under review

அம்மானை இலக்கிய நூல்கள்

From Tamil Wiki
Revision as of 15:23, 12 October 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அம்மானை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அம்மானை (பெயர் பட்டியல்)

தமிழில் நூற்றுக்கணக்கான அம்மானை நூல்கள் தோன்றியுள்ளன. சைவ, வைணவ, சமண, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய இலக்கியங்களில் பல அம்மானை இலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளன.

அம்மானை இலக்கிய வகை

தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று அம்மானை. மகளிர் விளையாட்டுகளை அடிப்படையாக வைத்துப் புனையப்பட்டது. பெண்பாற் பிள்ளைத் தமிழ் இலக்கியங்களில் 'அம்மானை' ஓர் உறுப்பாக இடம் பெற்றுள்ளது.

அம்மானை இலக்கிய நூல்கள் பட்டியல்

எண் ஆண்டு நூலின் பெயர் ஆசிரியர்/பதிப்பித்தவர்
1 1869 பவளக்கொடி மாலை கருணானந்த சுவாமிகள் & கேசவ முதலியார்
2 1870 கான்சாயயு சண்டை கந்தசாமி முதலியார் (ப)
3 1870 பஞ்சபாண்டவர் வனவாசம் புகழேந்திப் புலவர்
4 1871 ஸ்ரீராமர் சீதாதேவி வனவாசம் சுந்தசாமி முதலியார்
5 1871 ஹரிஹரபுத்திரரென்னும் ஐயனார் கதை காயற்பட்டணம் ஹைகுலப்பை
6 1872 அல்லியரசாணி மாலை புகழேந்திப் புலவர்
7 1874 அலசம்மானை அருணாசல செட்டியார் (ப)
8 1874 சீராளன் அம்மானை (சிறுத்தொண்ட பக்தன் கதை) புகழேந்திப் புலவர் (ஆ)
9 1874 தேசிங்குராசன் கதை புகழேந்திப் புலவர்
10 1874 பொன்னுருவி மசக்கை நாராயணசாமி நாட்டார்
11 1874 வைகுந்த அம்மானை (மாவிந்தம்) புகழேந்திப் புலவர் (ஆ)
12 1874 மூவர் அம்மானை கருணானந்த சுவாமிகள்
13 1875 ஆதியூர் அவதானி சரிதம் சேஷைய்யங்கார்
14 1875 பாப்பரத்தியார் அம்மானை சையதுமீரான் புலவர் (ஆ)
15 1876 அர்ச். கித்தேரியம்மாளம்மானை வீரமாமுனிவர் (ஆ)
16 1876 அர்ச். மேரி கருதம்மாள் அம்மானை அப்துல்லா சாயபு (ப)
17 1876 குருச்சேத்திர அம்மானை குஞ்நூமுசுலப்பை காறியாவிம் புலவர் (ஆ)
18 1878 அர்ச். அந்தோணியார் அம்மானை எஸ்.ஜகராவ் முதலி (ப)
19 1878 தருமர் அசுவமேத அம்மானை அருணாசல செட்டியார்
20 1878 நபியவதார அம்மானை சையது மீரான் புலவர் (ஆ)
21 1880 மலுக்கு முலுக்கு ராஜன் கதை வா. அப்துல்காதிர் சாயபு
22 1881 கோவிலன் கதை புகழேந்திப் புலவர்
23 1890 இரணியாசுரன் கதை சுந்தரராச கவிராயர் (ஆ)
24 1890 ஞானசவுந்தரி அம்மானை மயிலு பிள்ளை
25 1891 பொன்னர் சங்கர் அம்மானை வாரணவாசிக் கவிராயர் (ஆ)
26 1892 அந்தோணியார் அம்மானை தோமைப் பிள்ளை பட்டங்கட்டியார்
27 1892 சந்தந்தோனியார் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
28 1892 பஞ்சரதி அம்மானை சி. வி. வேல்முருக பாண்டியன்
29 1892 மகாபாரத அம்மானை சைமுகம்மது அண்ணாவியார்
30 1892 மதுரை வீரன் அம்மானை மீனாட்சி தாசர் (ஆ)
31 1893 ஸ்தாபக சஞ்சுவாம் அம்மானை புவிமன்ன சிங்கமுதலியார்
32 1893 அகினேச சுன்னி அம்மானை செயின்ட் அகினேசு (ஆ) மேரி
33 1893 தேவமாதா அம்மானை அ.சங்கரமூர்த்திக் கோனார்
34 1893 பாகவத அம்மானை மு. மாரியப்ப கவிராயர் (ஆ)
35 1893 விராடபர்வ அம்மானை சிறுமணவூர் முனிசாமி முதலியார்
36 1894 அபிமன்னன் சண்டை வீரபத்திர தாஸர்
37 1895 மாதர்நீதி அம்மானை இராமலிங்கம் பிள்ளை
38 1899 பொன்னரங்கர் அம்மானை எம். வடிவேலு முதலி
39 1900 சீரங்க அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
40 1900 காட்டுபாவா சாகிப் அம்மானை முத்துமுகம்மது புலவர் (ஆ)
