under review

அழகியல் விமர்சனம்: Difference between revisions

From Tamil Wiki
(Stage updated)
m (Spell Check done)
Line 8: Line 8:

== அழகியல் விமர்சனப் பார்வை ==
== அழகியல் விமர்சனப் பார்வை ==
அழகியல் விமர்சனம் ஒரு கலைப்படைப்பின் அடிப்படை அலகு என்பது ஒரு படிமம் என அது கருதுகிறது. ஒரு படிமம் என்பது ஓர் அடையாளம், ஒரு குறியீடு. அது தன் சுவைஞனால் முழுமையாக்கப்படும்போது படிமம் ஆகிறது. கலை என்னும் சம்ஸ்கிருதச் சொல்லின் மூலப்பொருள் ‘அடையாளம்’  என்பதே.  ஒலிப்படிமம்( இசை) காட்சிப்படிமம் (ஓவியம், சிற்பம், நடனம்,நாடகம், திரைப்படம்) மொழியாலான கவித்துவப் படிமம் (இலக்கியம்)ஆகியவற்றால் கலை உருவாகிறது. அழகியல் விமர்சனம் அந்த படிமங்கள் உருவாகும் முறை, முன்வைக்கப்படும் முறை, அவை பொருள்கொண்டு விரியும் வகை ஆகியவற்றையே முதன்மையாகக் கருத்தில்கொள்கிறது.   
அழகியல் விமர்சனம் ஒரு கலைப்படைப்பின் அடிப்படை அலகு என்பது ஒரு படிமம் என அது கருதுகிறது. ஒரு படிமம் என்பது ஓர் அடையாளம், ஒரு குறியீடு. அது தன் சுவைஞனால் முழுமையாக்கப்படும்போது படிமம் ஆகிறது. கலை என்னும் சம்ஸ்கிருதச் சொல்லின் மூலப்பொருள் ‘அடையாளம்’  என்பதே.  ஒலிப்படிமம் (இசை) காட்சிப்படிமம் (ஓவியம், சிற்பம், நடனம்,நாடகம், திரைப்படம்) மொழியாலான கவித்துவப் படிமம் (இலக்கியம்) ஆகியவற்றால் கலை உருவாகிறது. அழகியல் விமர்சனம் அந்த படிமங்கள் உருவாகும் முறை, முன்வைக்கப்படும் முறை, அவை பொருள்கொண்டு விரியும் வகை ஆகியவற்றையே முதன்மையாகக் கருத்தில்கொள்கிறது.   

இவ்வாறு படிமங்களை பொருள்கொள்ளும்போது அழகியல்விமர்சகன் தன்னை சுவைஞனின் இடத்தில் வைத்துக்கொள்கிறான். அழகியல் விமர்சகன் என்பவன் ஒரு முன்னுதாரணமான சுவைஞன். (ரசிகன், வாசகன்). ஆகவே அழகியல் விமர்சனத்தில் விமர்சகனின் தனிப்பட்ட ரசனையும், கலைப்பார்வையும் எப்போதும் முக்கியமானவையாக உள்ளன. அழகியல் விமர்சனம் முற்றிலும் புறவயமானதாக ஆக முடியாது.  

Line 17: Line 17:

