under review

ஞாநி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected year suffix text;)
Line 9: Line 9:
ஞாநி செப்டம்பர் 7, 1983-ல் பத்திரிக்கையாளர் பத்மாவை பரீக்ஷாவின்'தேடுங்கள்’நாடகம் ம்யூசியம் தியேட்டரில் தொடங்குவதற்கு முன் மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டார். பத்தாண்டுகளுக்குப் பின் கணவன் மனைவி உறவில் விலகி நண்பர்களாக நீடித்தனர். இவருக்கு மனுஷ் நந்தன் என்ற மகன் உள்ளார்.திரைஒளிப்பதிவாளாராக பணியாற்றுகிறார்.  

இதழியல் படிப்பை முடித்து விட்டு 1975-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் நிருபராகப் பணியாற்றினார். தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக 1981 ல்  வேலைநீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வென்றார். ஒருநாள் மட்டும் மீண்டும் வேலைசெய்துவிட்டு ராஜினாமா செய்தர். அதன்பின் வெவ்வேறு இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார், சுதந்திரச் செய்தியாளராகவும், அரசியல் விமர்சகராகவும் பங்களிப்பாற்றினார்.
இதழியல் படிப்பை முடித்து விட்டு 1975-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் நிருபராகப் பணியாற்றினார். தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக 1981-ல்  வேலைநீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வென்றார். ஒருநாள் மட்டும் மீண்டும் வேலைசெய்துவிட்டு ராஜினாமா செய்தர். அதன்பின் வெவ்வேறு இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார், சுதந்திரச் செய்தியாளராகவும், அரசியல் விமர்சகராகவும் பங்களிப்பாற்றினார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
ஞாநி முதன்மையாக அரசியல் விமர்சகர், இதழாளர். இதழியல் சார்ந்த அரசியல் விமர்சனக் கட்டுரைகளையும் தொடர்ச்சியாக எழுதி வந்தார். குறைவாக கதைகளையும் எழுதினார். தமிழ்த்தேசிய அரசியலை விவாதிக்கும்பொருட்டு 1998ல் ஆனந்த விகடனில் எழுதிய தவிப்பு எனும் தொடர்கதை ஞாநி எழுதிய ஒரே நாவல்.  
ஞாநி முதன்மையாக அரசியல் விமர்சகர், இதழாளர். இதழியல் சார்ந்த அரசியல் விமர்சனக் கட்டுரைகளையும் தொடர்ச்சியாக எழுதி வந்தார். குறைவாக கதைகளையும் எழுதினார். தமிழ்த்தேசிய அரசியலை விவாதிக்கும்பொருட்டு 1998-ல் ஆனந்த விகடனில் எழுதிய தவிப்பு எனும் தொடர்கதை ஞாநி எழுதிய ஒரே நாவல்.  

== பதிப்பகம் ==
== பதிப்பகம் ==
Line 28: Line 28:

== நாடகம் ==
== நாடகம் ==
நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978 முதல் அவர் வாழ்ந்த காலம் வரை பரீக்ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வந்தார் . சென்னையில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடி. 40-க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார். நாடகத்தின் தேக்கநிலை பற்றி குமுதம் இதழ் நடத்திய விவாதத்தில் 1979ல் ஞாநி எழுதிய ‘ருத்ராட்சப்பூனைகளே’ என்னும் கண்டனக்கட்டுரை அவரைப் பற்றிய கவனத்தை உருவாக்கியது.  
நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978 முதல் அவர் வாழ்ந்த காலம் வரை பரீக்ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வந்தார் . சென்னையில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடி. 40-க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார். நாடகத்தின் தேக்கநிலை பற்றி குமுதம் இதழ் நடத்திய விவாதத்தில் 1979-ல் ஞாநி எழுதிய ‘ருத்ராட்சப்பூனைகளே’ என்னும் கண்டனக்கட்டுரை அவரைப் பற்றிய கவனத்தை உருவாக்கியது.  

