under review

கீரந்தையார்

From Tamil Wiki

கீரந்தையார் மதுரை சங்கப்புலவர் நாற்பத்தியொன்பதின்மருள் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கீரந்தையார் மதுரையைச் சேர்ந்தவர். இடைச்சங்க காலத்து களவியலுரையில் கீரந்தை எனும் புலவர் உள்ளார். இரண்டாம் பரிபாடலின் ஆசிரியர் ஒருவர் கீரந்தையார் என்று அழைக்கப்பட்டார். குறுந்தொகைப் புலவர்களில் இளங்கீரந்தையார், பொதுக்கயத்துக் கீரந்தை எனும் பெயர்கள் உள்ளன. கீரந்தை என்னும் பெயர் சிலப்பதிகாரத்திலும் உள்ளது.

இலக்கிய வாழ்க்கை

கீரந்தையார் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு சிறப்புப் பாயிரம் இயற்றினார்.

பாடல் நடை

  • திருவள்ளுவர் சிறப்புப்பாயிரம்

தப்பா முதற்பாவாற் றாமாண்ட பாடலினான்
முப்பாலி னாற்பான் மொழிந்தவர் எப்பாலும்
வைவைத்த கூர்வேல் வழுதி மனமகிழத்
தெய்வத் திருவள் ளுவர்

உசாத்துணை


✅Finalised Page