== எதிர்விமர்சனங்கள் ==
== எதிர்விமர்சனங்கள் ==
அழகியல் விமர்சனம் என்பது புறவயமானது அல்ல என்றும், அவ்விமர்சகனின் தனிப்பட்ட ரசனையை ஒட்டியே அதன் அளவுகோல்கள் அமைகின்றன என்றும் குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்கப் புதுத்திறனாய்வு மரபின் திறனாய்வாளர்களான கிளிந்த் புரூக்ஸ் ( Cleanth Brooks) ராபர்ட் பென் வாரன் (Robert Penn Warren) ஆகியோர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
அழகியல் விமர்சனம் என்பது புறவயமானது அல்ல என்றும், அவ்விமர்சகனின் தனிப்பட்ட ரசனையை ஒட்டியே அதன் அளவுகோல்கள் அமைகின்றன என்றும் குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்கப் புதுத்திறனாய்வு மரபின் திறனாய்வாளர்களான கிளிந்த் புரூக்ஸ் (Cleanth Brooks) ராபர்ட் பென் வாரன் (Robert Penn Warren) ஆகியோர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அழகியல் விமர்சனம் ஒரு படைப்பை அதன் ஆசிரியரிடமிருந்து பிரித்துப் பார்க்கும் தன்மை அற்றது. அப்புனைவில் வெளியாகும் ஆசிரியரின் நோக்கம் என்ன என்பதே அழகியல் விமர்சகனின் அளவை தீர்மானிக்கிறது. இது நோக்கம்சார் பிழைபுரிதல் ( Intentional Fallacy) என்னும் அடிப்படையான சிக்கலை உருவாக்குகிறது என்று  டபிள்யூ.கே.விம்சாட் (W.K. Wimsatt) மன்றோ சி பெயர்ட்ஸ்லி (Monroe C. Beardsley) ஆகியோர் குற்றம்சாட்டினர்.
அழகியல் விமர்சனம் ஒரு படைப்பை அதன் ஆசிரியரிடமிருந்து பிரித்துப் பார்க்கும் தன்மை அற்றது. அப்புனைவில் வெளியாகும் ஆசிரியரின் நோக்கம் என்ன என்பதே அழகியல் விமர்சகனின் அளவை தீர்மானிக்கிறது. இது நோக்கம்சார் பிழைபுரிதல் (Intentional Fallacy) என்னும் அடிப்படையான சிக்கலை உருவாக்குகிறது என்று  டபிள்யூ.கே.விம்சாட் (W.K. Wimsatt) மன்றோ சி பெயர்ட்ஸ்லி (Monroe C. Beardsley) ஆகியோர் குற்றம்சாட்டினர்.

== தமிழில் அழகியல் விமர்சனம் ==
== தமிழில் அழகியல் விமர்சனம் ==
Line 41: Line 41:
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Revision as of 21:44, 26 June 2023

அழகியல் விமர்சனம் (Aesthetic criticism) கலைகளில் அவற்றின் வெளிப்பாட்டுமுறையை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு மதிப்பிடும் விமர்சன முறை. இலக்கியத்தையும் ஒரு கலை எனவே இந்த விமர்சன முறை கருதுகிறது. கலையின் முதன்மைநோக்கம் அழகியல் வெளிப்பாடு என்றும், அவ்வெளிப்பாடு நிகழும் முறையைக் கொண்டே அதை புரிந்துகொள்ளவும் மதிப்பிடவும் வேண்டும் என்பதனால் இந்த வழிமுறை அழகியல் விமர்சனம் எனப்படுகிறது

அழகியல்

இயற்கையிலும் கலையிலும் உள்ள அழகை அதன் இயக்கம், நெறிகள், நுட்பங்கள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஆராய்வதும் வகுத்துக்கொள்வதும் அழகியல் எனப்படுகிறது ( பார்க்க அழகியல்)

அழகியல்வாதம்

அழகியல்வாதம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் உருவான ஓர் கலைத்தத்துவம். கலையின் முதன்மை நோக்கம் அழகை உருவாக்குவதே என்ற பார்வையை முன்வைத்தது இது. இம்மானுவேல் காண்ட் முன்வைத்த தத்துவப்பார்வையில் இருந்து உருவான கலைக்கொள்கை. அழகியல்வாதம் அழகியல் விமர்சனத்தின் அடிப்படைகளை உருவாக்கிய முன்னோடி கலைத்தத்துவ இயக்கம் ( பார்க்க அழகியல்வாதம் )

அழகியல் விமர்சனப் பார்வை

அழகியல் விமர்சனம் ஒரு கலைப்படைப்பின் அடிப்படை அலகு என்பது ஒரு படிமம் என அது கருதுகிறது. ஒரு படிமம் என்பது ஓர் அடையாளம், ஒரு குறியீடு. அது தன் சுவைஞனால் முழுமையாக்கப்படும்போது படிமம் ஆகிறது. கலை என்னும் சம்ஸ்கிருதச் சொல்லின் மூலப்பொருள் ‘அடையாளம்’ என்பதே. ஒலிப்படிமம் (இசை) காட்சிப்படிமம் (ஓவியம், சிற்பம், நடனம்,நாடகம், திரைப்படம்) மொழியாலான கவித்துவப் படிமம் (இலக்கியம்) ஆகியவற்றால் கலை உருவாகிறது. அழகியல் விமர்சனம் அந்த படிமங்கள் உருவாகும் முறை, முன்வைக்கப்படும் முறை, அவை பொருள்கொண்டு விரியும் வகை ஆகியவற்றையே முதன்மையாகக் கருத்தில்கொள்கிறது.

