under review

முழுமையறிவு

From Tamil Wiki
Revision as of 03:44, 19 September 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
முழுமையறிவு
முழுமையறிவு ஒரு வகுப்பு

முழுமையறிவு (2022) தமிழ்நாட்டில் நிகழ்ந்து வரும் ஒரு தொடர்கல்விச் செயல்பாடு. தத்துவம், கலை, இலக்கியம், மருத்துவம் மற்றும் அகப்பயிற்சிகள் சார்ந்த வகுப்புகளை வாரந்தோறும் ஒருங்கிணைக்கும் அமைப்பு. ஜெயமோகன் இதை தன் குரு நித்ய சைதன்ய யதியின் வழிகாட்டுதலின்படி தொடங்கி ஒருங்கிணைக்கிறார். வெவ்வேறு துறைநிபுணர்கள் வகுப்புகளை நடத்தி வருகிறார்கள்.

தொடக்கம்

முழுமையறிவு வகுப்பு

எழுத்தாளர் ஜெயமோகன் இந்த அமைப்பை 2022ல் தொடங்கினார். குரு நித்ய சைதன்ய யதி கலை, இலக்கியம், அறிவியல், ஆன்மிகம் ஆகியவை இணைத்து கற்பிக்கப்படவேண்டும் என்னும் கொள்கை கொண்டிருந்தார். அவை ஒன்றையொன்று நிரப்புபவை என அவர் சொன்னார். அதன் பொருட்டு அவர் தொடங்கிய இயக்கம் மதிப்பீடுகளின் சேர்ந்திசை (Symphony of Values) என அழைக்கப்பட்டது. அந்த கண்ணோட்டத்தின் செயல்முறையையே முழுமையறிவு என ஜெயமோகன் வரையறை செய்தார்.

இடம், வகுப்புகள்

ஜெயமோகன் ஈரோடு, அந்தியூர் அருகே நிறுவிய நித்யவனம் என்னும் மலைத்தங்குமிடத்தில் இந்த வகுப்புகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வார இறுதியிலும் வகுப்புகள் நிகழ்கின்றன. இவை ஜெயமோகனின் வலைத்தளம் (https://www.jeyamohan.in/) மற்றும் முழுமையறிவு இணையப்பக்கம் ( https://unifiedwisdom.guru/ ) ஆகியவற்றில் முறையாக அறிவிக்கப்படுகின்றன. முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்படுகிறது. அறுபது பேர் வரை ஒரு வகுப்பில் கலந்துகொள்ளலாம்.

துறைகள், ஆசிரியர்கள்

முழுமையறிவு வகுப்புகளில் வெவ்வேறு துறைகள் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Sep-2025, 08:17:47 IST