under review

புறநானூற்றுப் பெண்பாற் புலவர்கள்

From Tamil Wiki
புறநானூறு

எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு நானூறு பாடல்களைக் கொண்டதாலும், புறச் செய்திகளைப் பற்றிக் கூறுவதாலும் ‘புறநானூறு’ என்ற பெயர் பெற்றது. இந்நூலின் பாடல்கள் நான்கடி முதல் நாற்பது அடி வரையிலான ஆசிரியப்பாவால் அமைந்து உள்ளன. சங்ககால மன்னர்களைப் பற்றியும், மக்களின் வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் பற்றியும் புறநானூறு மூலம் அறிய முடிகிறது. ஜி. யு. போப் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

புறநானூற்றுப் பாடல்கள்

புறநானூற்றின் பாடல்களைப் பல்வேறு புலவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் பாடியுள்ளனர். இவற்றில் அதிகமான பாடல்களைப் பாடிய புலவர் ஔவையார் (33 பாடல்கள்). அவரை அடுத்து அதிக பாடலைப் பாடியவர் கபிலர் (28 பாடல்கள்)

புறநானூற்றுப் பெண்பாற் புலவர்கள்

புறநானூற்றுப் பாடல்களை அள்ளூர் நன்முல்லையார் தொடங்கி ஔவையார் வரை பல பெண்பாற் புலவர்கள் பாடியுள்ளனர்.

