under review

கோவை இலக்கிய நூல்கள் பட்டியல்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(; Added info on Finalised date)
 
Line 464: Line 464:


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|28-Oct-2024, 10:11:38 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 01:04, 29 October 2024

கோவை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. தலைவன் தலைவியின் காதல் வாழ்வை கதை போல் படிப்படியாகக் காட்டி ஒரே வகையான செய்யுள்களால் தொடர்ந்து பாடி அமைக்கும் நூல் அகப்பொருட்கோவை. அகப்பொருள் இலக்கணத்திற்குரிய துறைகளை வரிசைப்படி கோர்த்துப் பாடுவதால் கோவை என்று பெயர் பெற்றது.

கோவை - விளக்கம்

தலைவன் ஒருவனும் தலைவி ஒருத்தியும் சூழ்நிலையாலும், விதிப்பயனாலும் சந்தித்து அதனால் உண்டாகும் காதல் வயப்பட்டுத் திருமணம் செய்து கொள்ளும் நிலைக்குச் செல்கின்ற பற்பல நிகழ்வுகளையெல்லாம் விளக்கிப் பாடுவதே கோவை.

கோவை இலக்கிய நூல்கள்

பொ.யு. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய பாண்டிக் கோவையே தமிழின் முதல் கோவை நூல். தொடர்ந்து 20 ஆம் நூற்றாண்டு வரை நூற்றுக்கும் மேற்பட்ட கோவை இலக்கிய நூல்கள் இயற்றப்பட்டன.

கோவை இலக்கிய நூல்கள் பட்டியல்

கோவை நூல்களில் சில:

