under review

முத்துராசர்

From Tamil Wiki

முத்துராசர் (பொ.யு. பதினேழாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

முத்துராசர் உறையூர்ச் செந்தியப்பரின் மகன். யாழ்ப்பாணத்தில் தங்கி வாழ்ந்தார். முத்துராச கவிராசரின் காலத்தை உறுதியாகக் கூறும் சான்று எதுவுமில்லை. யாழ்ப்பாண வைபவ மாலை ஆசிரியர் மயில்வாகனப் புலவர் கைலாயமாலையை முதல் நூலாகக் கொண்டார் என வைபவமாலையின் சிறப்புப் பாயிரம் கூறுவதால் இது பொ.யு. 1736-க்கு முன்னர் எழுதப்பட்டது என அறிஞர்கள் கருதுகிறனர். செ. இராசநாயகம் கைலாயமாலை, ஆராய்ச்சி முன்னுரையில் "1604 -க்கும் 1619- க்கும் இடைப்பட்ட காலத்தில் (நல்லூர்க் கைலாசநாதர்) கோவிலுங் கட்டி நூலம் எழுதப்பட்டதெனக் கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிடுகிரார். ஆனால் தமிழக ஆய்வாளர் சேஷாத்ரி அவர் பொ.யு. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கருதுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

முத்துராசர் யாழ்ப்பாணக் குடியேற்ற வரலாற்றினைக் கூறுகின்ற 'கைலாய மாலை' நூலை எழுதினார். இந்நூல் கலிவெண்பாக்களால் இயற்றப்பட்டது. 1906-ல் ஆறுமுக நாவலரின் மருகர் த.கைலாச பிள்ளையால் பதிப்புக் குறிப்புகள் ஏதுமின்றி அச்சேற்றப்பட்டது. சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் யாத்த கைலாசப் பிள்ளையார் ஊஞ்சலும் இதனுடன் இணைத்து வெளியிடப்பட்டது.

(பார்க்க கைலாய மாலை)

நூல் பட்டியல்

உசாத்துணை


✅Finalised Page