வரிசை எண் பாடல் எண் புலவர் திணை துறை பாடப்பட்டோர்
1 11 பேய்மகள்இளவெயினியார் பாடாண் பரிசில் கடா நிலை சேரமான் பாலை பாடிய பெருங்கருங்கோ
2 37 மாறோக்கத்து நப்பசலையார் வாகை அரச வாகை சோழன் குளமுற்றத்துத் துஞ்சியகிள்ளி வளவன்
3 39 மாறோக்கத்து நப்பசலையார் பாடாண் இயன்மொழி சோழன் குளமுற்றத் துஞ்சியகிள்ளி வளவன்
4 66 வெண்ணிக் குயத்தியார் வாகை அரசவாகை சோழன் கரிகாற் பெருவளத்தான்
5 83 நக்கண்ணையார் கைக்கிளை பழிச்சுதல் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி
6 84 நக்கண்ணையார் கைக்கிளை பழிச்சுதல் சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி
7 85 நக்கண்ணையார் கைக்கிளை பழிச்சுதல் சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி
8 86 காவற்பெண்டு வாகை ஏறாண்முல்லை அறிய இயலவில்லை
9 87 ஒளவையார் தும்பை தானைமறம் அதியமான் நெடுமான் அஞ்சி
10 88 ஔவையார் தும்பை தானைமறம் அதியமான் நெடுமான் அஞ்சி
11 89 ஒளவையார் தும்பை தானைமறம் அதியமான் நெடுமான் அஞ்சி
12 90 ஒளவையார் தும்பை தானைமறம் அதியமான் நெடுமான்அஞ்சி
13 91 ஒளவையார் பாடாண் வாழ்த்தியல் அதியமான் நெடுமான்அஞ்சி
14 92 ஔவையார் பாடாண் இயன்மொழி அதியமான் நெடுமான்அஞ்சி
15 93 ஒளவையார் வாகை அரசவாகை அதியமான் நெடுமான்அஞ்சி
16 94 ஒளவையார் வாகை அரசவாகை அதியமான் நெடுமான்அஞ்சி
17 95 ஒளவையார் பாடாண் வாண்மங்கலம் அதியமான் நெடுமான் அஞ்சி
18 96 ஒளவையார் பாடாண் இயன்மொழி அதியமான் நெடுமான் அஞ்சி
19 97 ஒளவையார் பாடாண் இயன்மொழி அதியமான் நெடுமான் அஞ்சி
20 98 ஒளவையார் வாகை அரசவாகை அதியமான் நெடுமான் அஞ்சி
21 99 ஔவையார் வாகை, வஞ்சியுமாம் அரசவாகை, கொற்றவள்ளையுமாம் அதியமான் நெடுமான்அஞ்சி
22 100 ஔவையார் வாகை, வஞ்சியுமாம் அரசவாகை, கொற்றவள்ளையுமாம் அதியமான் நெடுமான்அஞ்சி
23 101 ஔவையார் பாடாண் பரிசில்கடாநிலை அதியமான் நெடுமான் அஞ்சி
24 102 ஔவையார் பாடாண் இயன்மொழி அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொருட்டெழினி
25 103 ஔவையார் பாடாண் விறலியாற்றுப்படை அதியமான் நெடுமான் அஞ்சி
26 104 ஔவையார் வாகை அரசவாகை அதியமான் நெடுமான் அஞ்சி
27 112 பாரிமகளிர் பொதுவியல் கையறுநிலை அறிய இயலவில்லை
28 126 மாறோக்கத்து நப்பசலையார் பாடாண் பரிசிற்றுறை மலையமான் திருமுடிக்காரி
29 140 ஔவையார் பாடாண் பரிசில்விடை நாஞ்சில் வள்ளுவன்
30 157 குறமகள் இளவெயினி பாடாண் இயன்மொழி ஏறைக்கோள்
31 174 மாறோக்கத்து நப்பசலையார் வாகை அரசவாகை மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்
32 187 ஔவையார் பொதுவியல் பொருண் மொழிக்காஞ்சி அறிய இயலவில்லை
33 207 ஔவையார் பாடாண் பரிசிற்றுறை அதியமான் நெடுமான்
34 226 மாறோக்கத்து நப்பசலையார் பொதுவியல் கையறுநிலை சோழன் குளமுற்றத்துஞ்சிய கிள்ளிவளவன்
35 231 ஔவையார் பொதுவியல் கையறுநிலை அதியமான் நெடுமான் அஞ்சி
36 232 ஔவையார் பொதுவியல் கையறுநிலை அதியமான் நெடுமான் அஞ்சி
37 235 ஔவையார் பொதுவியல் கையறுநிலை அதியமான் நெடுமான் அஞ்சி
38 249 பெருங் கோப்பெண்டு பொதுவியல் ஆனந்தப்பையுள் அறிய இயலவில்லை
39 250 தாயங்கண்ணியார் பொதுவியல் தாபதநிலை அறிய இயலவில்லை
40 251 மாற்பித்தியார் வாகை தாபதவாகை அறிய இயலவில்லை
41 252 மாற்பித்தியார் வாகை தாபதவாகை அறிய இயலவில்லை
42 266 ஔவையார் வெட்சி உண்டாட்டு அறிய இயலவில்லை
43 271 வெறிபாடிய காமக்கண்ணியார் நொச்சி செருவிடைவீழ்தல் அறிய இயலவில்லை
44 277 பூங்கணுத்திரையார் தும்பை உவகைக்கலுழ்ச்சி அறிய இயலவில்லை
45 278 காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் தும்பை உவகைக்கலுழ்ச்சி அறிய இயலவில்லை
46 279 ஓக்கூர் மாசாத்தியார் வாகை மூதின் முல்லை அறிய இயலவில்லை
47 280 மாறோக்கத்து நப்பசலையார் பொதுவியல் ஆனந்தப்பையுள் அறிய இயலவில்லை
48 286 ஔவையார் கரந்தை வேத்தியல் அறிய இயலவில்லை
49 290 ஔவையார் கரந்தை குடிநிலையுரைத்தல் அறிய இயலவில்லை
50 295 ஔவையார் தும்பை உவகைகலுழ்ச்சி அறிய இயலவில்லை
51 290 வெள்ளை மாளர் வாகை ஏறாண்முல்லை அறிய இயலவில்லை
52 299 பொன்முடியார் நொச்சி குதிரைமறம் அறிய இயலவில்லை
53 302 வெறிபாடிய காமக்கண்ணியார் தும்பை குதிரைமறம் அறிய இயலவில்லை
54 306 அள்ளூர் நன்முல்லையார் வாகை மூதின் முல்லை அறிய இயலவில்லை
55 310 பொன்முடியார் தும்பை நூழிலாட்டு அறிய இயலவில்லை
56 311 ஔவையார் தும்பை பாண்பாட்டு அறிய இயலவில்லை
57 312 பொன்முடியார் தும்பை மூதின் முல்லை அறிய இயலவில்லை
58 312 ஔவையார் வாகை வல்லான் முல்லை அதியமான் நெடுமான் அஞ்சி
59 367 ஔவையார் பாடாண் வாழ்த்தியல் சேரமான் மாவண்கோ பாண்டியன் உக்கிராமப் பெருவழுதி சோழன் இராச சூயம் வேட்ட பெருநற் கிள்ளி
60 383 மாறோக்கத்து நப்பசலையார் பாடாண் கடைநிலை சோழன்குளமுற்றத் துஞ்சிய கிள்ளிவளவன்
61 390 ஔவையார் பாடாண் இயன்மொழி அதியமான் நெடுமான்அஞ்சி
62 392 ஔவையார் பாபாண் கடைநிலை பொருட்டெழினி
63 9 நெட்டிமையார் பாடாண் இயன்மொழி பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
64 12 நெட்டிமையார் பாடாண் இயன்மொழி பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
65 15 நெட்டிமையார் பாடாண் இயன்மொழி பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

உசாத்துணை


✅Finalised Page