ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்: Difference between revisions

From Tamil Wiki
(Link Created)
(3 intermediate revisions by the same user not shown)
Line 1: Line 1:
[[File:Yesu Annaikku Etriya Deepangal.jpg|thumb|ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் ]]
[[File:Yesu Annaikku Etriya Deepangal.jpg|thumb|ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் ]]
ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் (1995) சு. தாமஸ் எழுதிய கிறிஸ்தவ இறைப் பாடல்களின் தொகுப்பு. மாலை, அந்தாதி, பிள்ளைத்தமிழ், தூது, பதிகம் என பல்வேறு சிற்றிலக்கியங்களின் தொகுப்பாக வெளிவந்தது.
ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் (1995) சூ. தாமஸ் எழுதிய கிறிஸ்தவ இறைப் பாடல்களின் தொகுப்பு. மாலை, அந்தாதி, பிள்ளைத்தமிழ், தூது, பதிகம் என பல்வேறு சிற்றிலக்கியங்களின் தொகுப்பாக வெளிவந்தது.

== வெளியீடு ==
== வெளியீடு ==
ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள், [[கிறிஸ்தவ பக்தி இதழ்கள்|கிறிஸ்தவ]]ச் சிற்றிலக்கிய நூல்களின் தொகுப்பு. இந்நூல், ஜனவரி 1, 1995 அன்று, தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நூலின் ஆசிரியர்: சு. தாமஸ். புலவர் நாக. சண்முகம் இந்நூலின் பதிப்பாசிரியர்.
ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள், [[கிறிஸ்தவ பக்தி இதழ்கள்|கிறிஸ்தவ]]ச் சிற்றிலக்கிய நூல்களின் தொகுப்பு. இந்நூல், ஜனவரி 1, 1995 அன்று, தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நூலின் ஆசிரியர்: [[சூ. தாமஸ்]]. புலவர் நாக. சண்முகம் இந்நூலின் பதிப்பாசிரியர்.
 
== ஆசிரியர் குறிப்பு ==
சூசை உடையார் தாமஸ் என்னும் சூ. தாமஸ், ஆகஸ்ட் 04, 1910 அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோட்டாரப்பட்டி என்னும் கோட்டூரில், சூசை உடையார் - சூசையம்மாள் என்னும் பாப்பு இணையருக்குப் பிறந்தார். திருக்காட்டுப்பள்ளி சிவசாமி அய்யர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். தொடர்ந்து இல்லத்திலிருந்தே தமிழ் படித்தார். 1932-ல், மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பிரவேசப் பண்டிதத் தேர்வில் வெற்றிபெற்றார். 1936-ல் திருவையாறு தமிழ்க் கல்லூரியில் பயின்று தமிழில் வித்துவான் பட்டம் பெற்றார். தஞ்சை தூய இருதய மகளிர் உயர்நிலைப்பள்ளியில், 22  ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
 
வேளாங்கண்ணித் திருத்தலத்தின் மீதும் அங்குக் கோயில் கொண்டுள்ள ஆரோக்கிய மாதா மீதும் மிகுந்த பக்தி கொண்டு பல சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார். அவற்றின் தொகுப்பே ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ நூல்.

== நூல் அமைப்பு ==
== நூல் அமைப்பு ==
Line 15: Line 20:
* நற்செய்தி நங்கையர்‌ மாலை  
* நற்செய்தி நங்கையர்‌ மாலை  
* நசராபுரி நாயகி மாலை  
* நசராபுரி நாயகி மாலை  
* நசரை [[நான்மணிமாலை|நான்மணி மாலை]]
* நசரை நான்மணி மாலை
* மூவர்‌ [[அம்மானை]]
* [[மூவர் அம்மானை|மூவர்‌ அம்மானை]]
* திருவெல்லை மாலை  
* திருவெல்லை மாலை  
* வேளைச்‌ சகாய மாலை  
* வேளைச்‌ சகாய மாலை  
* பேரின்பத்‌ தூதுப்‌ பாடல்கள்‌
* [[பேரின்பத் தூதுப் பாடல்கள்|பேரின்பத்‌ தூதுப்‌ பாடல்கள்‌]]
* [[பிள்ளை வெண்பா என்னும் தெய்வ சகாயன் திருச்சரிதை|தெய்வ சகாயன்‌ திருச்சரிதை]]
* [[பிள்ளை வெண்பா என்னும் தெய்வ சகாயன் திருச்சரிதை|தெய்வ சகாயன்‌ திருச்சரிதை]]
* தஞ்சை வியாகுல மாதா பதிகம்‌
* தஞ்சை வியாகுல மாதா பதிகம்‌
* மனுக்குல வெண்பா
* [[மனுக்குல வெண்பா]]
* நன்று நாற்பது  
* [[நன்று நாற்பது]]
* சரணாஞ்சலி  
* சரணாஞ்சலி  
* கத்தர்‌ புகழாரம்‌  
* கத்தர்‌ புகழாரம்‌  
Line 36: Line 41:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==

* ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள், கவிக்கடல் புலவர் சு. தாமஸ், எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டு வெளியீடு. பதிப்பு: 1995.
* [https://dn720001.ca.archive.org/0/items/tamil-christian-ebook-yesuvin-annaiku-eariya-deepangal/Yesuvin%20Annaiku%20Eariya%20Deepangal%20compressed.pdf  🖒 First review completed  Please do not write any content below this line. This section is only for editing templates & categories. ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள், கவிக்கடல் புலவர் சூ. தாமஸ், எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டு வெளியீடு. பதிப்பு: 1995 ஆர்கைவ் தளம்]
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 20:56, 23 May 2024

ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்

ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் (1995) சூ. தாமஸ் எழுதிய கிறிஸ்தவ இறைப் பாடல்களின் தொகுப்பு. மாலை, அந்தாதி, பிள்ளைத்தமிழ், தூது, பதிகம் என பல்வேறு சிற்றிலக்கியங்களின் தொகுப்பாக வெளிவந்தது.

வெளியீடு

ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள், கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களின் தொகுப்பு. இந்நூல், ஜனவரி 1, 1995 அன்று, தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நூலின் ஆசிரியர்: சூ. தாமஸ். புலவர் நாக. சண்முகம் இந்நூலின் பதிப்பாசிரியர்.

ஆசிரியர் குறிப்பு

சூசை உடையார் தாமஸ் என்னும் சூ. தாமஸ், ஆகஸ்ட் 04, 1910 அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோட்டாரப்பட்டி என்னும் கோட்டூரில், சூசை உடையார் - சூசையம்மாள் என்னும் பாப்பு இணையருக்குப் பிறந்தார். திருக்காட்டுப்பள்ளி சிவசாமி அய்யர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். தொடர்ந்து இல்லத்திலிருந்தே தமிழ் படித்தார். 1932-ல், மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பிரவேசப் பண்டிதத் தேர்வில் வெற்றிபெற்றார். 1936-ல் திருவையாறு தமிழ்க் கல்லூரியில் பயின்று தமிழில் வித்துவான் பட்டம் பெற்றார். தஞ்சை தூய இருதய மகளிர் உயர்நிலைப்பள்ளியில், 22  ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வேளாங்கண்ணித் திருத்தலத்தின் மீதும் அங்குக் கோயில் கொண்டுள்ள ஆரோக்கிய மாதா மீதும் மிகுந்த பக்தி கொண்டு பல சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார். அவற்றின் தொகுப்பே ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ நூல்.

நூல் அமைப்பு

ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் நூல், கீழ்க்காணும் சிற்றிலக்கிய நூல்களின் தொகுப்பாக அமைந்தது.

உள்ளடக்கம்

ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் நூல் மூலம் இயேசுவின் பெருமை மற்றும் சிறப்பையும், இயேசுவின் அன்னை மேரி மாதாவின் பெருமைகள், சிறப்புகள், ஆலயங்கள் எழுந்த விதம், அற்புதங்கள் போன்றவற்றையும் சூ. தாமஸ் புலப்படுத்தினார். பதிகம், மாலை, பிள்ளைத்தமிழ், சதகம், வெண்பா, அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகைகளில் இப்பாடல்கள் அமைந்தன.

மதிப்பீடு

இயேசு மற்றும் மரியன்னையின் புகழைப் பாடும் சில சிற்றிலக்கியங்களின் தொகுப்பாக ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் நூல் அமைந்தது. இந்நூல் பற்றி, “மரியன்னையின்‌ பண்புகளையும்‌, இயற்கை நிகழ்ச்சிகளையும்‌, கற்பனை நயத்‌தோடும்‌, உவமைச்‌ சிறப்புக்களோடும்‌ படைத்தார்” என பேராயர் பா. ஆரோக்கியசாமி குறிப்பிட்டார். ”தமிழ்மொழி உணர்வால்‌, நூற்பொருளால்‌ பாக்களின்‌ இசையால்‌, மொழிநடையால்‌ சிறந்து வீளங்கும்‌ இந்நூல்‌ தமிழிலக்கிய வரலாற்றில்‌ குறிப்பாக கிறித்துவ இலக்கிய வரலாற்றில்‌ மற்றுமொரு பிரபந்தத்‌ திரட்டாக - தனி ஒருவரின்‌ சிற்றிலக்கியத்‌ திரட்டாகச்‌ - சிறந்து விளங்குகிறது” எனப் பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியன் மதிப்பிட்டார்

உசாத்துணை