being created

திருவெழுகூற்றிருக்கை (திருமங்கையாழ்வார்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
திருவெழுக்கூற்றிருக்கை சித்திரக்கவியில் ஒருவகை. ரத பந்தம் எனும் அமைப்பின் கீழ் வருவது.  வீரசோழியம், மாறனலங்காரம்  முதலான நூல்களில் இதன் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
திருவெழுக்கூற்றிருக்கை சித்திரக்கவியில் ஒருவகை. ரத பந்தம் எனும் அமைப்பின் கீழ் வருவது.  வீரசோழியம், மாறனலங்காரம்  முதலான நூல்களில் இதன் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
== ஆசிரியர் ==
திருவெழுக்கூற்றிருக்கையை இயற்றியவர் [[திருமங்கையாழ்வார்]]. நீலன், பரகாலன், கலியன் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டவர். அடியார் சேவைக்காக வழிப்பறி செய்தபோது பெருமாளால் எட்டெழுத்து மந்திரம் உபதேசிக்கப்பட்டு ஆட்கொள்ளப்பட்டார் என்று குருபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. திருமங்கையாழ்வார் இயற்றிய மற்ற பிரபந்தங்கள் [[பெரிய திருமொழி]], [[திருநெடுந்தாண்டகம்]], [[திருக்குறுந்தாண்டகம்]], [[பெரிய திருமடல்]], [[சிறிய திருமடல்]] ஆகியவை.


== இலக்கணம் ==
== இலக்கணம் ==

Revision as of 01:17, 23 January 2023

திருவெழுக்கூற்றிருக்கை சித்திரக்கவியில் ஒருவகை. ரத பந்தம் எனும் அமைப்பின் கீழ் வருவது. வீரசோழியம், மாறனலங்காரம் முதலான நூல்களில் இதன் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்

திருவெழுக்கூற்றிருக்கையை இயற்றியவர் திருமங்கையாழ்வார். நீலன், பரகாலன், கலியன் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டவர். அடியார் சேவைக்காக வழிப்பறி செய்தபோது பெருமாளால் எட்டெழுத்து மந்திரம் உபதேசிக்கப்பட்டு ஆட்கொள்ளப்பட்டார் என்று குருபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. திருமங்கையாழ்வார் இயற்றிய மற்ற பிரபந்தங்கள் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், பெரிய திருமடல், சிறிய திருமடல் ஆகியவை.

இலக்கணம்

திரு எழுக்கூற்றிருக்கை சித்திரகவி வகைகளுள் இரத பந்தம் அமைப்பில் வருவது. இது. எண் வரிசை( பொருளால்) ஒரு தேர் போல தோன்றும் அமைப்பு கொண்ட செய்யுள்.

எழுகூற்றிருக்கைச் செய்யுள்களைத் தேர் அமைப்பில் பொருத்திப் பார்க்கையில், அவற்றில் உள்ள சொற்கள் தேர்த்தட்டின் மேலும் கீழுமுள்ள பகுதிகளை முக்கோண வடிவில் நிரப்புவனவாக இருப்பதைக் காணலாம். 1 முதல் 7 வரை படிப்படியாகக் கீழிருந்து மேல்,பின்பு மேலிருந்து கீழ் என அடுக்கடுக்காக ஒரு தேர்த் தட்டுபோல் மேலே செல்வதும் கீழே செல்வதுமாக அமைந்திருக்கும் பாடல்.வ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி , மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321, என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது. அதன் பின் ஒரு இடைத் தட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும் வகைக்கு திருவெழுக்கூற்றிருக்கை எனப் பெயர்.

பாடலின் வரிகளில் 1,2,3,4,5,6,7 எண்களைக் குறிக்கும் சொற்களை மேலே குறிப்பிட்டுள்ள வரிசைப்படி எழுதி மொத்தத்தில் அது ஒரு கருத்தைக் குறிக்கும் என்றால் அது தான் எழு கூற்றிருக்கை என்பதாகும்.












🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.