கிருஷ்ண (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கிருஷ்ண என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- இளங்கோ கிருஷ்ணன்: இளங்கோ கிருஷ்ணன் (பிறப்பு:மார்ச் 15, 1979) தமிழில் நவீனக்கவிதைகள் எழுதும் கவிஞர். உருவகத்தன்மையும் இசைத்தன்மையும் கொண்ட கவிதைகளை எழுதுபவர்
- எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை: எச். ஏ. கிருஷ்ண பிள்ளை (ஹென்றி ஆல்ஃபிரெட் கிருஷ்ண பிள்ளை, ஏப்ரல் 23, 1827 – பிப்ரவரி 3, 1900) ஒரு தமிழறிஞர்
- என்.எஸ். கிருஷ்ணன்: என். எஸ். கிருஷ்ணன் (நாகர்கோயில் சுடலைமுத்துப் பிள்ளை கிருஷ்ணன்) (நவம்பர் 29, 1908 - ஆகஸ்ட் 30, 1957) நாடக நடிகர், சொந்தமாக நாடகக் கம்பெனி நடத்தினார்
- எல். கிருஷ்ணன்: எல். கிருஷ்ணன் (அக்டோபர் 21, 1922), மலாய் திரைப்படத்துறையில் திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, என பல துறைகளில் ஆளுமை செலுத்தி பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த கலைஞர்
- ஓ.ரா.ந. கிருஷ்ணன்: ஓ. ரா. ந. கிருஷ்ணன் (ஓடத்துறை ராமாயாள் நல்லுச்சாமி கிருஷ்ணன்) (பிறப்பு: மே 16, 1934) பௌத்த தத்துவம், தியானம், சடங்குகள் சார்ந்த நூல்களை எழுதும் எழுத்தாளர், பதிப்பாளர், இதழாசிரியர், செயல்பாட்டாளர்
- கனம் கிருஷ்ண ஐயர்: கனம் கிருஷ்ண ஐயர் (கிருஷ்ண ஐயர்/கனம் கிருஷ்ணையர்) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் கர்நாடக இசைக் கலைஞர்
- கிருஷ்ணன் நம்பி: கிருஷ்ணன் நம்பி (ஜூலை 24, 1932 - ஜூன் 16, 1976), தமிழில் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர்
- கிருஷ்ணப் பருந்து: கிருஷ்ணப் பருந்து (1982) ஆ. மாதவன் எழுதிய இரண்டாவது நாவல். இயல்புவாத அழகியல் கொண்ட இந்த நாவல், அவர் எழுதியவற்றுள் முதன்மையானதாவும், தமிழ் நவீன நாவல்களில் சிறந்தவற்றில் ஒன்றாகவும் விமர்சகர்களால் கருதப்படுகிறது
- கிருஷ்ணமணி: கிருஷ்ணமணி (மணி; மணி சாஸ்திரி) (ஆகஸ்ட் 09, 1935 - ஆகஸ்ட் 07, 2010) எழுத்தாளர், நாடக நடிகர், கதாசிரியர், இயக்குநர்
- கே.வி. கிருஷ்ணன் சிவன்: கே. வி. கிருஷ்ணன் சிவன் (ஜனவரி 04, 1928 - ஜூலை 15, 2023) தமிழ் பேராசிரியர், மிருதங்க வித்வான்
- சுனில் கிருஷ்ணன்: சுனில்கிருஷ்ணன் (ஏப்ரல் 6, 1986) (சுனீல் கிருஷ்ன், சுநீல் கிருஷ்ணன்) தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் எழுதிவரும் எழுத்தாளர், ஆயுர்வேத மருத்துவர் மற்றும் நவகாந்தியவாதி
- தஞ்சாவூர் கிருஷ்ணன்: தஞ்சாவூர் கிருஷ்ணன் (1866 - 1931) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு நாதஸ்வரக் கலைஞர்
- பி. கிருஷ்ணன்: பி. கிருஷ்ணன் (பிறப்பு: 1932) சிங்கப்பூரின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். புதுமைதாசன் என்ற பெயரில் எழுதும் இவர் குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதியுள்ளார்
- பி.ஏ. கிருஷ்ணன்: பி. ஏ. கிருஷ்ணன் (பக்ஷிராஜன் அனந்த கிருஷ்ணன்) (பிறப்பு: 1946) ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதும் தமிழ் எழுத்தாளர்
- மா. கிருஷ்ணன்: மா. கிருஷ்ணன்(ஜூன் 30, 1912 - பிப்ரவரி 18, 1996) எழுத்தாளர், சுற்றுசூழல் ஆர்வலர்
- முனைவர் லோகநாதன் கிருஷ்ணன்: முனைவர் லோகநாதன் கிருஷ்ணன் (3 மே, 1942 - 17 ஏப்ரல், 2015) மலேசியாவில் கல்வித்துறை ஆய்வாளராகவும் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்
- ராஜம் கிருஷ்ணன்: ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 21, 2014) தமிழில் நாவல்கள் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர்
- வேம்பத்தூர் கிருஷ்ணன்: வேம்பத்தூர் கிருஷ்ணன் (செப்டெம்பர் 28, 1934 - டிசம்பர் 24,2018) எழுத்தாளர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், பதிப்பாசிரியர், திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குனர், ஔவைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.