திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை: Difference between revisions
(Corrected error in line feed character) Tag: Manual revert |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை (ஏப்ரல் 26, 1906 - பிப்ரவரி 16, 1986) ஒரு நாதஸ்வரக் கலைஞர். கௌரவ டாக்டர் பட்டம் (தஞ்சைப் பல்கலைக்கழகம்) பெற்ற முதல் நாதஸ்வரக் கலைஞர். | திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை (ஏப்ரல் 26, 1906 - பிப்ரவரி 16, 1986) ஒரு நாதஸ்வரக் கலைஞர். கௌரவ டாக்டர் பட்டம் (தஞ்சைப் பல்கலைக்கழகம்) பெற்ற முதல் நாதஸ்வரக் கலைஞர். | ||
== இளமை, கல்வி == | == இளமை, கல்வி == | ||
தஞ்சாவூர் மாவட்டம் திருநாங்கூர் என்ற வைணவத் தலத்தில் பிரமநாத பிள்ளை | தஞ்சாவூர் மாவட்டம் திருநாங்கூர் என்ற வைணவத் தலத்தில் நாதஸ்வரக் கலைஞர் பிரமநாத பிள்ளை - சுந்தரத்தம்மாள் இணையருக்கு ஏப்ரல் 26, 1906 அன்று சுப்பிரமணிய பிள்ளை பிறந்தார். | ||
சுப்பிரமணிய பிள்ளை தனது சிறிய தந்தை சாமித்துரைப் பிள்ளையிடம் பதினோரு ஆண்டுகள் நாதஸ்வரம் பயின்றார். பின்னர் சிதம்பரம் வைத்தியநாத பிள்ளையிடம் ஒன்றரை வருடம் மேற்பயிற்சி பெற்றார். | சுப்பிரமணிய பிள்ளை தனது சிறிய தந்தை சாமித்துரைப் பிள்ளையிடம் பதினோரு ஆண்டுகள் நாதஸ்வரம் பயின்றார். பின்னர் சிதம்பரம் வைத்தியநாத பிள்ளையிடம் ஒன்றரை வருடம் மேற்பயிற்சி பெற்றார். | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
திருமருகல் நடேச பிள்ளையின் சகோதரி மகள்கள் ராஜாம்பாள், லக்ஷ்மிகாந்தம் இருவரையும் மணந்து கொண்டார். | சுப்பிரமணிய பிள்ளை திருமருகல் நடேச பிள்ளையின் சகோதரி மகள்கள் ராஜாம்பாள், லக்ஷ்மிகாந்தம் இருவரையும் மணந்து கொண்டார். | ||
== இசைப்பணி == | == இசைப்பணி == | ||
சுப்பிரமணிய பிள்ளை தவில் போன்ற தாள வாத்தியங்களோடு வாசிக்கப்படும் நாதஸ்வரத்தை முதல் முறையாக வாய்ப்பாட்டுக் கச்சேரி போல வயலின், மிருதங்கத்துடன் வாசித்தவர். மகுடி இசையையும் நாதஸ்வரத்தில் வாசித்துப் புகழ் பெற்றார். | சுப்பிரமணிய பிள்ளை தவில் போன்ற தாள வாத்தியங்களோடு வாசிக்கப்படும் நாதஸ்வரத்தை முதல் முறையாக வாய்ப்பாட்டுக் கச்சேரி போல வயலின், மிருதங்கத்துடன் வாசித்தவர். மகுடி இசையையும் நாதஸ்வரத்தில் வாசித்துப் புகழ் பெற்றார். | ||
Line 34: | Line 34: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013 | * மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013 | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]] | [[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]] |
Revision as of 06:09, 23 September 2023
திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை (ஏப்ரல் 26, 1906 - பிப்ரவரி 16, 1986) ஒரு நாதஸ்வரக் கலைஞர். கௌரவ டாக்டர் பட்டம் (தஞ்சைப் பல்கலைக்கழகம்) பெற்ற முதல் நாதஸ்வரக் கலைஞர்.
இளமை, கல்வி
தஞ்சாவூர் மாவட்டம் திருநாங்கூர் என்ற வைணவத் தலத்தில் நாதஸ்வரக் கலைஞர் பிரமநாத பிள்ளை - சுந்தரத்தம்மாள் இணையருக்கு ஏப்ரல் 26, 1906 அன்று சுப்பிரமணிய பிள்ளை பிறந்தார்.
சுப்பிரமணிய பிள்ளை தனது சிறிய தந்தை சாமித்துரைப் பிள்ளையிடம் பதினோரு ஆண்டுகள் நாதஸ்வரம் பயின்றார். பின்னர் சிதம்பரம் வைத்தியநாத பிள்ளையிடம் ஒன்றரை வருடம் மேற்பயிற்சி பெற்றார்.
தனிவாழ்க்கை
சுப்பிரமணிய பிள்ளை திருமருகல் நடேச பிள்ளையின் சகோதரி மகள்கள் ராஜாம்பாள், லக்ஷ்மிகாந்தம் இருவரையும் மணந்து கொண்டார்.
இசைப்பணி
சுப்பிரமணிய பிள்ளை தவில் போன்ற தாள வாத்தியங்களோடு வாசிக்கப்படும் நாதஸ்வரத்தை முதல் முறையாக வாய்ப்பாட்டுக் கச்சேரி போல வயலின், மிருதங்கத்துடன் வாசித்தவர். மகுடி இசையையும் நாதஸ்வரத்தில் வாசித்துப் புகழ் பெற்றார்.
சுப்பிரமணிய பிள்ளையின் ராக ஆலாபனையும் தொடர் சுருள் பிருகாக்களும் புகழ் பெற்றவை. ஒரு காலகட்டத்தில் வீட்டுக்கே செல்ல முடியாத வண்ணம் தொடர்ச்சியாக பல ஊர்களில் கச்சேரிகள் செய்து கொண்டிருந்தார். தருமபுரம் ஆதீன இசைக் கலைஞராக பன்னிரண்டு ஆண்டுகள் இருந்தார். திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதீனங்களிலும் பல பரிசுகளைப் பெற்றவர். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை முதலிய நாடுகளில் புகழ்பெற்றிருந்தார்.
பழனி மற்றும் திருவையாற்றில் நாதஸ்வரக் கல்லூரிகளின் கௌரவ முதல்வராக இருந்திருக்கிறார். 'நண்பன்’, 'ராஜபக்தி’ ஆகிய திரைப்படங்களில் சுப்பிரமணிய பிள்ளையின் நாதஸ்வர இசை இடம்பெற்றிருக்கிறது.
இவரது மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர் கோட்டூர் ராஜரத்தினம் பிள்ளை.
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
- நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- காரைக்கால் பழனிவேல் பிள்ளை
- மலைக்கோட்டை பஞ்சாமிப் பிள்ளை
- திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை
- கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
- நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை
- திருநகரி நடேச பிள்ளை
- பாபநாசம் ராமஸ்வாமி பிள்ளை
- காரைக்கால் சோணாசி பிள்ளை
சுப்பிரமணிய பிள்ளை தனது பக்க வாத்தியக்காரர்களுக்கு உரிய பங்குத் தொகையை சரியாகக் கொடுக்கவில்லை எனப்படுகிறது.
விருதுகள்
- கலாசிகாமணி விருது - வழங்கியது: தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் - 1965
- தில்லி சங்கீத நாடக அகாடெமியின் ஃபெல்லோஷிப் - 1978
- தஞ்சைப் பல்கலைக்கழக டாக்டர் பட்டம் - 1985
மறைவு
திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை பிப்ரவரி 16, 1986 அன்று மறைந்தார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page