ஞாநி விஜய் டென்டுல்கர், பாதல் சர்க்கார், பெர்டோல்ட் பிரெக்ட், ஹெரால்ட் பிண்ட்டர் ஆகியோரின் நாடகங்களைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்து மேடையேற்றினார். [[இந்திரா பார்த்தசாரதி]], [[ந. முத்துசாமி]], [[சுந்தர ராமசாமி]], [[அசோகமித்திரன்]], [[அம்பை]], [[ஜெயந்தன்]], [[பிரபஞ்சன்]], [[திலீப் குமார்]], [[சுஜாதா]],  [[சி. என். அண்ணாத்துரை]] ஆகியோரின் நாடகங்களை மேடையேற்றினார்.  

Line 49: Line 49:
== விவாதங்கள் ==
== விவாதங்கள் ==

* 1981ல் ஞாநி முரசொலி சார்பில் சின்னக்குத்தூசியுடன் சென்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை பேட்டி எடுத்தபோது அவர் திராவிட இயக்கத் தலைவர்கள், மற்றும் சோ பற்றி சொன்ன கடுமையான கருத்துக்களை அவர் பதிவிடவேண்டாம் என்று கோரியபின்னரும் வெளியிட்டார். அஅவை அவதூறான கருத்துக்கள் என்றும் அவற்றை வெளியிடுவதுபொதுநலனுக்கு அவசியமானது என்பதனால் அவ்வாறு வெளியிட்டதாகச் சொன்னார்.  
* 1981-ல் ஞாநி முரசொலி சார்பில் சின்னக்குத்தூசியுடன் சென்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை பேட்டி எடுத்தபோது அவர் திராவிட இயக்கத் தலைவர்கள், மற்றும் சோ பற்றி சொன்ன கடுமையான கருத்துக்களை அவர் பதிவிடவேண்டாம் என்று கோரியபின்னரும் வெளியிட்டார். அஅவை அவதூறான கருத்துக்கள் என்றும் அவற்றை வெளியிடுவதுபொதுநலனுக்கு அவசியமானது என்பதனால் அவ்வாறு வெளியிட்டதாகச் சொன்னார்.  
* திராவிட முன்னேற்றக் கழகத்துடன் அணுக்கமானவராகவும், முரசொலி இதழில் பணியாற்றியவராகவும் இருந்த ஞாநி 2007 அக்டோபர் ஆனந்த விகடன்  இதழில் அவர் எழுதிய ஓ பக்கங்கள் என்னும் பத்தியில் மு. கருணாநிதி முதுமையடைந்துவிட்டார் என்றும், அவர் பொறுப்புகளில் இருந்து விலகவேண்டும் என்று எழுதியபோது அவர் பிராமணச் சாதிநோக்கு கொண்டவர் என திராவிட முன்னேற்றக் கழகத்தவரால் கண்டிக்கப்பட்டார்.

Revision as of 20:33, 1 April 2025

எழுத்தாளர் ஞாநி
ஞாநி பத்மா திருமணம்

எழுத்தாளர் ஞாநி (ஞாநி சங்கரன்) (ஜனவரி 4, 1954 - ஜனவரி 15, 2018) எழுத்து, ஓவியம், நாடகம், இதழ் ஆசிரியர், பதிப்பாளர், அரசியல் விமர்சகர், சமூகப் போராளி என்று பன்முகங்கள் கொண்டவர். சமூக விமர்சன நோக்குள்ள வீதிநாடகங்களும், மேடைநாடகங்களும் நடத்தி வந்தவர். சிறுவர்களுக்கான இதழியலில் பல புதுமைகளைச் செய்தவர்.

பிறப்பு , கல்வி

ஞாநி சென்னையில் ஆங்கில பத்திரிக்கையாளராக பணியாற்றிய வேம்புசாமி (1907-1997)மற்றும் பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு ஜனவரி 4, 1954 அன்று செங்கற்பட்டில் பிறந்தார்.அவருக்கு மூன்று சகோதரர்கள்,இரண்டு சகோதரிகள்.

ஞாநியின் இயற்பெயர் வே. சங்கரன் .செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் பதினோராவது வரை படித்தார். பிறகு தாம்பரத்திலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் ஆங்கில இளநிலை பயின்றார். பின்னர் அதிலிருந்து விலகி 1974-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டப் படிப்பை முடித்தார்.