ஆண்டு நூல் ஆசிரியர்
பொ.யு. 7-ம் நூற்றாண்டு பாண்டிக் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
பொ.யு. 8-ம் நூற்றாண்டு திருக்கோவையார் மாணிக்கவாசகர்
பொ.யு. 12-ம் நூற்றாண்டு அசதிக்கோவை ஔவையார்
புதுவைக் காங்கேயன் நாலாயிரக்கோவை ஒட்டக்கூத்தர்
அம்பிகாபதிக்கோவை அம்பிகாபதி
பொ.யு. 13-ம் நூற்றாண்டு குலோத்துங்கசோழன் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
தஞ்சைவாணன்கோவை பொய்யாமொழிப் புலவர்
கருமாணிக்கன் கப்பற்கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
பொ.யு. 14-ம் நூற்றாண்டு மதுரைக்கோவை சங்கரநாராயணர்
பொ.யு. 15-ம் நூற்றாண்டு அந்தியூர்க் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
பழனிக் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
பொ.யு. 16-ம் நூற்றாண்டு தையூர் உத்தண்டன் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
அண்ணாமலைக் கோவை கமலை ஞானப்பிரகாசர்
திருப்பதிக் கோவை திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
திருவாரூர் கோவை எல்லப்ப பூபதி
நெல்லை வருக்கக்கோவை வீரை அம்பிகாபதி
பொ.யு. 17-ம் நூற்றாண்டு சந்திரவாணன் கோவை அந்தகக்கவி வீரராகவர்
திருச்செந்தூர்க் கோவை சர்க்கரைப் புலவர்
திருவெங்கைக்கோவை (மந்திரிக்கோவை) சிவப்பிரகாசர்
சோழீசவரர் மல்லைக்கோவை பிள்ளைப்பெருமாள் சிறைமீட்டான் கவிராயர்
பாம்பலங்காரர் வருக்கக்கோவை படிக்காசுப் புலவர்
இரகுநாத சேதுபதி ஒருதுறைக்கோவை அமிர்த கவிராயர்
பொ.யு. 18-ம் நூற்றாண்டு குற்றாலக்கோவை திரிகூடராசப்பக் கவிராயர்
திருச்சிறம்பல தேசிகர் அகப்பொருள்துறைக் கோவை சீனிப்புலவர்
கரவை வேலன் கோவை சின்னதம்பிப் புலவர்
கன்னிவாடி ஜமீன்தார் கோவை சங்கரமூர்த்திக் கவிராயர்
சேற்றூர்க் கோவை சங்கரமூர்த்திக் கவிராயர்
விஞ்சைக் கோவை பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
கலைசைக் கோவை தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர்
திருவாவடுதுறைக் கோவை தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர்
மாறன் கோவை வேங்கடத்துறைவான் கவிராயர்
சிராமலைக் கோவை வேங்கடத்துறைவான் கவிராயர்
திருப்போரூர்க் கோவை வேங்கடத்துறைவான் கவிராயர்
சங்கரமூர்த்திக் கோவை வேங்கடத்துறைவான் கவிராயர்
பழமலைக் கோவை துறைமங்கலம் சாமிநாத தேசிகர்
சீர்காழிக் கோவை காழி அருணாசலக் கவிராயர்
திருக்கழுக்குன்றக் கோவை சோமசுந்தரம் பிள்ளை
திருமயிலைக் கோவை அம்பலவாணக் கவிராயர்
ஆனந்தரங்கன் கோவை தியாகராய தேசிகர்
மயூரகிரிக் கோவை சாந்துப் புலவர்
திருவாரூர்த் தியாகேசர் ஒருதுறைக்கோவை கீழ்வேவூர்க்குருசாமி தேசிகர்
பொ.யு. 19-ம் நூற்றாண்டு குளத்தூர்க் கோவை மீனாட்சிசுந்தரம் பிள்ளை
சீர்காழிக் கோவை மீனாட்சிசுந்தரம் பிள்ளை
வியாசைக் கோவை மீனாட்சிசுந்தரம் பிள்ளை மற்றும் தியாகராசச் செட்டியார்
விநாயகர் அகப்பொருள் கோவை கல்போது பிச்சுவையர்
கோடீச்சுரக் கோவை சிவக்கொழுந்து தேசிகர்
கச்சிரங்கன் கோவை கந்தசாமிக் கவிராயர்
மருங்காபுரிக்கோவை வெறிமங்கைக் கவிராயர்
அருளம்பலக்கோவை குமாரசாமி முதலியார்
தண்டவராயப்பிள்ளைக் கோவை சர்க்கரைப் புலவர்
பேரூர்க் கோவை முத்துநயினார்
திருச்செந்திற் கோவை தண்டபாணி சுவாமி
உருத்திரகோடிக் கோவை திருஞானசம்பந்த முதலியார்
சொக்கலிங்க நாயகர் வருக்கக்கோவை மங்கைபாகக் கவிராயர்
ஒருதுறைக்கோவை கல்போது பிச்சுவையர்
செகவீரராம் வெங்கடேசுர எட்டப்பன் மீது ஒருதுறைக்கோவை மீனாட்சி சுந்தரக்கவிராயர் மற்றும் வாலப்ப மணியக்காரர்
பொ.யு. 20-ம் நூற்றாண்டு ஐந்திணைக் கோவை கருப்பையாப் பாவலர்
பரங்கிரிக்கோவை மு.ரா.அருணாசலக் கவிராயர்
இராசராசேச்சுரக் கோவை மு.ரா.அருணாசலக் கவிராயர்
அரதைக் கோவை பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்
நீலகண்டேச்சுரக் கோவை நாராயணசாமி ஐயர்
சேலம் கோவை சு.பொன்சுவாமி செட்டியார்
சேரலக்கோவை சு.பொன்சுவாமி செட்டியார்
நல்லூர்க் கந்தசாமிக்கோவை செவ்வந்திநாத தேசிகர்
திரிசிராமலைக்கோவை சுந்தரநாதன்
அழகப்பா கோவை சுந்தரநாதன்
கரந்தைக் கோவை பாலசுந்தரம்
சத்திபாதக் கோவை சிவத்தியானந்த மஹர்ஷி
திருப்பரங்குன்றக் கோவை நா.கனகராசஐயர்
திருப்பெருந்துறைக் கோவை நா.கனகராசஐயர்
அண்ணாத்துரைக் கோவை அ.கு. ஆதித்தர்
அண்ணா கோவை இரா. மணியன்
ஷம்சுத்தாசீன் கோவை செய்குத்தம்பி பாவலர்
நாகைக்கோவை செய்குத்தம்பி பாவலர்
விஜயன் அப்துல்ரகிமான் கோவை அப்துல்காதிர் புலவர்
திருமக்காக் கோவை செவத்த மரைக்காயர்
மதுரைச் சொக்கநாதன் வருக்கக்கோவை நல்லசிவன் பிள்ளை
வண்ணவைத்தீசர் ஒருதுறைக்கோவை நல்லசிவன் பிள்ளை
திருவள்ளுவர் ஒருதுறைக்கோவை வே.முத்துசாமி ஐயர்
இராஜராஜேஸ்வரர் சேதுபதி ஒருதுறைக்கோவை வே.முத்துசாமி ஐயர்
ஸ்ரீகுருவாயூரப்பன் இருதுறைக்கோவை இராமன்
மிதிலைப்பட்டி ஆண்டவராயன் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
வங்கர் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
காரிக்கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
வல்லாளன் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
விசயரகுநாதத்தேவர் தேவைக்கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
இராமேசுரக் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
காத்தான்பிள்ளை மூப்பனார் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
கழுகாசலக் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
நந்திக்கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
நெல்லைக்கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
பூவைக் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
பரங்கிரிக்கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
குமரசேனாசிரியர் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
தமிழ் முத்தரையர் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
திருவரங்கக் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
திருவாவினன்குடிக் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
இராசைக் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
காசிக் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
அண்ணாமலைக் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
ஆமாத்தூர்க் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
சசிவோத்தமன் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
சிரகிரிக் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
சுப்பிரமணியக் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
திருநாகேசுரக்கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
திருவம்பலக்கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
திருவொற்றியூர்க் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
சசிவர்ணர் ஒருதுறைக்கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
குணமங்கை அரியநயினான் வருக்கக் கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
திருக்கோலநாதர் வருக்கக்கோவை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை. ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை

உசாத்துணை

  • சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி - 4 கோவை இலக்கியங்கள், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் முதல் பதிப்பு: 2023


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Oct-2024, 10:11:38 IST