under review

தொடித்தலை விழுத்தண்டினார்

From Tamil Wiki
விழுத்தண்டினார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: விழுத்தண்டினார் (பெயர் பட்டியல்)
தொடித்தலை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தொடித்தலை (பெயர் பட்டியல்)

தொடித்தலை விழுத்தண்டினார் கடைச்சங்ககாலத் தமிழ்ப் புலவர். திருவள்ளுவமாலையில் ஒரு வெண்பா பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொடித்தலை விழுத்தண்டினர் கடைச்சங்கத்தார் நாற்பத்தி ஒன்பது புலவர்களில் ஒருவர். இவர் பாடிய வெண்பா ஒன்று திருவள்ளுவமாலையில் உள்ளது. இதே பெயரில் புறப்பாடல் பாடிய புலவர் ஒருவர் உள்ளார். (காண்க: தொடித்தலை விழுத்தண்டினார்)

பாடல் நடை

  • திருவள்ளுவமாலை வெண்பா

அறநான் கறிபொரு ளேழொன்று காமத்
திறமூன் றெனப்பகுதி செய்து-பெறலரிய
நாலு மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலு மொழிந்த பொருள்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Oct-2023, 07:58:44 IST