தனிவாழ்க்கை

ஞாநி செப்டம்பர் 7, 1983-ல் பத்திரிக்கையாளர் பத்மாவை பரீக்ஷாவின்'தேடுங்கள்’நாடகம் ம்யூசியம் தியேட்டரில் தொடங்குவதற்கு முன் மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டார். பத்தாண்டுகளுக்குப் பின் கணவன் மனைவி உறவில் விலகி நண்பர்களாக நீடித்தனர். இவருக்கு மனுஷ் நந்தன் என்ற மகன் உள்ளார்.திரைஒளிப்பதிவாளாராக பணியாற்றுகிறார்.

இதழியல் படிப்பை முடித்து விட்டு 1975-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் நிருபராகப் பணியாற்றினார். தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக 1981-ல் வேலைநீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வென்றார். ஒருநாள் மட்டும் மீண்டும் வேலைசெய்துவிட்டு ராஜினாமா செய்தர். அதன்பின் வெவ்வேறு இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார், சுதந்திரச் செய்தியாளராகவும், அரசியல் விமர்சகராகவும் பங்களிப்பாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

ஞாநி முதன்மையாக அரசியல் விமர்சகர், இதழாளர். இதழியல் சார்ந்த அரசியல் விமர்சனக் கட்டுரைகளையும் தொடர்ச்சியாக எழுதி வந்தார். குறைவாக கதைகளையும் எழுதினார். தமிழ்த்தேசிய அரசியலை விவாதிக்கும்பொருட்டு 1998-ல் ஆனந்த விகடனில் எழுதிய தவிப்பு எனும் தொடர்கதை ஞாநி எழுதிய ஒரே நாவல்.

பதிப்பகம்

ஞாநி தான் எழுதிய நூல்களை தீம்தரிகிட பதிப்பகம் வழியாக தானே வெளியிட்டார்.

அமைப்புப்பணிகள்

ஞாநி இலக்கிய விவாதங்களுக்காக கேணி என்ற அமைப்பை நண்பர் பாஸ்கர் சக்தி யுடன் இணைந்து நிறுவி தனது வீட்டில் கிணற்றடியிலேயே பல கூட்டங்களை நடத்தினார். கோலம் என்ற அமைப்பை நிறுவி அசோகமித்திரன் சிறுகதைப் போட்டியை 2018-ல் நடத்தினார்.

இதழியல்

ஞாநி கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே ’வம்பன்' என்ற கையெழுத்து இதழை நடத்தினார் மற்றும் பூச்செண்டு என்ற மாணவர் இதழில் கட்டுரைக்கு பரிசு பெற்ற ஊக்கம் வாயிலாக அவர் முழுநேர எழுத்தாளனாக உருவாகினார். 1980-ல் தினகரன் நடத்திய 'இந்தியன் சன் ’, 'அஸ்வினி’, ஆற்காடு வீராசாமி நடத்திய 'எதிரொலி தினசரி ’ போன்ற இதழ்களில் பணியாற்றினார். இதழியலில் செய்தி விமர்சன இதழ்கள் உருவாகாத காலகட்டத்திலேயே 1982-ல் தீம்தரிகிட என்ற இதழை நடத்தி முன்னேர் செலுத்தினார். பன்னாட்டு வணிக நிறுவனங்களிடம் விளம்பரம் பெற மாட்டேன் என்று பிடிவாதமாக அந்த பத்திரிக்கையை வெறும் சந்தாவை மட்டுமே நம்பி நடத்தினார். விற்பனையாளர்கள் ஒருவரும் சொல்லியபடி பணத்தை தராததால் தீம்தரிகிட இதழை நிறுத்தினார். ஜூனியர் போஸ்ட் இதழை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் தரமான இதழாக 1993-ல் மாற்றிக் காட்டினார். 1996-ல் தினமணி ஏட்டின் மேகஸின் எடிட்டர் பதவியில் பணியாற்றிய போது பொங்கல் மலர், தீபாவளி மலர், மகளிர் மலர், மாணவர் மலர், மருத்துவ மலர் போன்றவற்றை அறிமுகப்படுத்தினார்.

