under review

பாரதிதாசன் பரம்பரை

From Tamil Wiki
பாரதிதாசன் பரம்பரை

பாரதிதாசன் பரம்பரை: கவிஞர் பாரதிதாசனின் வழிவந்தவர்கள் என தன்னை அறிவித்துக் கொண்டவ கவிஞர்களின் வரிசை. இவர்கள் பெரும்பாலும் நவீன மரபுக்கவிதைகளை எழுதினர். எளிய யாப்பில் சமூகசீர்திருத்தக் கவிதைகளையும் அரசியல் கவிதைகளையும் காதல் கவிதைகளையும் எழுதுவது இம்மரபு. இவர்கள் தமிழில் முக்கியமான இலக்கிய இயக்கமாகச் செயல்பட்டனர். இவர்கள் பேசிய அதே உள்ளடக்கத்துடன் புதுக்கவிதை வடிவில் எழுதும் வானம்பாடி கவிதை இயக்கம் தோன்றியதும் இவர்களின் இலக்கிய வீச்சு குறைந்து பின்னர் ஓய்ந்தது

பாரதிதாசன் பரம்பரை உருவாக்கம்

பாரதிதாசன் தன் கவிதைக்கொள்கையை நிலைநாட்டும் பொருட்டு குயில் என்னும் இதழை தொடங்கினார். தொடக்கத்தில் தீவிர அரசியல் பேசிய குயில் 1948-ல் அரசால் தடைசெய்யப்பட்டது. அதன்பின் தொடங்கியபோது இலக்கிய இதழாக மாறியது. அவ்விழின் வழியாக பாரதிதாசன் ஒரு கவிப்பரம்பரையை உருவாக்குவதன் தேவையை முன்வைத்தார்.

மக்களுக்கு முத்தமிழின் சிறப்பைப் பாடிக் காட்டுவது
கலகம் செய்யும் கட்சிகளில் தலையிடாமல் இருப்பது
வலிய வரும் சண்டையை வாவென வரவேற்பது
சாதி மதச் சிந்தனைகளை குயில் இதழ் தவிர்க்கும்
உலகெங்கும் வாழும் தமிழ்க்கவிஞர் பெருமக்களை
ஒன்று சேர்க்க உழைக்கும் கவிஞரிடையே உயர்ந்த
பண்பாட்டை வளர்க்க உதவும் தமிழ்க்கவிஞர் எழுதிய
கவிதைகளை அழகிய நூலாய் அச்சிட்டு வெளியிடுதல்
அவற்றை ஆங்கிலத்தில் பெயர்த்துத் தமிழ்நிலத்தின்
பெருமையை உலகெங்கும் பறைசாற்றுதல்

என அடிப்படையாக ஒரு கவிஞர் மரபு தோன்றுவதற்கான தேவையை முன்வைக்கும் பாரதிதாசன் அதன் வழியாக உருவாகவேண்டிய விளைவையும் வரையறை செய்கிறார்

தொன்று தொட்டப் பாட்டுச் சுவையில் மனம்பறி
கொடுத்து வாழ்ந்து வந்த தமிழர் தற்காலத்தில்
அச்சுவை மறந்து நிற்கும் நிலைமாற்றி அவர்களைத்
தமிழ்ச்சுவை மாந்தச் செய்தல்’’ (குயில் 15.4.1962- பக் 46-48)

உலகமெங்கும் இருந்து தமிழ்க் கவிஞர்களை ஓர் அமைப்பாக ஒருங்குதிரட்டவேண்டும் என்னும் எண்ணம் பாரதிதாசனுக்கு இருந்தது. அதற்காக அவர் தமிழ்க்கவிஞர் மன்றம் என்னும் அமைபபி 1961-ல் தொடங்கினார். பாரதிதாசன் பரம்பரை கவிஞர்கள் அந்த இயக்கம் வழியாக உருவானவர்கள்.

