under review

திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom and added References)
Line 57: Line 57:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references/>
<references/>
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]
{{ready for review}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]

Revision as of 18:12, 17 April 2022

திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளை (நவம்பர் 9, 1896 - ஏப்ரல் 19, 1973) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

மாயூரத்துக்கு அருகே பெரம்பூர் என்னும் கிராமத்தில் சுந்தரம் பிள்ளை (நாதஸ்வரம்) - அபயாம்பாள் இணையருக்கு மகனாக நவம்பர் 9, 1896 அன்று வீருஸ்வாமி பிள்ளை பிறந்தார்.

தந்தையிடம் முதலில் இசைப்பயிற்சியைத் துவக்கி பின்னர் திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளையிடம் நாதஸ்வர இசையில் மேற்பயிற்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

வீருஸ்வாமி பிள்ளை உடன் பிறந்தவர்கள் ஆண்டாள் அம்மாள் என்ற மூத்த சகோதரியும், நாயணா பிள்ளை (நாதஸ்வரம்), சிவக்கொழுந்து பிள்ளை (நாதஸ்வரம்), வேணுகோபால பிள்ளை(விவசாயம்) என்ற தம்பிகளும் இருந்தனர்.

முத்துப்பேட்டைக்கோவிலூர் சிங்காரம் பிள்ளையின் மகள் மீனாக்ஷியம்மாளை மணந்தார். இவர்களுக்கும் சுப்பிரமணியம், சிவகுமார் என இரண்டு மகன்கள்.

இசைப்பணி

வீருஸ்வாமி பிள்ளை திருவாவடுதுறை ஆதீன வித்வனாக நியமனம் ஆனதும் குடும்பம் திருவிடைமருதூரில் குடியேறியது. வீருஸ்வாமி பிள்ளையும் திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளையும் மிக நெருங்கிய நண்பர்கள். அவர்களது நட்பைக் காட்டும் ஒரு சம்பவம் - ஒரு சமயம் மடத்தில் பூஜை வேளையில் வீருஸ்வாமி பிள்ளைக்கு ஒத்து வாசிப்பவர் வரவில்லை. அந்நேரம் அங்கிருந்த ராஜரத்தினம் பிள்ளை தானே ஒத்து நாதஸ்வரத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். புகழ்பெற்ற கலைஞர் ஒத்து வாசிக்க ஆயத்தமானதைக் கண்ட பண்டார சந்நிதி, அது ஏதேனும் குறும்பா எனக் கேட்க, ”ஒத்துக்காரர் இல்லாமல் நாதஸ்வரம் வாசிக்கக் கூடாது, அதனால் பூஜை தாமதமாகக் கூடாது. இவனுக்கு நான் ஒத்து ஒலிப்பதில் தவறில்லை..” என்றார் ராஜரத்தினம்.

பாரி வகை நாதசுவரத்தைப் பயன்படுத்திய வீருசாமி பிள்ளை, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை எனப் பல நாடுகளிலும் கச்சேரிகள் செய்தவர்.

வீருஸ்வாமி பிள்ளை செட்டிநாட்டில் மிகவும் பிரபலமாக இருந்தவர். 1936ஆம் ஆண்டில் திருவாங்கூர் ஆஸ்தான வித்வான் பதவியும், 1954ஆம் ஆண்டில் திருப்பதி ஆஸ்தான வித்வான் பதவியும் பெற்றார். சுவாமிமலை, பழனி ஆகிய இடங்களில் நாதஸ்வர பயிற்சிப் பள்ளிகளில் முதல்வராகப் பணியாற்றினார். வானொலி நிலையங்களில் இசைக் கலைஞர்களைத் தேர்வு செய்யும் முதன்மைத் தேர்வாளராகவும் பணியாற்றினார்.

மாணவர்கள்

திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • கோட்டூர் ராஜரத்தினம்
  • அம்பலப்புழை சங்கரநாராயண பணிக்கர்
  • கோபாலகிருஷ்ண பணிக்கர் சகோதரர்கள்
  • ஹரிபாடு கோபாலகிருஷ்ணன் சகோதரர்கள்
  • திருவிடைமருதூர் முத்துப்பேட்டைக் கோவிலூர் ஷண்முகம்
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

விருதுகள்

  • இசைப்பேரறிஞர் விருது, 1959. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[1]
  • சங்கீத கலாநிதி விருது, 1961. வழங்கியது: தி மியூசிக் அகாதெமி, சென்னை[2].
  • சங்கீத நாடக அகாதமி விருது, 1966[3]

மறைவு

திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளை ஏப்ரல் 19, 1973அன்று மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013

அடிக்குறிப்புகள்


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.