under review

இலக்கியவீதி: Difference between revisions

From Tamil Wiki
(Missing parenthesis in template)
m (Spell Check done)
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 86: Line 86:
* பதினாறு கவனகர் கனக சுப்புரத்தினம், புரிசை கண்ணப்பத் தம்பிரான், செழியன், திருக்குறள் எல்லப்பன், புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்ட பலரது நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து இலக்கியவீதி அவர்களுக்குச் சிறப்புச் செய்தது.
* பதினாறு கவனகர் கனக சுப்புரத்தினம், புரிசை கண்ணப்பத் தம்பிரான், செழியன், திருக்குறள் எல்லப்பன், புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்ட பலரது நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து இலக்கியவீதி அவர்களுக்குச் சிறப்புச் செய்தது.
* பல்வேறு அறக்கட்டளைகளுடன் இணைந்து ஆண்டுதோறும் இலக்கியவீதி பல்வேறு பரிசுகளை வழங்கியது.
* பல்வேறு அறக்கட்டளைகளுடன் இணைந்து ஆண்டுதோறும் இலக்கியவீதி பல்வேறு பரிசுகளை வழங்கியது.
* விருது


== விருது ==
இலக்கியவீதி அமைப்பு, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் வழங்கிய தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது பெற்றது.
இலக்கியவீதி அமைப்பு, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் வழங்கிய தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது பெற்றது.


Line 95: Line 95:
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5037 இலக்கியவீதி இனியவன் நேர்காணல்: தென்றல் இதழ்]
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5037 இலக்கியவீதி இனியவன் நேர்காணல்: தென்றல் இதழ்]


{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 03:06, 3 October 2023

இலக்கியவீதி அமைப்புச் சின்னம்

இலக்கியவீதி (1977) ஓர் இலக்கிய அமைப்பு. 'வீடு தோறும் கலையின் விளக்கம்; வீதி தோறும் தமிழின் வெளிச்சம்’ என்பதை லட்சியமாகக் கொண்டு, 1977-ல், மதுராந்தகத்தில் எழுத்தாளர் இனியவனால் நிறுவப்பட்டது. இலக்கிய வீதி, புதிய பல எழுத்தாளர்களை, கலைஞர்களை கலை, இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியது. இலக்கிய விவாதங்கள் பலவற்றை முன்னெடுத்தது. இலக்கியவீதி இனியவன் அமைப்பின் தலைவராகச் செயல்பட்டார். துரை.லட்சுமிபதி செயலாளர்.

தோற்றம்

இலக்கியவீதி அமைப்பு, எழுத்தாளர் இனியவனால் தொடங்கப்பட்டது. இலக்கிய சர்ச்சைகள், விவாதங்கள், திறனாய்வுகள், கவியரங்குகள் போன்றவற்றை நடத்த விரும்பிய இனியவன், மதுராந்தகத்தில், ஜூலை 10, 1977-ல், இலக்கிய வீதி அமைப்பைத் தொடங்கினார். 'வீடு தோறும் கலையின் விளக்கம்; வீதி தோறும் தமிழின் வெளிச்சம்’ என்பது இலக்கியவீதியின் நோக்கமாக இருந்தது. முதல் கூட்டத்திற்கு நாரண. துரைக்கண்ணன் தலைமை வகித்தார். ஜே.எம். சாலியின் நூல் திறனாய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து 45 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய விவாதங்கள், திறனாய்வுகள், கவியரங்குகள், எழுத்தாளர் சந்திப்புகள், கருத்தரங்குகள், மாநாடுகள் போன்றவற்றை நடத்தி கலைஞர்களை, இலக்கியவாதிகளை இலக்கியவீதி ஊக்குவித்தது.

பணிகள்

இலக்கியவீதி புதிய பல எழுத்தாளர்களை, கலைஞர்களை கலை, இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியது. நூல்கள் பலவற்றைத் திறனாய்வு செய்தது. 'கவிக்குரல்' என்ற நிகழ்ச்சி மூலம் புதிய கவிஞர்களை அறிமுகம் செய்தது. சிறுகதைப் போட்டிகள் பலவற்றை நடத்தியது. போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை நூலாக வெளியிட்டது. கலந்துரையாடல், நேருக்கு நேர் எனப் பல இலக்கிய நிகழ்ச்சிகளை முன்னெடுத்தது. எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், திறனாய்வாளர்கள் என முந்நூற்றுக்கும் மேற்பட்டோரை இலக்கியவீதி அடையாளம் காட்டியது.

க்ருஷாங்கினி, பாவண்ணன், கே.ஜி. ஜவஹர், சுப்ரபாரதிமணியன், கோதா பார்த்தசாரதி, பூதலூர் முத்து, நந்தலாலா, ராசி. அழகப்பன், சுப்ரஜா, பட்டுகோட்டை ராஜா, சுபா (சுரேஷ்-பாலா) எனப் பல கவிஞர்கள், எழுத்தாளர்கள் இலக்கியவீதியின் கதை, கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டனர்.