சுமார் 30 வருடங்கள் முன்பே தொலைக் காட்சிக்கான முதல் இதழ் 'டி.வி.உலகம்' , சென்னை நகரத்துக்கான முதல் இதழ் 'ஏழு நாட்கள்' ஆகியவை இவர் முயற்சிகள். தேங்கிக் கிடந்த சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999-ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்து உருவாக்கி வெற்றி பெறச் செய்தார். 2003-ல் தொடங்கி இரண்டாண்டு காலம் 'இந்தியா டுடே’ பத்திரிக்கையில் பத்தி எழுத்தாளராக அறியப்பட்டார் . 2016-ல் தமிழில் மாணவரகளுக்கான முதல் இதழாக தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து வந்தார். சிறுவர்கள், இளைஞர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கும் பத்து வாழ்க்கைத்திறன்களைப் பயிற்றுவிக்கும் பணியில் சுமார் பத்தாண்டுகளாக ஈடுபட்டார். 2005-ல்ஆனந்த விகடனில் அப்போதைய அரசியல் நிகழ்வுகளை விமர்சித்து'ஓ பக்கங்கள்’ என்ற புகழ்பெற்ற தொடரை வாரம்தோறும் எழுதினார். பின்னர் ஆனந்தவிகடன் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் விலகிக்கொண்டார்.

ஞாநியின் சிற்றிதழான தீம்தரிகிட தமிழில் விமர்சன இதழாக குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றிய ஒன்று. பாரதியின் கண்களும் மீசையும் மட்டும் கொண்ட கோட்டோவியம் அவர் அவ்விதழுக்காக உருவாக்கியது, பின்னர் அனைவராலும் பயன்படுத்தப்பட்டது.

ஞாநி பரீக்ஷா நாடகக்குழுவில்

நாடகம்

நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978 முதல் அவர் வாழ்ந்த காலம் வரை பரீக்ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வந்தார் . சென்னையில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடி. 40-க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார். நாடகத்தின் தேக்கநிலை பற்றி குமுதம் இதழ் நடத்திய விவாதத்தில் 1979-ல் ஞாநி எழுதிய ‘ருத்ராட்சப்பூனைகளே’ என்னும் கண்டனக்கட்டுரை அவரைப் பற்றிய கவனத்தை உருவாக்கியது.

ஞாநி விஜய் டென்டுல்கர், பாதல் சர்க்கார், பெர்டோல்ட் பிரெக்ட், ஹெரால்ட் பிண்ட்டர் ஆகியோரின் நாடகங்களைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்து மேடையேற்றினார். இந்திரா பார்த்தசாரதி, ந. முத்துசாமி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், அம்பை, ஜெயந்தன், பிரபஞ்சன், திலீப் குமார், சுஜாதா, சி. என். அண்ணாத்துரை ஆகியோரின் நாடகங்களை மேடையேற்றினார்.

ஞாநி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகளில் 400 மாணவர்களுக்கு வீதி நாடகப்பயிற்சி வழங்கினார். சென்னை நகரில் கிறித்துவக் கல்லூரிக்காக இரு முறை நாடகம் தயாரித்து கொடுத்துள்ளார்.

காட்சியூடகம்

பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா என்ற தலைப்பில் 2003-ல் உருவாக்கினார். ஞாநி தூர்தர்சன் நிறுவனத்திற்காக40-க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், ஐந்து கதைப் படத் தொடர்களையும் இயக்கியுள்ளார். மறைவதற்கு முன்பு ’ஓ பக்கங்கள்’ என்னும் யூடியூப் சானலை தொடங்கினார்.

அரசியல் களத்தில் ஞாநி

அரசியல்

ஞாநி இடதுசாரி அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பெரியாரியக் கருத்துக்கள்மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார். 1971-ல் செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் சோஷலிச அரசியல் ஆதரவுப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக எழுபதுக்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டார்.

ஞாநி 1987 முதல் நேரடி அரசியல் களப்பணிகளில் ஈடுபட்டார். ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினராக செயல்பட்டார். 2014-ல் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஜூன் 28,2014-ல் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகினார்.

விருதுகள்

2016-ல் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் சார்பில் அயோத்திதாசர் ஆதவன் விருது வழங்கப்பட்டது.