இவ்வாறு படிமங்களை பொருள்கொள்ளும்போது அழகியல்விமர்சகன் தன்னை சுவைஞனின் இடத்தில் வைத்துக்கொள்கிறான். அழகியல் விமர்சகன் என்பவன் ஒரு முன்னுதாரணமான சுவைஞன். (ரசிகன், வாசகன்). ஆகவே அழகியல் விமர்சனத்தில் விமர்சகனின் தனிப்பட்ட ரசனையும், கலைப்பார்வையும் எப்போதும் முக்கியமானவையாக உள்ளன. அழகியல் விமர்சனம் முற்றிலும் புறவயமானதாக ஆக முடியாது.

அழகியல் விமர்சனம் ஒரு கலைப்படைப்பின் கட்டமைப்பின் ஒத்திசைவு மற்றும் முரண்பாடு, அது தன்னை முன்வைக்கும் முறை, அதற்கும் அது தன்னை வெளிப்படுத்தும் சூழலுக்குமான உறவு, அதற்கும் அதன் இலக்கியமரபுக்குமான உறவு ஆகிய நான்கு அம்சங்களை மட்டும் புறவயமாக விவாதிக்கும். அதன்பொருட்டு உதாரணங்களை எடுத்துக்காட்டும்.

அழகியல் விமர்சனம் இலக்கியத்தின் மீதான அரசியல் பார்வை, சமூகவியல் பார்வை , வரலாற்றுப்பார்வை ஆகியவற்றை ஓர் இலக்கியப்படைப்பில் உள்ள படிமங்களைப் பொருள்கொள்வதற்காகப் பயன்படுத்துகிறது. அந்தப் பொருள்கொள்ளும் செயல்பாட்டில் கல்வித்துறை உருவாக்கும் கோட்பாடுகளையும் வகைப்பாடுகளையும் அவற்றின் கலைச்சொற்களையும் பயன்படுத்திக்கொள்கிறது. ஆனால் அந்த பார்வைகளையும் கோட்பாடுகளையும் வகைப்பாடுகளையும் கலைப்படைப்பின் மீதான வரையறைகளாக ஏற்றுக்கொள்வதில்லை. அவற்றின் அடிப்படையில் தன் பார்வையை உருவாக்கிக் கொள்வதுமில்லை.

எதிர்விமர்சனங்கள்

அழகியல் விமர்சனம் என்பது புறவயமானது அல்ல என்றும், அவ்விமர்சகனின் தனிப்பட்ட ரசனையை ஒட்டியே அதன் அளவுகோல்கள் அமைகின்றன என்றும் குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்கப் புதுத்திறனாய்வு மரபின் திறனாய்வாளர்களான கிளிந்த் புரூக்ஸ் (Cleanth Brooks) ராபர்ட் பென் வாரன் (Robert Penn Warren) ஆகியோர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அழகியல் விமர்சனம் ஒரு படைப்பை அதன் ஆசிரியரிடமிருந்து பிரித்துப் பார்க்கும் தன்மை அற்றது. அப்புனைவில் வெளியாகும் ஆசிரியரின் நோக்கம் என்ன என்பதே அழகியல் விமர்சகனின் அளவை தீர்மானிக்கிறது. இது நோக்கம்சார் பிழைபுரிதல் (Intentional Fallacy) என்னும் அடிப்படையான சிக்கலை உருவாக்குகிறது என்று டபிள்யூ.கே.விம்சாட் (W.K. Wimsatt) மன்றோ சி பெயர்ட்ஸ்லி (Monroe C. Beardsley) ஆகியோர் குற்றம்சாட்டினர்.

தமிழில் அழகியல் விமர்சனம்

உசாத்துணை

✅Finalised Page