41 1901 மகாராணி அம்மானை பெரியசுப்பா ரெட்டியார்
42 1904 நளச்சக்கரவர்த்தி அம்மானை எம். எஸ். முத்துபழனிய பிள்ளை
43 1904 மாணிக்கவாசகர் அம்மானை நாகலிங்கம் பிள்ளை
44 1905 புவனேந்திர அம்மானை (விக்ரமாதித்தன் கதை) சரவண பெருமான் கவிராயர் (ஆ)
45 1906 சுந்தரி கல்யாண அம்மானை சுப்பிரமணிய பிள்ளை
46 1906 தமிழறியும்பெருமாள் அம்மானை மதுரை என். ராமலிங்கம் பிள்ளை
47 1907 ஸ்ரீராமர் வனவாசம் அரங்கசாமி நாயகர்
48 1909 பசுக்கடை அம்மானை குழந்தைவேலு பிள்ளை
49 1910 வழக்குரைத்த அம்மானை பி. கதிர்வேலு பிள்ளை
50 1911 ஏறல் மாநகரம் சேர்மன் அருணாசல சுவாமிகளின் சித்துவிளையாடல் அம்மானை இராமகிருஷ்ண முத்து நாடார்
51 1911 திருச்செல்வர் அம்மானை திருச்செல்வராயன்
52 1912 கந்தரம்மானை வி.இராமலிங்க செட்டி
53 1913 சித்து விளையாடல் அம்மானை கந்தசாமி நாடார்
54 1914 திருமரணத்திறவுகோல் என்னும் நன்மரண அம்மானை எஸ். ஆர். நாதன் (ஆ)
55 1915 ஐரோப்பிய யுத்த அம்மானை எஸ். ஆர். சூசைய பிள்ளை (ஆ)
56 1915 நன்மரண அம்மானை மரியம் பிள்ளை (ஆ)
57 1916 சந்தீக்கிலாவின் தவசதித அம்மானை டி. ஏ. பெருமாள் பிள்ளை
58 1916 திருமுருக அம்மானை எஸ். எஸ். இராமசாமி பிள்ளை
59 1918 செழுகை அம்மானை பி. மாணிக்கசாமி முதலி
60 1922 பொன்னாக்ஷி அம்மன் அம்மானை கருப்பசாமி கவி (ஆ)
61 1923 வள்ளிநாயகி அம்மானை ஆறுமுக நாடார்
62 1924 கள்ளழகர் அம்மானை பி. என். சிதம்பர முதலி
63 1927 வீரப்பம்மாள் அம்மானை டி.சங்குப் புலவர் (ஆ)
64 1927 கற்பினணிகலம் : கன்னிகையும் வேதசாக்ஷியுமான அர்ச். செசீலியம்மாளின் அற்புதச்சரிதை அம்மானை மரிய சூசை ஆச்சாரியார்
65 1933 ஸ்ரீமத் மஹாபாரத அம்மானை மதுரை புக்ஷாப் ஸ்ரீ பழனியாண்டி அண்ட் கோ (பதி.)
66 1930 அர்ச் யாகப்பர் அம்மானை பேதுருப் புலவர்
67 1935 காந்தி அம்மானை எம்.எச். கான் முகமது
68 1940 கண்ணப்பர் அம்மானை வெ.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் (ப)
69 1951 இராமப்பய்யன் அம்மானை எஸ். வையாபுரிப் பிள்ளை
70 1952 ஆண்டவர் அம்மானை தாஸ் & பிரதர் (வெளியீட்டாளர்)
71 1953 அகிலத் திரட்டு அம்மானை அரிகோபால் (பதி)
72 1956 மாக புராண அம்மானை : மாகஸ்நான புராண அம்மானை தெ.பொ.மீனாட்சிசுந்தரம் (பதி)
73 1979 வீரையன் அம்மானை அ.மா. பரிமணம் (பதி)
74 1980 திரு அம்மானை கி.வா. ஜகந்நாதன் (பதி)
75 1980 ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை புலவர் வி. சொக்கலிங்கம் (பதி)
76 1981 ஸ்ரீ ராமர் அம்மானை டாக்டர் அ.மா. பரிமணம் (பதி)
77 1982 சீவக சிந்தாமணி அம்மானை வி.சொக்கலிங்கம் (பதி.ஆசி.)
78 1986 சித்திரபுத்திரர் அம்மானை கி. கோதண்ட பாணி (பதி)
79 1989 அருளப்பர் அம்மானை பா. சத்தியசீலன் (பதி)
80 1990 காஞ்சி மன்னன் அம்மானை எம்.சீராளன் (பதி)
81 1995 புதுவூர்ச் சக்கரவர்த்தி அம்மானை மருதமுத்து, மொ.
82 1995 அரிச்சந்திரன் அம்மானை ய. மணிகண்டன் (பதி)
83 1995 சுந்தரி அம்மானை ச. திலகம் (பதி)
84 1996 ஆமையர் அம்மானை ஆர். மருதமுத்து (பதி)
85 1999 வைகுண்ட அம்மானை ஜான் சாமுவேல் (பதி)
86 1999 மதுரை வீரன் அம்மானை ம. சீராளன் (பதி)
87 2004 வைகுந்த அம்மானை புலவர் வீ. சொக்கலிங்கம் (பதி)
88 2007 அதிரியர் அம்மானை பொ.சாம் டேனியல் (பதி)
89 2011 அருச்சுனன் பாசுபத அம்மானை ஏ. பாக்கியராஜன் (பதிப்பாளர்)
90 ஆண்டினை அறிய இயலவில்லை ரூத் அம்மானை ஏ.என். சட்டாம்பிள்ளை

உசாத்துணை

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Sep-2023, 09:46:33 IST