விவாதங்கள்

  • 1981-ல் ஞாநி முரசொலி சார்பில் சின்னக்குத்தூசியுடன் சென்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை பேட்டி எடுத்தபோது அவர் திராவிட இயக்கத் தலைவர்கள், மற்றும் சோ பற்றி சொன்ன கடுமையான கருத்துக்களை அவர் பதிவிடவேண்டாம் என்று கோரியபின்னரும் வெளியிட்டார். அஅவை அவதூறான கருத்துக்கள் என்றும் அவற்றை வெளியிடுவதுபொதுநலனுக்கு அவசியமானது என்பதனால் அவ்வாறு வெளியிட்டதாகச் சொன்னார்.
  • திராவிட முன்னேற்றக் கழகத்துடன் அணுக்கமானவராகவும், முரசொலி இதழில் பணியாற்றியவராகவும் இருந்த ஞாநி 2007 அக்டோபர் ஆனந்த விகடன் இதழில் அவர் எழுதிய ஓ பக்கங்கள் என்னும் பத்தியில் மு. கருணாநிதி முதுமையடைந்துவிட்டார் என்றும், அவர் பொறுப்புகளில் இருந்து விலகவேண்டும் என்று எழுதியபோது அவர் பிராமணச் சாதிநோக்கு கொண்டவர் என திராவிட முன்னேற்றக் கழகத்தவரால் கண்டிக்கப்பட்டார்.

இலக்கிய முக்கியத்துவம்

ஞாநி தமிழ் இலக்கிய, பண்பாட்டுச் சூழலில் மூன்று பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார்.

  • தமிழில் வீதிநாடக இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். அவருடைய பரீக்ஷா வீதிநாடக இயக்கத்தை தமிழில் தொடந்து முப்பதாண்டுகள் முன்னெடுத்தது.
  • கட்சிசாராத இடதுசாரி அரசியலை தொடர்ச்சியாக இதழ்களிலும் பின்னர் காட்சியூடகத்திலும் முன்வைத்த அரசியல் விமர்சகர் ஞாநி. தமிழகத்தின் நெறிசார் அரசியலின் முகமாக அறியப்பட்டார்.
  • ஓர் இதழாளராக ஞானியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பொதுவாசிப்புக்குரிய இதழியலிலும் சிற்றிதழ் சார்ந்த இதழியலிலும் ஒரே சமயம் செயல்பட்டவர். தீம்தரிகிட இதழ் தமிழில் குறிப்பிடத்தக்க விமர்சனக்கட்டுரைகளை வெளியிட்ட சிற்றிதழ்.

மறைவு

சிறுநீரக கோளாறால் தொடர் சிகிச்சை பெற்று வந்த ஞாநி ஜனவரி 15, 2018-ல் காலமானார்.

படைப்புகள்

கட்டுரைகள்
  • பழைய பேப்பர்
  • மறுபடியும்
  • கண்டதைச் சொல்லுகிறேன்
  • கேள்விகள்
  • மனிதன் பதில்கள்
  • நெருப்பு மலர்கள்
  • பேய் அரசு செய்தால்
  • அயோக்யர்களும்முட்டாள்களும்
  • கேள்விக் குறியாகும் அரசியல்
  • அறிந்தும் அறியாமலும்
  • ஓ பக்கங்கள் (ஆறு தொகுதிகள்)
  • என் வாழ்க்கை என் கையில் (இணையாசிரியர்: மா)
  • ஆப்பிள் தேசம் (தினமணி கதிர்-ல் வெளிவந்த பயணக் கட்டுரைத் தொடர்)
  • சங்கராச்சாரியார் யார்?
  • ஊழலே உன் வேர் எங்கே?
  • ஏன் இந்த உலைவெறி?
  • கேள்விகள்
  • கண்டதை சொல்லுகிறேன்
நாடகம்
  • பலூன்
  • வட்டம்
  • எண் மகன்
  • விசாரணை
  • சண்டைக்காரிகள்
நாவல்கள், சிறுகதை தொகுப்புகள்
  • தவிப்பு (1998)
சிறுகதைகள்
  • ஞாநி சிறுகதைகள்
  • மாலுவின் டைரி
திரைக்கதை
  • அய்யா (பெரியாரின் வாழ்க்கை)
குறும்படங்கள்
  • அய்யா
  • ஜேம்ஸ் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? (ஒரு ரீல் இயக்கத்தின் சார்பில் ஒரே ரீலில், ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது)
  • 48.2%
  • நிலா(2017)

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Dec-2022, 12:30:52 IST