இலக்கியவீதி கலைமகள், அமுதசுரபி, மஞ்சரி போன்ற இதழ்களுடன் இணைந்து சிறுகதைப் போட்டியை நடத்தியது. தமிழகம் மட்டுமில்லாமல் டெல்லி, அந்தமானின் முக்கியத் தீவுகள் தொடங்கி சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் இலக்கியவீதி தனது நிகழ்ச்சிகளை நடத்தியது. சிறந்த படைப்பாளர்களை அடையாளம் காட்டியது. இலக்கிய மாநாடுகள் பலவற்றை ஒருங்கிணைத்து நடத்தியது. 60-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்களைப் பாராட்டிச் சிறப்புச் செய்தது. பாரதியார், பாரதிதாசன், திரு.வி. கலியாணசுந்தர முதலியார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கா.சுப்பிரமணியப் பிள்ளை, ஜவஹர்லால் நேரு, பி.ஆர். அம்பேத்கர், காயிதேமில்லத், பேராசிரியர் சி இலக்குவனார் எனப் பலரது நூற்றாண்டு விழாக்களை நடத்தியது. ‘இலக்கியவீதி அன்னம் விருது’ என்பதை ஏற்படுத்தி தகுதி வாய்ந்த சான்றோர்களை, தமிழறிஞர்களை, கலைஞர்களைக் கௌரவித்தது.

இலக்கியவீதியின் சிறுகதை நூல்கள் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சென்னை புதுக்கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி எனப் பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாட நூலாக இடம் பெற்றன.

இலக்கியவீதிப் பங்களிப்பாளர்கள்

இலக்கியவீதி நிகழ்வுகளில் பலர் சிறப்பு விருந்தினர்களாக, தலைமை ஏற்பவர்களாக, திறனாய்வு செய்யப்படும் நூல்களை எழுதிய எழுத்தாளர்களாகக் கலந்துகொண்டனர். அவர்களில் சிலர்:

இலக்கிய வீதி எழுத்தாளர்கள்

இலக்கியவீதி பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்தது. பலரை ஊக்குவித்தது. அவர்களில் சிலர்:

இலக்கிய வீதிக் கவிஞர்கள்

இலக்கியவீதி பல கவிஞர்களை இலக்கிய உலகுக்கு அடையாளம் காட்டியது. அவர்களில் சிலர்:

  • தாராபாரதி
  • மலர்மகன்
  • பல்லவன்
  • சொல்கேளான்
  • சஞ்சீவி மோகன்
  • கவிமுகில்
  • இரண்டாம் நக்கீரன்
  • வேடந்தாங்கல் சுகுணன்
  • அனலேந்தி
  • தளவை. இளங்குமரன்
  • கி. வெங்கடேச ரவி
  • ஒழவெட்டி பாரதிப்ரியன்
  • ராதிகா
  • வித்யாசாகர்
  • மாசி ஆனந்த்

இலக்கிய வீதியின் பிற செயல்பாடுகள்

  • கோவில்பட்டியில் வாழ்ந்த கண்பார்வையற்ற கவனகர் (அவதானி) ராமையாப் பிள்ளையை, இலக்கியவீதியில் கவனக நிகழ்ச்சியை நடத்தச் செய்து அவர் மேல் அரசின் கவனம் திரும்பச் செய்தது. அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன், திருக்குறள் ராமையாப் பிள்ளையை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக்கினார்.
  • ‘கொல்லங்குடி கருப்பாயி’ யை அறிமுகப்படுத்தி, 'நாட்டுப்புறப் பாட்டுக் குயில்' என்ற பட்டம் அளித்துச் சிறப்புச் செய்தது.
  • கவிஞர், திரைப்பாடல் ஆசிரியர், பொம்மலாட்டக் கலைஞர் கலைமாமணி ந.மா. முத்துக்கூத்தனை ஆதரித்து அவர் மூலம் பாரதிதாசன் எழுதிய 'கவிஞனின் காதல்' நாடகத்தை அரங்கேற்றம் செய்தது.
  • தெருக்கூத்துக் கலைஞர்கள். பொம்மலாட்டக் கலைஞர்கள், வில்லுப்பாட்டுக் கலைஞர்கள், நாட்டுப்புற இசைக் கலைஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள் எனப் பலரது நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து அவர்களை ஊக்குவித்துப் பெருமைப்படுத்தியது.
  • பதினாறு கவனகர் கனக சுப்புரத்தினம், புரிசை கண்ணப்பத் தம்பிரான், செழியன், திருக்குறள் எல்லப்பன், புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்ட பலரது நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து இலக்கியவீதி அவர்களுக்குச் சிறப்புச் செய்தது.
  • பல்வேறு அறக்கட்டளைகளுடன் இணைந்து ஆண்டுதோறும் இலக்கியவீதி பல்வேறு பரிசுகளை வழங்கியது.

விருது

இலக்கியவீதி அமைப்பு, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் வழங்கிய தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது பெற்றது.

உசாத்துணை


✅Finalised Page