under review

மதுரைக் கண்ணனார்

From Tamil Wiki
கண்ணனார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கண்ணனார் (பெயர் பட்டியல்)
மதுரை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மதுரை (பெயர் பட்டியல்)

மதுரைக் கண்ணனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரைக் கண்ணனார் சங்க காலப் புலவர். மதுரையில் பிறந்தார். கண்ணனார் என்ற இயற்பெயர் கொண்ட புலவர்கள் அதிகம் இருந்ததால் இவர் பிறந்த ஊர் முன்னொட்டாக வைக்கப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

மதுரைக் கண்ணனார் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் 107-வது பாடலாக உள்ளது. மருதத் திணைப் பாடல். நீண்ட நாள் கழித்து பொருள் வயின் பிரிந்த தலைவன் திரும்பி வந்தபின் அவனுடன் உறங்கிக் கொண்டிருந்த தலைவி அதிகாலை சேவல் எழுப்பியதால் அதனைப் பழிப்பதாக பாடல் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • உவமை: குவிந்த கொத்துக்களையுடைய செங்காந்தளின் பூவைப் போன்ற ஒன்றுசேர்ந்த சிவந்த கொண்டையையுடைய தன் கூட்டத்தோடு கூடி உள்ள சேவல்.

பாடல் நடை

  • குறுந்தொகை: 107 (திணை: மருதம்)
  • (பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி காமம் மிக்க கழிபடர் கிளவியால் கூறியது)

குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்!-
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி,
கடு நவைப் படீஇயரோ, நீயே-நெடு நீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே!

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Sep-2024, 19:59:20 IST