முதல் காலகட்டத்து கவிஞர்கள்

குயில் இதழின் முதல் காலக்கட்ட பாரதிதாசன் பரம்பரையினர் 1946 முதல் 1948 வரை குயிலில் எழுதிய தொடக்கக் கால கவிஞர்கள்

இரண்டாம் காலகட்டக் கவிஞர்கள்

1958-ம் ஆண்டு குயில் மீண்டும் வெளிவந்து 1961-ல் நின்றது. இக்காலகட்டத்து கவிஞர்கள் இரண்டாம் தலைமுறையினராகக் கருதப்படுகின்றனர்

மூன்றாம் காலகட்டக் கவிஞர்கள்

1962-க்குப்பின் எழுதியவர்கள் இந்த மரபில் இணைகிறார்கள்

நான்காம் காலகட்டக் கவிஞர்கள்

அறுபதுகளுக்குப்பின் பாரதிதாசன் கவிதாமண்டலம் என்னும் அமைப்பை பாரதிதாசனின் குயில், பொன்னி போன்ற பல இதழ்கள் பல திசைகளில் முன்னெடுத்தனர். இக்காலக்கட்டத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் பாரதிதாசன் மரபில் இணைந்திருந்தனர். இவ்வெண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்துவது என்பதே பாரதிதாசன் பரம்பரையின் நோக்கமாக இருந்தது. பொன்னி இதழ் பாரதிதாசன் பரம்பரை என்னும் தலைப்பில் பலகாலம் தொடர்ந்து கவிஞர்களை புகைப்படத்துடன் அறிமுகம் செய்துகொண்டிருந்தது. பொன்னி இதழில் வெளிவந்த பாரதிதாசன் பரம்பரை கவிஞர்களின் கவிதைளை கவிஞர் சுரதா தொகுத்தபோது கீழ்க்கண்டவர்களின் கவிதைகள் அதில் இருந்தன.

 1. மு. அண்ணாமலை
 2. நாரா. நாச்சியப்பன்
 3. சுரதா
 4. புத்தனேரி சுப்பிரமணியன்
 5. ராம. நாக. முத்தையா
 6. முடியரசன்
 7. ராம.வே. சேதுராமன்
 8. வாணிதாசன்
 9. சி. இராமசாமி
 10. சாமி. பழனியப்பன்
 11. அண. இராமநாதன்
 12. கோவை இளஞ்சேரன்
 13. சி. திருநாவுக்கரசு
 14. ச. சீத்தாராம்
 15. தெ. ஜெயராமன்
 16. நா. மாணிக்கவாசகம்
 17. தமிழரசன்
 18. கே.டி. தேவர்
 19. நா. கு. நமச்சிவாயன்
 20. இரா குழூ தலைவன்
 21. கு.திரவியம்
 22. வழித்துணைராமன்
 23. ரங்க துரைவேலன்
 24. வ. செ. குலோத்துங்கன்
 25. வெ. குருசாமி
 26. தன. சுந்தரராசன்
 27. டி.கே. கிருஷ்ணசாமி
 28. பெ. நாகப்பன்
 29. இரா. குழுஉத்தலைவன்
 30. பெரி சிவனடியான்
 31. எஸ். சிவப்பிரகாசம்
 32. சி.அ. சீனிவாசன்
 33. மு. ரங்கநாதன்
 34. ஜே. எஸ். பொன்னய்யா
 35. கதி. சுந்தரம்
 36. எம்.எஸ். மணி
 37. நா. கணேசன்
 38. தி. அரசுமணி
 39. ப. சண்முகசுந்தரம்
 40. க. பரமசிவன்
 41. மா. தேவராசன்
 42. மா. குருசாமி
 43. வி. முத்துசாமி
 44. ஷெரீப்
 45. சுப்பு ஆறுமுகம்
 46. சங்கீத பூஷணம் எஸ். எம். ராமநாதன்
 47. கி. மனோகரன்
 48. வே. சண்முகம்

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:10 IST