொழிநூல் – மன்பதைகட்குஉள்ள அரிதென்று அவைவள் ளுவர்உலகம்கொள்ள மொழிந்தார் குறள்உள்ள அரிதென்று அவைவள் ளுவர்உலகம்கொள்ள மொழிந்தார் குறள்கொள்ள மொழிந்தார் குறள்

மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார்

புலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல்சிலவர் புலவர் எனச்செப்பல் – நிலவுபிறங்குஒளி மாமலைக்கும் பெயர்மாலை மற்றும்கறங்குஇருள் மாலைக்கும் பெயர்

மதுரை அறுவைவணிகன் இளவேட்டனார்

இன்பமும் துன்பமும் என்னும் இவைஇரண்டும்மன்பதைக்கு எல்லாம் மனம்மகிழ – அன்பொழியாதுஉள்ளி உணர உரைத்தாரே ஓதுசீர்வள்ளுவர் வாயுறை வாழ்த்து

கவிசாகரப் பெருந்தேவனார்

பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புநதம்ஆவிற்கு அருமுனியா ஆனைக்கு அகரும்பல்தேவில் திருமால் எனச்சிறந்த தென்பவேபாவிற்கு வள்ளுவர்வெண் பா

மதுரைப்பெருமருதனார்

அறம்முப்பத் தெட்டு பொருள்எழுபது இன்பத்திறம்இருபத் தைந்தால் தெளிய – முறைமையால்வேதவிழுப் பொருளை வெண்குறளால் வள்ளுவனார்ஓதஅழக் கற்றது உலகு

கோவூர்க் கிழார்

அறம்முதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம்திறமுறத் தேர்ந்து தெளியக் – குறள்வெண்பாப்பன்னிய வள்ளுவனார் பால்முறைநேர் ஒவ்வாதேபன்னிய வள்ளுவனார் பால்முறைநேர் ஒவ்வாதேமுன்னை முதுவோர் மொழி

உறையூர் முதுகூற்றனார்

தேவிற் சிறந்ததிரு வள்ளுவர் குறள்வெண்பாவிற் சிறந்திடும்முப் பால்பகரார் – நாவிற்குஉயலில்லை சொற்சுவை ஓர்வில்லை மற்றும்செயலில்லை என்னும் திரு

இழிகண் பெருங்கண்ணனார்

இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும்செம்மை நெறியின் தெளிவுபெற – மும்மையின்வீடவற்றின் நான்கின் விதிவழங்க வள்ளுவனார்பாடினர் இன்குறள்வெண் பா

செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார்

ஆவனவும் ஆகாதனவும் அறிவுடையார்யாவரும் வல்லார் எடுத்தியம்பத் – தேவர்திருவள்ளுவர் தாமும் செப்பியவே செய்வார்பொருவில் ஒழுக்கம் பூண்டார்

செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்

வேதப்பொருளை விரகால் விரித்துலகோர்ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்பவள்ளுவர் வாய்மொழி மாட்டு

வண்ணக்கஞ் சாத்தனார்

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிதுசீரியது என்றொன்றைச் செப்பரிதால் – ஆரியம்வேதம் உடைத்து தமிழ்திரு வள்ளுவனார்ஓது குறட்பா உடைத்து

களத்தூர்க் கிழார்

ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும்தர்மம் முதல்நான்கும் சாலும் – அருமறைகள்ஐந்தும் சமயநூல் ஆறும்நம் வள்ளுவனார்புந்தி மொழிந்த பொருள்

நச்சுமனார்

எழுத்துஅசை சீரடி சொற்பொருள் யாப்புவழுக்கில் வனப்பு அணிவண்ணம் – இழுக்கின்றிஎன்றெவர் செய்தன எல்லாம் இயம்பினஇன்றிவர் இன்குறள்வெண் பா

அக்காரக்கனி நச்சுமனார்

கலைநிரம்பிக் காண்டற்கு இனிதாகிக் கண்ணின்நிலைநிரம்பும் நீர்மைய தேனும் – தொலைவுஇலாவான்ஊர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர்முப்பால்நூல் நயத்தின் பயன்

நப்பாலத்தனார்

அறம்தகளி ஆன்ற பொருள்திரி இன்புசிறந்தநெய் செஞ்சொல் தீதண்டு – குறும்பாவாவள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்உள்ளிருள் நீக்கும் விளக்கு

குலபதி நயனார்

உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துஉள்ளதள்ளற்கு அரிய இருள் தள்ளுதலால் – வள்ளுவனார்வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்கும்எனக்கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு

தேனிக்குடிக் கீரனார்

பொய்ப்பால பொய்யேயாய்ப் போயின பொய்அல்லாமெயப்பால மெய்யாய் விளங்கினவே – முப்பாலின்மெயப்பால மெய்யாய் விளங்கினவே – முப்பாலின்தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்வையத்து வாழ்வார் மனத்து

கொடிஞாழல் மாணிபூதனார்

அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின்திறன்தெரிந்தேம் வீடு தெளிந்தேம் – மறன்எறிந்தவாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயால்கேளா தனவெல்லாம் கேட்டு

கவுணியனார்

சிந்தைக்கு இனிய செவிக்கினிய வாய்க்கினியவந்த இருவினைக்கு மாமருந்து – முந்தியவந்த இருவினைக்கு மாமருந்து – முந்தியநன்நெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்பன்னிய இன்குறள்வெண் பாபன்னிய இன்குறள்வெண் பா

மதுரைப் பாலாசிரியனார்

வெள்ளி வியாழம் விளங்குஇரவி வெண்திங்கள்பொள்என நீக்கும் புறஇருளை – தெள்ளியபொள்என நீக்கும் புறஇருளை – தெள்ளியவள்ளுவர் இன்குறள் வெண்பா அகிலத்தோர்உள்இருள் நீக்கும் ஒளி

ஆலங்குடி வங்கனார்

வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும்தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால் – தெள்ளமுதம்உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால்வண்தமிழின் முப்பால் மகிழ்ந்து

இடைக்காடர்

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்குறுகத் தறித்த குறள்

ஔவையார்

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்குறுகத் தறித்த குறள்

உசாத்துணை

  • திருவள்ளுவமாலை, மூலமும் தெளிவுரையும், பேராசிரியர் அ. மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம்
  • திருவள்ளுவமாலை, குறள்.திறன்; http://kuralthiran.com/Valluvar/ValluvaMaalai.aspx