முத்து (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
முத்து என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சி.எம். முத்து: சி. எம். முத்து (பிறப்பு: பிப்ரவரி 10, 1950 ) சிறுகதை மற்றும் நாவலாசிரியர். தஞ்சை நிலப்பகுதியையும் அதை சார்ந்த விவசாயக் குடும்பங்களின் கிராமிய வாழ்வம்சங்களையும் தொடர்ந்து நாற்பது வருடங்களுக்கும் மேலாக இலக்கியமாக்கி வரும் எழுத்தாளர்
- மயிலை சிவமுத்து: மயிலை சிவ முத்து (1892 - 1968) (மயிலாப்பூர் சிவானந்த முத்துக்குமாரசாமி) தமிழறிஞர், கல்வியாளர்
- மு. முத்து சீனிவாசன்: மு. முத்து சீனிவாசன் (சொல்லருவி முத்து சீனிவாசன்) (பிறப்பு: ஜனவரி 6, 1944) எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர்
- முத்து நெடுமாறன்: முத்து நெடுமாறன் (ஜூன் 18, 1961) மலேசியாவைச் சேர்ந்த கணினியியலாளர். இவர் இயற்பெயர் முத்தெழிலன் முரசு நெடுமாறன்
- முத்துத்தாண்டவர்: முத்துத்தாண்டவர் (1525-1600) கர்நாடக இசையில் பல தமிழ் கீர்த்தனைகளை இயற்றிப் பாடிய இசை முன்னோடி
- முத்துநாச்சி சண்டை (கதைப்பாடல்): முத்துநாச்சி சண்டை (18-ம் நூற்றாண்டு) ஒரு கதைப்பாடல் சுவடி நூல். கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோரின் சகோதரியாகிய முத்துநாச்சி, ஆங்கிலேயரை எதிர்த்து தலைமையேற்று போர் நிகழ்த்திய செய்தியைக் கூறுகிறது
- முத்துமீனாட்சி: அ. மாதவையா எழுதிய நாவல். பெண்விடுதலை, விதவை மறுமணம் குறித்து பேசுகிறது. சாவித்ரி சரித்திரம் என்றபேரில் 1892-ல் விவேகசிந்தாமணி இதழில் தொடராக வெளிவந்து நிறுத்தப்பட்டது
- முத்துராசர்: முத்துராசர் (பொ. யு. பதினேழாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
- முத்துவீரியம்: முத்துவீரியம் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) ஓர் தமிழ் இலக்கண நூல். தமிழ் மரபைத் தழுவி எழுந்த இந்நூல் ஐந்திலக்கணங்களையும் விரிவாகக் கூறுகிறது
- முத்துவேலழகன்: முத்துவேலழகன் (டிசம்பர் 06, 1939 - மே 13, 2021) எழுத்தாளர், மேடை நாடக இயக்குநர், மேடை நாடக நடிகர், திரைப்பட இணை இயக்குநர்
- ராணி முத்து: ராணி முத்து (1969) தமிழில் வெளிவந்த மாத இதழ். மாதம் ஒரு நாவலை வெளியிட்டது. மாதநாவல் என பின்னர் அழைக்கப்பட்ட வெளியீட்டுமுறையை தொடங்கிவைத்தது
- ராணி முத்து நாவல்கள் பட்டியல் (1969-1989): ராணி முத்து, 1969 முதல் தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு மாத இதழ். மாதம் ஒரு நாவலைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.